கத்தோலிக்கர்களுக்கும் பிரிவினை சபையினருக்கும் ஞானஸ்நானத்தைக் குறித்தமட்டில் இருக்கும் இந்த வேறுபாடு ஞானஸ்நானத்தைப் பற்றிய இந்த இரு சபைகளின் புரிதலில் உள்ளது . ஞானஸ்நானம் நம்மை மாற்றுகிறது என்பதை ஆரம்பம் முதலே நாம் அறிவோம் .இறைவன் நமது வாழ்வில் ஞானஸ்நானம் மூலம் செயல்படுகிறார் .பிரிவினை சகோதரர் , அருட்சாதனம் நம்மைப் பாதிக்கும் என்பதையே மறுக்கின்றனர் . சபைகளைப் பொறுத்து ஞானஸ்நானத்தைப் பற்றிய புரிதலில் கீழ்காணும் உண்மைக்கு புறம்பாக உள்ளனர் .
அவையாவன
1. ஞானஸ்நானம் நம்மை விண்ணகம் இட்டுச் செல்கிறது (ccc1257, யோவான் 3:3-7)
2. ஞானஸ்நானம் நமது பாவங்களை மன்னிக்கிறது (ccc1263)
a .ஜென்ம பாவத்தில் இருந்து விடுதலை
b. அற்பப் பாவத்தில் இருந்து விடுதலை
c. பாவத்திற்கான தண்டனையில் இருந்து விடுதலை
3.ஞானஸ்நானம் நம்மை ஆவியிலே புதுப்படைப்பாக மாற்றுகிறது (CCC 1265-1266)
a. ஞானஸ்நானம் மூலம் இறைவனின் பிள்ளைகளாக மாறுகிறோம்
b.புனிதப்படுத்தும் கிருபையைப் பெற்றுக் கொள்கிறோம் (இறைவாழ்வில் பங்கு பெறுகிறோம் )
1.ஆவியின் கனிகளைப் பெற்றுக் கொள்கிறோம்
2. வேதாந்த நற்குணங்களான விசுவாசம் நம்பிக்கை அன்பு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்கிறோம்
3. அற ஒழுக்கங்களான நீதி , விவேகம் , நடுநிலைமை , பொறுமை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்கிறோம்
4. கிறிஸ்துவின் சகோதரர்களாக உரிமைப் பேற்றில் பங்கு பெறுகிறோம்
5. பரிசுத்த ஆவியின் ஆலயங்கள் ஆகிறோம்
4. ஞானஸ்நானம் மூலம் கிறிஸ்துவின் மறையுடலின் அங்கங்கள் ஆகிறோம்
a. திருச்சபை அங்கத்தினரோடு இணைதல் (CCC 1267)
b. கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவரோடு இணைதல் (CCC 1271)
c. கிறிஸ்துவின் குருத்துவ இறைவாக்கின அரசப் பணியில் பங்கு பெறல் (1268-1270)
1. குருத்துவ - திருப்பலியோடு இணைந்து நாம் இறைவனுக்கு தியாகப்பலி செலுத்துதல்
2. இறைவாக்கின - நாம் விசுவாசத்தைப் பரப்ப முயலுதல்
3. அரச - நாம் இறைக்குடும்பத்தின் அங்கத்தினர் என்ற பெருமை
4. பிறரன்புப் பணி
d. திருச்சபையின் உறுப்பினர்
1. திருச்சபைத் தலைவர்களை மதிக்கிறோம்
2. பிற திருவருட்சாதனங்களைப் பெற அனுமதிக்கப்படுகிறோம்
5. ஞானஸ்நானம் மூலம் நமது ஆன்மாவை நீக்க இயலா முத்திரை கொண்டு அடையாளப்படுத்துகிறோம் (CCC 1272)
a. அழியா முத்திரை என்கிறோம்
b. கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் நாம் என்ற முத்திரை பதிக்கப்படுகிறது
c. எந்தப் பாவமும் இந்த முத்திரையை அழிக்க இயலாது ,நித்தியத்தை பரலோகத்தில்செலவிடும்படி பெற்ற இந்தமுத்திரைக்கு உண்மையுள்ளவர்களாக வாழ அழைக்கப் பட்டுள்ளோம் (CCC 1274)
d. இது ஒரே ஒரு முறை தான் தரப்படுகிறது இதைமாற்றவோ மீண்டும்ஒரு முறைபெறவோ முடியாது (கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து போய் விட்டு,மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தாலும் மீண்டும் ஒருமுறை ஞானஸ்நானம் பெற தேவை இல்லை )
6. ஞானஸ்நானம், பக்தி ஆராதனைக்கென நம்மைத் தூய்மைப்படுத்துகிறது (CCC 1273)
இத்தனை அரும் பண்புகளைக் கொண்ட இந்த திருவருட்சாதனத்தின் அருமையை திருச்சபை உணர்ந்திருக்கிறது . எனவே சிறு வயதிலேயே ஞானஸ்நானம் பெற அழைக்கிறது .
இந்தப் புரிதல் பிரிவினை சபைகளில் இல்லாததால் தான் ஞானஸ்நான அருட்சாதனத்தை பால வயதில் பெற அவர்கள் விழைவதில்லை . அது மட்டும் அல்லாது , அந்தச் சபைகளைப் பொறுத்த மட்டில் ஞானஸ்நானம் என்பது இறைவனை ஏற்றுக் கொண்டதின் வெளிப்புற , வெளியரங்கமான அடையாளம் என்று கருதுகின்றனர் .ஆனால் நமது கத்தோலிக்கத் திருச்சபையைப் பொறுத்த மட்டில் இறைவன் தான் நம்மை ஞானஸ்நானத்தின் மூலம் தமது பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார் என்று விசுவசிக்கிறோம்.
மட்டுமல்லாது , விவிலியத்தில் பால ஞானஸ்நானம் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகின்றனர் . ஆனால் "அவனும் அவனது வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றனர் " என்று வேதத்தில் வாசிக்கிறோம் . எனவே குழந்தை முதல் பெரியவர் வரை வெவ்வேறு வயதினரும் இதில் அடக்கம் என்று தெளிவாகிறது .ஞானஸ்நானம் என்பது பழைய ஏற்பாட்டு காலத்தில் நடந்த விருத்தசேதனம் என்பதின் முழுமை . விருத்தசேதனம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது . பழைய ஏற்பாட்டின் நடந்த விருத்தசேதனம் புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்தில் முழுமை அடைகிறது . திருச்சபையின் பாரம்பரியமாக பால ஞானஸ்நானம் இரண்டாம் நூற்றாண்டு முதலே நடந்த ஆதாரங்கள் உள்ளன . எனினும் பிரிவினை சபையினர் தன்னிலை விளக்கமாக பால ஞானஸ்நானத்தை மறுக்கின்றனர்
மறு ஞானஸ்நானம் என்பது என்ன ?
பல கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் ஞானஸ்நானம் என்பது இறைவனுக்காக அவர்கள் செய்வது என்பதினால் , மீண்டும் மீண்டும் ஞானஸ்நானம் பெற அவர்கள் தயங்குவதில்லை . பாவம் செய்து இறைவனின் பரிசுத்தத்தை இழந்தாலும் , மீண்டும் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்தத்தில் இணைய அவர்கள் விரும்புகின்றனர்
திருச்சபையினர் ஞானஸ்நானம் பெற்ற பின் பாவம் செய்து மனம் வருந்தி மீண்டும் பரிசுத்தத்தில் இணைய , திருச்சபை ஒப்புரவு அருட்சாதனத்தை அருள்கிறது . நல்ல பாவசங்கீர்த்தனம் பெற்று , திவ்விய நற்கருணை பெற்றுக் கொண்டு இறைவனில் இணைய அழைக்கிறது .
இவ்விரண்டு அருட்சாதனங்களும் பிரிவினை சபைகளில் இல்லாததால் அவர்கள் மறு ஞானஸ்நானம் பெற விழைகின்றனர்
ஒரு முறை திருமுழுக்கு பெற்றாலே அழியா முத்திரை பெறும் கோட்பாடு பிரிவினை சபைகளில் இல்லை . எனவே அவர்கள் மீண்டும் மீண்டும் திருமுழுக்கு பெறுவது அவசியமாகிறது .எனவே தான் நீசேன் விசுவாச அறிக்கை சொல்லுகிறது "பாவ மன்னிப்பிற்கான ஒரே ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன் " என்று .இந்த முத்திரையை ஒரே ஒரு முறை பெற்றாலே போதும் , ஒரே ஒரு முறை மட்டும் தான் பெற முடியும் .மற்ற திருமுழுக்கு எல்லாம் என்னை' நனைக்க' மட்டுமே முடியும்
உறுதிபூசுதல் என்பது என்ன ?
பிரிவினையினர் புரிந்து கொண்ட திருமுழுக்கிலிருந்து உறுதிபூசுதல் முற்றிலும் மாறுபட்டது
உறுதிபூசுதல் என்பது கத்தோலிக்கர் என்பதை உறுதிப்படுத்தும் பொது நிகழ்வு அல்ல . கிறிஸ்துவுக்குள் ஒருவன் தன வாழ்வை உறுதிப்படுத்துவதும் அல்ல இறைவன் நமக்கு அருளிய திருமுழுக்கின் கிருபைகளை உறுதிப்படுத்துவதே உறுதிபூசுதல் .இளவயதிலேயே பெற்றுக் கொண்ட கிருபைகளை உறுதிப்படுத்திய கிருபைகளாக்கிக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் .
அருட்சாதனங்கள் உண்மையிலேயே நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.