1. தேவ ஊழியர்கள் தங்கள் தேவ அழைத்தலைத் துறப் பதற்குப் பரிகாரமாக, 1 அருள்.
2. தேவ ஊழியர்கள் சாவான பாவ அந்தஸ்தில் வாழும் துரோகத்திற்குப் பரிகாரமாக, 1 அருள்.
3. தேவ ஊழியர்கள் தங்கள் விசுவாசத்தை இழந்து திருச்சபைக் கெதிராக செயல்படும் துரோகத்துக்குப் பரிகாரமாக, 1 அருள்.
III. மத்தியான உணவுக்கு முன் துக்க தேவ இரகசிய ஜெப மாலை சொல்லவும். மதிய வேளையில் பரிகார கருத்துள்ள பத்திரிகை, புத்தகங்களை வாசித்தும், தியானித்தும் மாதாவுடன் தங்கி ஜெபித்துக் கொண்டிருக்கலாம்.
IV. மாலையில் தேவ மாதாவின் மந்திரமாலை, மாதா பிரார்த்தனை சொல்லவும்.
V. இரவு உணவுக்குப் பின் குடும்பத்தில் (கூச்சப்படாமல்) மாதாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவும். பின் அமைதி யாக "மரியாயின் ஜெபக் கிரீடம்" சொல்லி தியானித்து மாதாவை மிகுதியான அன்புடன் நேசித்து, தாயை நினைத்த படியே உறங்கச் செல்லலாம்.
விசேஷ கவனத்திற்கு :
1. மாதா அப்போஸ்தலர்கள் உறுப்பினர்களாவது இப்பரிகார தினத்தை முதல் சனிக்கிழமை தோறும் அனுசரியுங்கள்.
2. பாத்திமா காட்சி நடைபெற்ற சிற்றாலயத்தில் பாத்திமா ஆயர், திருத்தல குரு ஆகியோரின் அனுமதியுடன் தேவ துரோகமாய் நடைபெற்ற விக்கிரக ஆராதனையான பசாசின் வழிபாட்டுப் பாவத்துக்குப் பரிகாரமாகவும், பாத்திமா மாதாவுக்கு ஆறுதலாகவும் இக்கருத்தைப் பரிகார தினத்தன்று அடிக்கடி நினைத்து மாதாவை நேசியுங்கள்.
3. முதல் சனி பாவசங்கீர்த்தனம், பரிகார நன்மை இவற்றை மறந்து விடக் கூடாது.