இந்த நுாற்றாண்டின் துவக்கத்தில், தென் அமெரிக்கக் குருவானவரான சங்.மாத்தியோ சுவாமி (Mateo) அகில உலகம் தழுவிய ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அது பெருமளவு வெற்றியும் பெற்றது. அவர், அர்ச். 10-ம் பத்திநாதர் பாப்பரசரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதும் அல்லாமல், இந்த இயக்கத்திற்காக அவரது வாழ்வைச் செலவிட வேண்டுமென்று, பாப்பரசரால் கேட்டுக் கொள்ளவும்பட்டார்.
முன்பு, பரலேமோனியலில் அர்ச்.மார்க்ரீத் மரியம்மாளுக்குக் காட்சி அளித்த நமது ஆண்டவர், “எனது திருஇருதயத்தின் சாயலை ஸ்தாபித்து சங்கை செய்யும் ஒவ்வொரு இல்லத்தையும் நான் ஆசீர்வதிப்பேன்" என்று உறுதியளித்தார். சங். மாத்தியோ சுவாமியின் இயக்கம், உலகம் முழுவதிலும் சேசு கிறீஸ்துவின் சமூக ஆட்சி (ராஜரீகம்) மீண்டும் நிறுவப் படுவதைக் குறிக்கோளாகக் கொண்டு துவக்கப்பட்டது.
சமுதாயத்தைக் கிறீஸ்தவ மயமாக்க வேண்டுமென்றால், முதலில் ஒவ்வொருக் குடும்பத்தையும் கிறிஸ்தவமயமாக்க வேண்டுமென்பதை அறிந்திருந்த இந்த ஆன்மதாகம் மிகுந்த குருவானவர் சேசுவின் திருஇருதயத்திற்கு ஆன்மாக்களைக் கவர்ந்து கொண்டுவர, இல்லங்களில் அன்பின் அரசரின் அரசாட்சியை ஸ்தாபிக்க முயன்றார்.
இந்த அழகியக் கத்தோலிக்கப் பக்தி முயற்சியைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதோடு உங்களில் அநேக இல்லங்களில் சேசுவின் திருஇருதயத்தின் அரசாட்சியை ஸ்தாபித்து இருப்பீர்கள். நல்லது! இங்கே நாம் பின்வரும் கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்வதாகத் தோன்றுகிறது.
எப்போது ஒரு வீட்டில் கத்தோலிக்கச் சூழ்நிலை ஏற்படும்? மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமானவரான நமது ஆண்டவரின் அரசாட்சியின் கீழ் அவ்வீட்டின் அனைத்தும் உட்படும் போது. நான் அனைத்தும் என்று கூறுவது, நமது ஜெபதவங்களை மட்டுமல்ல, மாறாக, நமது பொழுது போக்குகள், நமது உணவுகள், நமது உடையணிகள், நமது பேச்சுக்கள் போன்றவற்றையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன்.
சேசுவின் திருஇருதய “அரசாட்சியை ஸ்தாபிப்பது" என்பது வெறுமனே ஒரு படத்தை மந்திரிப்பதோ அல்லது ஒரு அர்ப்பண ஜெபத்தை வாசிப்பதோ அல்ல. மாறாக, அது சேசுவின் திருஇருதயத்திற்காக அன்பின் வாழ்வாகிய ஒரு புதுவாழ்வுக்குத் துவக்கமாகவே இருக்கிறது.
சேசுவின் திருஇருதய “அரசாட்சியை ஸ்தாபிப்பது" என்பது வெறுமனே ஒரு படத்தை மந்திரிப்பதோ அல்லது ஒரு அர்ப்பண ஜெபத்தை வாசிப்பதோ அல்ல. மாறாக, அது சேசுவின் திருஇருதயத்திற்காக அன்பின் வாழ்வாகிய ஒரு புதுவாழ்வுக்குத் துவக்கமாகவே இருக்கிறது. சேசுகிறீஸ்து அந்தக் குடும்பத்தின் அரசர். அவ்வாறே அவர் சங்கை செய்யப்பட வேண்டும்.
இல்லங்களில் சேசுவின் திருஇருதய சமூக அரசாட்சி - கத்தோலிக்கச் சூழ் நிலை அதன் உறுப்பினர்களுடைய அர்ச்சிஷ்டத்தனம் - அவர்களது நித்திய இரட்சணியம் - அதனால் மகா பரிசுத்தத் தமத் திரித்துவத் தின் மகிமை ஆகிய இவை அனைத்துமே ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கிறது. அது எப்படியென்பதைப் பார்ப்போம்.
கிறிஸ்துநாதரின ஞான சரீரமாகிய திருச்சபையின் சிரசான சேசுநாதர், சர்வேசுவரனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார். மடாதிபதியான மார்மியான் சுவாமியின் அழகிய புத்தகங்கள் விளக்குவது போல, சேசுகிறிஸ்து வழியாக நாம் சர்வேசுவரனின் சுவீகார மக்களாக இருக்கிறோம்;
அர்ச். சின்னப்பர்: “நீங்கள் மிகவும் பிரியமானப் பிள்ளைகளைப் போல், சர்வேசுவரனைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து கிறீஸ்துநாதர்... நம்மை சிநேகிப்பது போல் நீங்களும் சிநேகத்தில் நடந்து வருவீர்களாக... முன்பு நீங்கள் இருளாயிருந்தீர்கள். இப்பொழுதோ கர்த்தருக்குள் ஒளியாயிருக்கிறீர்கள். ஒளியின் புத்திரராக நடந்து கொள்ளுங்கள். ஒளியின் கனியோ சகலவித நன்மைத்தனத்திலும், நீதியிலும், சத்தியத்திலும் விளங்குகிறது" (எபேசி. 5:1-2,8-9) என்று கூறுகிறார். நம்மைச் சுற்றிலுமுள்ள கடவுளற்ற நாத்தீக உலகம் ஒரு பயங்கர இருளில் மூழ்கியுள்ளது.
கத்தோலிக்கக் குடும்பங்கள், உண்மையானக் கிறீஸ்தவ அன்பு அனுசரிக்கப்படுவதின் மூலம் சேசுவின் திருஇருதயத்துக்கு ஆறுதலும், இளைப்பாற்றியும் தரும் ஒளிரும் சிறிய பாலைவனச்சோலைகளாக இருக்க வேண் டும். இதிலிருந்து என்ன தெரிகிறது? கத்தோலிக்கச் சூழ்நிலையானது அன்பின் அடையாளமாக இருக்கிறது. மரியா வான் திராப் (Maria Von Trap) என்ற பக்தியுள்ள பெண்மணி தான் எழுதிய தன் குடும்பத்தைப் பற்றிய புத்தகத்தின் முன்னுரையில்: “குடும்பத்தின் நினைவுகளை எழுதும் போது, அது என்னை ஆச்சரியப்படுத்துகிறது, வியக்கச் செய்கிறது, குறுகிய வாழ் நாளில் உண்மை அன்பு எப்படி விளங்குகிறது என்பதைக் காணும் போது அது, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
முதலில் சர்வேசுவரனின் அன்பு. அவரது குழந்தைகளான நம்மீது சர்வேசுவரன் கொண்ட அன்பு துணை நின்று பாதுகாக்கும் ஒரு தந்தையின் அன்பு. ஒவ்வொரு அன்பும் உண்மையான திரும்பி நேசிக்கும் அன்பாக இருக்கிறது" என்று குறிப்பிடுகிறாள். கத்தோலிக்க இல்லம் ஒரு சுபாவத்துக்கு மேலான, சிநேகத்தால் ஆட்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த நவீனக் காலங்களில் உண்மையான அன்பு அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், உண்மையான அன்பு எது என்பதை முதலில் தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
கத்தோலிக்க இல்லம்!
Posted by
Christopher