இயேசுகிறிஸ்து ஒரே ஒரு திருச்சபையை ஏற்படுத்தினார். இதை இராயப்பர் (பேதுரு) மீதே ஏற்படுத்தினார்.
இயேசு சிலுவையடியில் தன் தாயை ஒப்படைத்த போது யோவானிடம் ஒப்படைத்தார் என்று சொல்லாமல், அன்புச் சீடனிடம் ஒப்படைத்தார் என்று பைபிள் சொல்கிறது (யோவான் 19:26-27).
ஏனெனில் தனி ஒருவருக்கு அல்ல, மாறாக இயேசுவின் அன்புச் சீடனாயிருக்க விரும்பும் எவரும் அன்னையைத் தன் தாயாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால்!
ஆனால் அதே சமயம் திருச்சபை கட்டப்படும் பகுதியில் (மத்.16:17) எல்லோர் மீதும் அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட மனிதர் மீது (சீமோன்) திருச்சபை கட்டப்படுகிறது. ஏனெனில் மற்றவர்கள் தலைமை மீது உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக!
எனவே திருச்சபையின் தலைவர் ஒருவரே! அவர் சீமோன் பேதுரு இராயப்பர்) வழிவந்த பாப்பரசர் மட்டுமே! இதையே லூக். 22:31-32 மற்றும் அருளப்பர் (யோவான்) 21:15-17 உறுதிப்படுத்துகின்றன.
மாபெரும் மறைபரப்புப்பணி செய்த புனித பவுல் (சின்னப்பர்) கூட, தனித்துப் பணி செய்தால் அது வீணாகி விடும் என்று கடவுளால் உணர்த்தப்பட்டு, ஒரே திருச்சபைக்குத் தன்னை உட்படுத்தித் தன் செயல்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறுகிறார் (கலா 2:1-2) மற்றும் (1 கொரி 16:3).
மேலும் புனித பவுலால் தீர்க்க முடியாத பிரச்சினை இராயப்பரால் தீர்க்கப்படுகிறது. அப். பணி 15:1-12 , அதாவது முதல் திருச்சங்கம் முதல் பாப்பரசர் தலைமையில் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
தவறுகளைக் கண்டிக்கலாம், திருத்தலாம். ஆனால் திருச்சபை ஒன்றே! அதன் ஒற்றுமையைக் கலைக்கலாகாது. பிரிவினைகள் கூடாது.
பின்வரும் வரலாறு உண்மைகளை உணர்த்தும் (1 யோவான் 2:19).
லூத்தரன் சபையை (Lutheran) நிறுவியவர் மார்ட்டின் லூத்தர். இவர் கத்தோலிக்கத் திருச் சபையிலிருந்து விலக்கப்பட்ட ஒரு துறவி. 1517- ஆம் ஆண்டு லூத்தரன் என்ற புரொட்டஸ்டாண்ட் சபையை ஏற்படுத்தினார்.
ஆங்கிலிக்கன் (Church of England) பையை நிறுவியவர், எட்டாம் ஹென்றி (Henry VIII) என்ற அரசன். அப்போதிருந்த போப் இவருக்கு விவாகரத்து உரிமையை அளிக்க மறுத்ததின் காரணமாக 1534 - இல் ஆங்கிலிக்கன் சபையை நிறுவினார்.
பிரிஸ்பிற்றேரியன் (Presbyterian) சபையை ஸ்காட்லாந்து நாட்டில், ஜான்நாக்ஸ் என்பவர் 1560-ல் ஏற்படுத்தினார். புரொட்டஸ்டாண்ட் எபிஸ்கோப்பலியன் (Protestant EpisCoplian) பையை ஆங்கிலிக்கன் சபையிலிருந்து விலகிய சாமுவேல் சிபரி என்பவர் 17-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் உருவாக்கினார்.
காங்கிரகேஷன் (Congregation) சபை ராபர்ட் பிரவுண் என்பவரால் 1582 இல் ஹாலந்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
மெதடிஸ்ட சபை (Methodist), இங்கிலாந்து நாட்டில் 1774இல் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லி என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
யுனிட்டேரியன் (Unitarian) சபை 1774இல் தியேஸ்பிலஸ்லிண்ட்லி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
மார்மோன் கடைசி காலப் பரிசுத்தவான்கள் (Latter Day Saints) சபை ஜோசப் ஸ்மித் என்பவரால் பல்மைரா என்ற நகரில் 1829இல் ஆரம்பிக்கப்பட்டது.
பாப்டிஸ்ட் (Baptist) பை ஆம்ஸ்ட ர்டாம் நகரில், ஜான்ஸ்மித் என்பவரால் 1606இல் உண்டாக்கப்பட்டது.
டச் ரிபார்ம்ட் (Dutch Reformed) சபை மைக்கேலிஸ் ஜோன்ஸ் என்பவரால் நியூயார்க் நகரில் 1628இல் உருவானது.
இரட்சணிய சேனை (Salvation Army) சபை வில்லியம் பூத் என்பவரால் லண்டன் நகரில் 1865இல் உருவாக்கப்பட்டது.
கிறிஸ்டியன்ஸ யன்ட்டிஸ்ட் (Christian Scientist) சபை 1879 இல் மேரி பேக்கர் எடி என்ற பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்டது.
நஸ்ரேன் சபை, அசெம்ளி ஆப் காட், பெந்த கோஸ்த் சபை, ஹோலின்ஸ் சபை, ஜெகோவா விட்னஸ் சபை போன்ற சபைகள் அனைத்தும் கடந்த நூறு வருடங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டவைகளே.
ஆனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) கடவுளின் திருக்குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினால் 33 - ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வரை எவ்வித மாற்றமின்றித் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.