விபச்சாரப் பாவம் எல்லாக் காலங்களிலும் மிகக் கனமான குற்றமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதற்கு எதிராக நியமிக்கப்பட்ட தண்டனைகள் மிக மிகக் கடுமையாயிருந்தன.
உரோமையர்கள் யூதர்களைப் போலவே இக்குற்றத் தில் ஈடுபட்ட ஆணையும் பெண்ணையும் கல்லாலெறிந்து கொன்றனர். கிரேக்கர்கள் விபச்சாரக் குற்றத்தில் சம்பந்தப் பட்டவர்களின் பெற்றோரைக் கொல்வது என்பன போன்ற கொடுமையான தண்டனைகளைக் கொண்டு இந்தக் குற்றத் தைத் தண்டித்தனர்.
முகம்மதியர்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இடுப்பு வரை மண்ணில் புதைத்தபின், அவளை இரக்கமின்றி கல்லால் எறிந்து கொன்றனர்.
தெற்கு பிரிட்டன் மக்கள் பெண்ணை உயிரோடு எரித்து, அவளோடு பாவத்தில் உடந்தையாயிருந்தவனை அவளுடைய சாம்பலுக்கு மேலாகத் தூக்கிலிட்டுக் கொன்றனர். இன்னும் அதிகக் காட்டுமிராண்டித்தனமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்னும் அதிகக் கொடூரமான சித்திரவதைகளைப் பயன்படுத்தினார்கள். அவைகளை இங்கே குறிப்பிடுவது கூட வாசகரை நடுநடுங்கச் செய்து விடும்.
விபச்சாரக் குற்றத்தில் பெண்தான் முக்கியக் குற்றவாளியாக எப்போதும் கருதப்பட்டாள். குறிப்பாக பெண்ணுக்கு எதிராகத்தான் சட்டங்கள் மிகக் கடுமையாக இருந்தன.
பொதுவாக மனித குலத்தால் இந்தப் பாவம் எவ்வளவு பெரிதாகக் கருதப்பட்டு வந்தது என்பதற்கு அதைப் பற்றிய இந்தப் பொதுவான கருத்து ஒரு நிச்சயமான சான்றாக இருக்கிறது.
கிறீஸ்தவம்தான் முதன்முதலில் இந்தக் குற்றத்தில் ஆணையும் பெண்ணையும் சமமான அளவு நீதிக்கு உட்படுத்தியது.
விபச்சாரம் சந்தேகமின்றி, பழிவாங்கும்படி மோட்சத்தை நோக்கிக் கூக்குரலிடும் ஒரு குற்றம்தான் என்பதில் சந்தேகமில்லை. விபச்சாரம் மட்டுமல்ல, அசுத்ததனம், அதன் ஒவ்வொரு வடிவத்திலும், அதாவது சிந்தனை, வார்த்தை, செயல் என்பன போன்ற அதன் எல்லா வடிவங்களிலும், ஒரு மிக பயங்கரமான குற்றமாகவே இருக்கிறது.
இதுதான் இன்று உலகின் மிகப் பெரும் தண்டனை யாக இருக்கிறது.