தண்டிக்கப்படாமல் உலகம் திருந்தாததற்கு, இவ்வுலக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற நான்கு தீமையான தப்பறைக் கொள்கைகளே முக்கியக் காரணம்.
அவை:
Modernism (= நவீனம்)
Communism (கம்யூனிசம்)
Liberalism (= கட்டுப்பாடின்மை , சுதந்திரம் )
Satanism (சாத்தான் மதம்) ஆகியவையே.
Modernism என்னும் நவீனம் : பழமை என்பது கூடாது - பாரம்பரியம் ஆகாது - எல்லாம் புதிதாக வேண்டும் - எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். இதுதான் நவீனம்.
இதனால் பாவ புண்ணியம் இல்லை - மோட்ச நரகம் இல்லை - சரி தவறு இல்லை என்ற வாழ்க்கை முறை வந்துள்ளது.
Communism என்னும் நடைமுறை நாஸ்தீகம் : கடவுள் இல்லை - இருந்தாலும் அவர் தேவையில்லை - உலகம் இருக்கிறது. விஞ்ஞானம் அதை வளர்க்கிறது - மனிதன் உலகை ஆள்கிறான் - மனிதனே கடவுள்!! கடவுளை அங்கீகரியாத ஆங்காரம் இது.
Liberalism என்னும் கட்டுப்பாடின்மை : மனிதனுக்கு சுதந்திரம் கொடு - எவ்வகையிலும் அவனைக் கட்டுப் படுத்தாதே - எதையும் நினைக்கலாம், எதையும் பேசலாம், எழுதலாம், படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். யாரும் கேட்கத் தேவை கிடையாது..... என்னைக் கட்டி வைக்க எந்த அதிகாரமும் கிடையாது... இதையொட்டி எழுந்தது பெண் விடுதலை. ஆணுக்குப் பெண் சமம் - அனைத்தையும் பெண்கள் செய்து காட்டுவோம் - அச்சமாவது, நாணமாவது, எங்களுக்கும் குருத்துவம் வேண்டும்! இது கட்டுப்பாடின்மை.
Satanism என்னும் சாத்தான் மதம் : முதலில் சாத்தான், பேய், பசாசு எதுவும் கிடையாது என்ற பகுத்தறிவற்ற வாதம் பேசப்பட்டது. இப்பொழுது சாத்தானும் ஒரு தலைவன் என்று அவனுக்கு வழிபாடு நடக்கிறது. அநேக நாடுகளில் சாத்தானுக்கு மதம், கோவில், சாத்தான் பைபிள், சாத்தான் வழிபாடு எல்லாம் வந்து விட்டன. சாத்தான் வழிபாட்டில் எல்லாக் கற்பனைகளும் மீறப்படுகின்றன. நரபலி, குறிப்பாக சிசுக் கொலை, சித்தரவதை, அங்கம் குறைத்தல் போன்ற குரூரங்கள் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் அடியில் சாத்தானின் இரகசிய சபை (ஃப்ரீமேசன்ரி) உள்ளது.
இத்தனை தீமைகளையும் பாவ அக்கிரமங்களையும் யாருடைய போதனையாலும் மனிதன் விட்டுவிடுவான் என்று எண்ண முடியுமா?
சர்வேசுரனுக்கு எதிராக சாத்தான் எழுந்து நிற்கிறான். கடவுள் மனிதனைத் தண்டிப்பதன் காரணம், இவ்வளவு அக்கிரமத்தில் இருக்கிற மனிதன் தண்டனையாலாவது திருந்திவிட மாட்டானா என்ற கடவுளின் எதிர்பார்ப்புதான்.