அதற்கு ஒரு சில வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்….
1. கடவுளுக்கு நம்மை விட்டுக் கொடுக்க வேண்டும்…
2. நம்முடைய ஆசைகள், தேவைகள் விரும்பங்களை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்..
3. நம்மை தேவ பாதுகாப்புக்கும், தேவ பராமரிமரிப்புக்கும், தேவ சித்தத்திற்கும் கையளிக்க வேண்டும்…
4. கடவுளுடைய விரும்பங்களை நம்முடைய விருப்பங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்..
5. நம்மையும், நம் குடும்பத்தையும் மாதாவின் மாசற்ற இருதயத்திடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்…
6. நம்முடைய நேரத்தையும், காலத்தையும், நம் வாழ்நாட்களையும் கடவுளின் சித்தத்திப்படி நடக்க/கழிக்க அதை மாதாவிடம் ஒப்படைக்க வேண்டும்..
7. நம்மிடம் இருக்கும் பணத்தையும், பொருளையும் கடவுளின் சித்தப்படி செலவளிக்க அதையும் மாதாவிடமே ஒப்படைக்க வேண்டும்…
8. நாம் செய்யும் பணியை/ வேலையை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.,,
9. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலையும், பரித்தியாகத்தையும்மாதாவிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்…
10. நம் சிந்தனைகள், சொல், செயல் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்…
11. எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யவே கூடாது என்ற வைராக்கியத்தோடுவாழ லேண்டும்… தவறி செய்து விட்டால் உடனே மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…
12. மாதம் ஒரு முறையாவது நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்….
13. நாம் வாழும் சூழ் நிலைகளையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்….
14. நம்முடைய பிள்ளைகள், அவர்கள் படிப்பு, அவர்கள் என்னவாக வேண்டும் என்பதையும் கடவுளின் விருப்பத்திற்கும், சம்மதத்திற்கும் விட்டுவிட வேண்டும்…
15. நமக்கு வரும் துன்பங்கள், கஷ்ட்டங்கள், வேதனைகளை அமைந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்…
16. நம்முடைய மணைவி/கணவர் பிள்ளைகளை அவர்களின் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்…
17. ஜெபம் நம் அன்றாட பழக்க வழக்கமாக மாற வேண்டும்..
18. ஆண்டவர் இயேசுவுக்கே ஜெபம் தேவைப்பட்டது… நமக்கும், நம் குடுத்திற்கும் ஜெபம் கட்டாயம் வேண்டும்… குடும்ப ஜெபத்தோடும், குடும்ப ஜெபமாலையோடும் நம் குடும்பம் பயனிக்க வேண்டும்…
19. நமக்கும் நம் மனைவிக்கும்/கனவருக்கும், நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் மத்தியில் ஆண்டவர் இயேசுவை வைத்து விட வேண்டும்..
20. நம்மால் முடிந்த அளவு ஒறுத்தல் முயற்சிகள் செய்து நம் சேசு சுவாமியின் திருஇருதயத்திற்கும், மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும் ஆறுதல் தர வேண்டும்…
21. நாம் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரங்களில் சேசுவிடமோ, மாதாவிடமோ ஆலோசனைகள் ஜெபமாலையின் மூலமாக கேட்க வேண்டும்….
22. எந்த சூழ்நிலையிலும் நம் விசுவாசத்தை, நம்பிக்கையை இழக்கக் கூடாது.
23. " ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை " லுக்காஸ் 1: 37 என்ற கடவுளின் வார்த்தை ஒரு போதும் மறக்கக் கூடாது...
25. நம்முடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பதை உணர்ந்து அதை எப்போதும் பரிசுத்தமாக (உடலையும், ஆன்மாவையும்) வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்...
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!