நம் கத்தோலிக்க திருச்சபைக்கென்றே பல தனித்தன்மைகள் உண்டு..
நம் திருச்சபையில் நடக்கும் எப்பேர்பட்ட உண்மையான காட்சிகளையும்.. அற்புதங்களையும் கூட நன்கு விசாரிக்காமல் அறிவிக்காது.. உதாரணங்கள் சில…
1. மாதாவை பதினெட்டு முறை பார்த்த புனித பெர்னதெத்தின் கரங்கள் மாதாவின் காட்சியின் போது மெழுகுவர்த்தியால் சுடப்பட்டது. மாதாவின் காட்சியின்போது மாதா புனித பெர்னதத்தின் கண்களுக்கு மட்டுமே தெறிவார்கள். சுற்றி நிற்கும் ஏராளமான மக்களுக்கு தெறிய மாட்டார்கள்.. பெர்னதத்தின் குரல் மட்டுமே மற்றவர்களுக்கு கேட்கும்.. மெழுகுவர்த்தியால் அவர் கரங்கள் சுடப்பட்டதும் கூட திருச்சபையின் ஏற்பாடுதான். மாதாவை பார்த்து பரவச நிலையில் இருந்த பெர்னதெத் கரங்கள் சுடப்பட்டபோது எந்த ரியாக்சனும் முகத்தில் காட்ட வில்லை. அதுபோல் அவர் கரத்தில் எந்த தீக்காயங்களும் ஏற்படவில்லை.
2. ஐந்து காய வரம் பெற்ற புனித தந்தை பியோவின் காயங்கள் ( ஐம்பது ஆண்டுகள் இயேசு தெய்வத்தின் ஐந்து திருக்காயங்களோடு ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்) மருத்துவர்களால் மட்டுமல்ல நாத்தீக மருத்துவர்களால் பல முறை பரிசோதிக்கப்பட்டது… ஒரு கர்தினால் விசாரனையால் மனம் நொந்தே போனார்.. அவருக்கு பல நெருக்கடிகள் வந்தது… குறிப்பிட்ட காலங்கள் வெளித்தொடர்பே இல்லாமல்… சிறைவாசம் அனுபவித்தார்.. மக்களோடு திருப்பலி ஒப்புக்கொடுக்க தடை விதிக்கப்பட்டது..
3. ஒரு குருவானவரின் சந்தேகத்திற்கு விடையளித்த்த நம் இயேசு தெய்வம்.. திவ்ய நற்கருணை ஆண்டவரின் திருவுடலாகவும், திருஇரத்தமுமாகவும் மாறிய புகழ் பெற்ற லான்சியானோ புதுமை.. ஆண்டவரின் திருவுடல் கூட மருத்துவர்களின் பல முறை ஆராட்சிக்கு உட்படுத்தப்பட்டதே.. 1300 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது நம் ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தம்…
4. மாதாவின் பாத்திமா காட்சிகள் பலமுறை விசாரனைக்கு உட்படுத்தப்பட்டது..
5. லூர்தில் மாதாவின் காட்சியின்போது புறப்பட்ட அற்புத நீறூற்று நதியில் அற்புதமாக சுகம் பெறும் ( விபத்தில் மண்டை ஓடு திறந்து மூளை தெறிந்த நபர் கூட நீரில் மூழ்கி எழுந்ததும் மண்டை ஓடு பொருந்தி குணம் பெற்றுள்ளார்) நோயாளிகளும் நாத்தீக மருத்துவர்களால் சோதிக்கப்படுகிறார்கள்..
நம் திருச்சபை பிற மதத்தினர் போல் கிடையாது.. பிள்ளையார் பால் குடித்ததைபோல் எதையும் பிரபலமாக்காது.. அது உண்மையாக நடந்திருந்தாலும் தீரமாக விசாரித்து உண்மை என்று 100% நம்பிய பின்பே திருச்சபை காட்சிகள், அற்புதங்களை அங்கீகரிக்கும்…
அதே போல் திருச்சபையின் ஒரு விசுவாச பிரகடனம் பல மறை நூல் வல்லுனர்கள், கர்தினார்கள் இவர்களால் பல ஆண்டுகள் ஆராட்சி, ஜெபம் போன்ற பல நிகழ்வுக்கு பிறகே அது விசுவாச பிரகடனமாக வெளியிடப்படும்..
ஒரு கத்தோலிக்கன் கண்களை மூடிக்கொண்டு நம்முடைய விசுவாசக் கோட்பாடுகளை நம்பலாம்…
அதே போல் புனிதர் பட்டம் வெகு சுலபமாக யாருக்கும் கிடைத்து விடாது .. அதுவும் பற்பல ஆராட்சிகளுக்கு பின்னரே… குறைந்தது இரண்டு ஆதாரப்பூர்வமான புதுமைகள் நடந்தே ஆக வேண்டும்… அப்புதுமைகளுக்கு தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்…
நம்முடைய கத்தோலிக்க திருச்சபை மற்ற மதங்கள் போல் அல்ல… உயிருள்ள உண்மையான கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது… இங்கு சந்தேகங்களுக்கு இடமில்லை….
பைபிள் வசனத்திற்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுக்கத் துவங்கிய போதுதான் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டது… அதிலுவும் பிரிவினை சபையினரின் கேள்விகளுக்கு தங்கள் புத்தியில் விடைகான முயற்சித்தபோதுதான் பல கத்தோலிக்கர்கள் பிரிவினை சபையினரானார்கள்…
இப்போது கூட பைபிளில் முரன்பாடான வசனங்கள் இருக்கும்… அது தூய ஆவியானாரால் மட்டுமே விளக்க்க முடியும்…. நம் சொந்த புத்தியால் முடியாது…
அதனால் நம் திருச்சபை மக்களுக்கு எவ்வளவு, எவைகள் தெறிய வேண்டுமோ அதை மட்டுமே கொடுக்கும்….
கடவுளும், கடவுளுடைய வார்த்தைகளும் ஆராட்சிக்கு அப்பாற்பட்டவை….அன்பிற்கும் விசுவாசத்திற்கும் உட்பட்டவை… ஆகையினால் நாம் மாதாவின் குண நலன்களில்.. முதல் நான்கையாவது கடைபிடிப்போம்////
1. ஆழ்ந்த தாழ்ச்சி
2. உயிருள்ள விசுவாசம்
3. கேள்வியற்ற கீழ்படிதல்
4. இடைவிடா ஜெபம்
5. எல்லாவற்றிலும் பரித்தியாகமுடன் இருத்தல்
6. தெய்வீகத்தூய்மை
7. பற்றியெரியும் நேசம்
8. இறுதி எல்லைக்கும் செல்லும் பொறுமை
9. சம்மனசுகளுக்குரிய சாந்த குணம்
10. தெய்வீக ஞானம்
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !