1. ஆலயங்களில் உள்ளே நுழையும் முன் செருப்பை வெளியே கழட்ட வேண்டும்
2. நுழைந்ததும் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் ( Mobile switched off) செய்ய வேண்டும்.
3. பெண்கள் நாகரீகமான, கண்ணியமான ஆடைகள் அணிந்து ஆலயம் வர வேண்டும்.
4. மற்றவர்களின் ஒழுக்கத்தை கெடுக்கும் ஆடைகள் அணிந்து ஆலயம் வரவே கூடாது
5. பெண்கள் திருப்பலி முடியும் வரை தலைக்கு முக்காடிட வேண்டும்.
6. ஆண்களும், பெண்களும் திருப்பலி முடியும் வரை பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசவே கூடாது.
7. திருப்பலி பூசைக்கு முன்போ, நடுவிலோ நடனம் ஆட யார் அழைத்தாலும், தங்கள் குழந்தைகளை அதற்கு அனுமதிக்கவே கூடாது.
8. திவ்ய நற்கருணையை பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் வாங்க வேண்டும்.
9. நற்கருணை வாங்கிய பின்பு யார் பேசினாலும் அதைக்கவனிக்காமல் நாவில் வந்து, இதயத்தில் நுழைந்து ஆன்மாவில் தங்கும் இயேசுவோடு மட்டும்தான் ஒரு 10 நிமிடமாவது பேசவேண்டும். உறவாடவேண்டும்.
10. யார் கரவொலி எழுப்ப சொன்னாலும் கரவொலி எழுப்பக்கூடாது.
11. பாதி திருப்பலியில் நுழையவும் கூடாது; பாதி திருப்பலியில் வெளியில் செல்லவும் கூடாது.
12. சமாதானம் சொல்லும்போது வலப்பக்கமும், இடப்பக்கமும் இருப்பவரிடம் மட்டும் சொன்னால் போதும். ஆலயத்திற்கு வெளியே இருப்பவர் வரை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
13. திருமண அறிக்கை வாசித்தவுடன் மூச்சு விடாமல் வெடி வெடிக்கத்தேவையில்லை. ( திருப்பலி முடிந்தவுடன் வெடி வெடித்தால் யார் அடிக்கப்போகிறார்கள்)
14. பிரசங்கம் நடக்கும்போது இளைஞர்கள் வெளி நடப்பு செய்யக்கூடாது.
15. அன்று திருப்பலி சிறப்பிப்போர் திருப்பலியின் நடுவில் சூப்பர்வைசர் வேலை செய்யக்கூடாது.
16. வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலியில் பங்கேற்க வேண்டும்.
17. திருப்பலி என்ற தெய்வீக பலியில் பங்கேற்கும் கத்தொலிக்க மக்கள் பக்தியுடன் பங்கேற்றாலே தீமைகள் குறைந்துவிடும்
18. முகத்தாட்சண்யம் பார்க்கவே கூடாது. தப்பு என்று தெறிந்தும் அது நடக்க அதை அனுமதிக்க்கூடாது. முடிந்தவரையில் முறையாக மென்மையாக பேசி அதை நிறுத்தப்பாடுபடவேண்டும்.
19. அவசங்கைகள் குறைய குறைய ஜெபமாலைகள் அதிகமாக ஜெபித்திடல் வேண்டும்
20.முக்கியமாக குடும்ப ஜெபமாலை ( வீட்டில் எத்தனைைபேர் இருக்கிறீர்களோ அவர்கள்) 53 மணி ஜெபித்தே ஆகவேண்டும்.
இதுவே நம் கத்தோலிக்க திருச்சபையின் பெருமை!