நீங்காத நித்திய இரக்கமுள்ள கடவுள் தம் அன்பின் சிருஷ்டிகளாகிய மனிதர்களைத் தண்டித்துத் திருத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
முதலில் ஒரு தடவை வெள்ளப் பெருக்கால் உலகத்தை அதன் மிஞ்சிய பாவங்களுக்காக அழித்துத் தண்டித்தார். அது நோவேயின் காலம் (ஆதி. 7-ம் அதிகாரம்).
அதன்பின் ஆபிரகாமின் காலத்தில் சோதோம் கொமோறாப் பட்டணங்களை அவற்றின் ஒருபாற் சேர்க்கையென்னும் இயல்புக்கெதிரான பாவ மிகுதிக்காக நெருப்பால் சுட்டெரித்தார் (ஆதி. 19-ம் அதிகாரம்).
அக்காலங்களில் மனிதன் விஞ்ஞானம் எனும் அஞ்ஞானத்தால் மமதை கொண்டு ஆண்டவரை நேருக்கு நேர் இப்படி எதிர்த்து நிற்கவில்லை. இந்த அளவிற்குப் பாவங்களின் வகையும் தொகையும் அளவைத் தாண்டவில்லை.
ஜூலியா வெளிப்படுத்தலில் ஆண்டவரே கூறுகிறபடி: "வெள்ளப் பெருக்கின் நாட்களிலும், சோதோம் கொமோறா நாட்களிலும் நான் அழித்த ஜனங்கள் இன்று இருக்கிற ஜனங்களைப் போல் அவ்வளவு பாவம் நிரம்பியவர்களா யிருக்கவில்லை '' - (Jesus Calls us-1 - p.255).