அர்ச். தாமஸ் அக்வினாஸ் " நேசிப்பது என்பது நேசத்துக்குரியவரின் நன்மையை ஆசிப்பது” என்று நேசத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார். ஒரு மனிதனுக்கு உண்மையாகவே நன்மையாக இருப்பது, எப்போதும் அந்த மனிதன் விரும்புவது போல இருப்பதில்லை , என்று பொருள் கூறுகிறார். இந்த உண்மையை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஒரு தாய் தன் நோயுற்றக் குழந்தை பூரண குணமடைவதற்காக சில மருந்துகளைக் கொடுக்கிறாள். அந்த மருந்து மிகவும் கசப்பாக இருப்பதால் அக்குழந்தை அதனை விரும்புவதில்லை. தாய் குழந்தையை நேசிப்பதால், நோய் குணமாக வேண்டும் என்ற ஆவல் கொண்டு, குழந்தையைப் பலவந்தப்படுத்தி அந்த கசப்பான மருந்தைக் குடிக்கச் செய்கிறாள். இதே போன்ற தவறு தலான கண் ணோட்டம் தான் குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் நிலவுகிறது.
அநேக பெற்றோர் அன்பு என்பதைப் பற்றி ஒரு தவறானக் கருத்தைக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் பேரில் பாசம் என்ற பலவீனத்தின் காரணமாக அவர்களது தவறுகளைத் திருத்துவதில்லை. அவர்களது வேண்டும் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள். இது மகா பெரிய தவறு! ஏனெனில் இத்தகையச் செயல் பிள்ளைகளை, சுயநலமுள்ள - வீட்டில் ஒவ்வொரு காரியத்தையும் தங்களது விருப்பப்படியே சாதிக்கும் சிறிய மூர்க்கர்களாக மாற்றி விடுகிறது. உண்மை அன்பு உறுதியானது. பெற்றோர்கள், ஜென் மப்பாவத்தால் காயப்பட்ட சுபாவ முடையவர்களையே குழந் தைகளாக கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
ஆகையால் அனைத்துப் பிள்ளைகளும் சோம்பல், கீழ் ப் படியாமை, அன் பில் லாமை போன்ற தீயசார்புடையவர்களே. இவைகள் அந்த இளம் பிராயத்திலேயே உறுதியாகக் கட்டுப்படுத்தப்பட இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை கெடுக்கிறீர்கள். சில பெற்றோர் தங்களது குழந்தைகள் நவநாகரீக பாணிகளிலும், நவீன கேளிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கும் கொடுமையைக் காண்கிறோம். வேறு சிலப் பெற்றோர்களோ தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருத்த அஞ்சுகிறார்கள். இதனால் பிள்ளைகள் இழுக்கும், இழுப் புக் கெல்லாம் இடங்கொடுக்கிறார்கள். இந்த வகையான இல்லங்களில், பிள்ளைகளே அதிகாரிகளாக இருக்கிறார்கள்! தாங்கள் விரும்பும் எதையும் செய்கிறார்கள். எந்தவிதமானக் கட்டுப்பாடும் இல்லாமல் வீட்டுப்பொருட்களை தங்கள் விருப்பம் போல் உபயோகிக்கிறார்கள்.
தங்களது படுக்கை அறையை சுத்தமாக வைத்திருக்கவோ அல்லது தங்கள் தாய் தந்தையர்கோ வீட்டுக்காரியங்களில் உதவுவதில்லை. சாப்பாட்டு மேசையில் ஒழுங்கு, நாகரீகம் என்பது இல்லை . பெரியவர்களிடம் மரியாதையோடு பழகுவதில்லை . இப்படியாக எந்த விதமான சுயக்கட்டுப்பாடு இல்லாமல், பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய மோசமான செயல் என்றே நான் நினைக்கிறேன. தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்தில் வளர்க்காத பெற்றோர்கள் அவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டிருக்க வில்லை .
குடும்பச்செபம் இப்பொழுது மற்றுமொருப் காரியத்தைப் பற்றி பார்ப்போம்: அது குடும்பச்செபம்! ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஜெபிக்கும் கடன் உண்டு. சர்வேசுவரனை ஆராதிக்கவும், அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்யவும், நம்முடையப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், நமது தேவைகளுக்கான வரப்பிரசாதங்களை மன்றாடவும் அவரை நோக்கி நமது ஆன்மாவை உயர்த்த வேண்டும். இதுவே ஜெபம்! இவையே ஒரு ஜெபத்தின் நான்கு அம்சங்களாகும். சர்வேசுவரன் நம்மை உண்டாக்கியவர். அவர் நமது சிருஷ்டிகர். எனவே நாம் ஜெபத்தின் வழியாக அவரது அரசுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதோடு சர்வேசுவரனே குடும்பத்தை உண்டாக்கியுள்ளார்.
ஆகையால் குடும்பம், அதனுடைய சொந்தக் கூரையின் கீழ் வெளியரங்கமாக கடவுளிடம் ஜெபிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட ஜெபங்களை தங்களது அறைகளில் ஜெபிக்கும் ஒரு குடும்பத்தை கற்பனை செய்து கொள்வோம். அது நல்லது தான்! ஆனால அது போதாது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், ஒரே சமூகமாகக் கூடி ஜெபிக்க வேண்டும்.
கத்தோலிக்கக் கணவர்களுக்கும், கத். தந்தைகளுக்கும் இதில் அதிசிறந்த உதாரணமாக திகழ்பவர் அர்ச். தாமஸ் மோர். தனது சட்டப்படியான மனைவி காத்தரீனை, விவாகரத்து செய்யும் இங்கிலாந்து அரசனின் முடிவால் ஏற்பட்ட கலாபனையினால் அவர் மிகவும் துன் புற்ற போதிலும், தனது வீட்டில் குடும்பச்செபத்திற்கு அனைவரையும் அழைத்தார். திருச்சபையின் தலைவர் அரசனே என்பதை அங்கீகரிக்க தாம் மறுத்து விட்டதை புரிந்துகொள்ள முடியாத தமது மனைவி ஆலிஸ் அம்மையாரால் அவருக்கு தலைவலி இருந்தது. ஆனாலும் அவர் குடும்பச்செபத்தை விட்டு விட வில்லை .
அவர் தமது அன்புக் குரிய குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஜெபிக்காதிருந்தால், சந்தேகமற, அவர் ஒரு வேதசாட்சியாக மரிக்கத் தேவையான தைரியத்தையும் திடத்தையும் பெற்றிருக்க மாட்டார். நமதாண்டவரும்: “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் எனது பெயரால் கூடியிருப்பார்களோ; அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன்” என்று கூறினார். பெற்றோர்களே தினமும் உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து ஜெபியுங்கள், ஜெபமாலை சொல்லுங்கள். அதுவே பாத்திமாவில் நமதன்னை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்ட விண்ணப்பங்களில் ஒன்று! நமது நல்ல அன்னைக்கும் கீழ்ப்படிவோமாக.