ஆங்காரள்ளவர்களை விரோதித்து, தாழ்ச்சியுள்ளவர்களுக்கு உமது வரப்பிரசாதத்தைத் தருகிற சர்வேசுரா, உமது திவ்ய சுதன் எங்களுக்கு உயிருள்ள விதமாய் முன்மாதிரிகை காட்டிய உண்மையான தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை என் மீது பொழிந்தருளும். என் ஆங்காரத்தால் உமது கோபத்தை நான் ஒருபோதும் தூண்ட விடாதேயும். மாறாக அடியேன் எப்போதும் என் தாழ்மையையும், தகுதியின்மையையும், உம்மையே முழுவதும் சார்ந்திருக்கும் அவசியத்தையும் எப்போதும் நினைவில் கொண்டிருக்கச் செய்தருளும். ஆமென்.