புதுப்பூசை

2-ம் வத்திகான் சங்கத்தில் புது பூசையை தயாரித்தவர்கள் - 6 பதிதர்கள் (Protestants) ஆவார்கள். அவர்களுடைய பெயர்கள் - ஜார்ஜ், ஜெனிபர், ஷெப்பெர்ட், சுனாத், சிமித், துரியான்.

இவர்களுக்கு தலைவர் சங். புக்னீனி ஆவார். இவர், சாத்தான் இரகசிய சபையில் 33 ஆம் நிலை உயர் அதிகாரியாக, 33rd degree Free Mason ஆக இருந்தார்.

ஜெபமாலையை அழிக்கும் முயற்சியாக, இன்று வந்துள்ள 4-வது ஜெபமாலையை, ஒளியின் இரகசியம் மாற்றங்களை அன்றே கொண்டு வந்தவர் இவரே! அன்று பாப்பரசர் 6 - ம் சின்னப்பரால் இது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், 2-ம் ஜான்பால் அதனை வெளியிட்டார்.

24.10.1967-ல் "புதுப்பூசை'' சிஸ்டின் தேவாலயத்தில் 180 சங்க உறுப்பினர்களுக்கு முதல்முறையாக “செய்து” காட்டப்பட்டது. அதன் முடிவில் நடந்த ஓட்டெடுப்பில் 43 பேர் இதை நிராகரித்தார்கள். 4 பேர் ஓட்டுப் போடவில்லை 62 பேர் திருப்தியில்லை என்றார்கள். 71 பேர் ஆதரித்தார்கள். அதாவது 71/180 பேர் மட்டுமே ஆதரித்தார்கள்.

109/180 பேர் ஆதரிக்கவில்லை . இருப்பினும் எல்லா நியாய விதிகளுக்கும் முரணாக "புதுப்பூசை" ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிறிது காலம் கடந்த பின் - புதுப்பூசையை தயாரித்த சங். புக்னீனி சாத்தான் இரகசிய சபையின் உறுப்பினர் என்று தெரியவந்து. அவர் திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

சாத்தான் சபை உறுப்பினரும், 6 பதிதர்களும் சேர்ந்து உருவாக்கிய புதுபூசையை நாம் எதற்கு ஏற்க வேண்டும்? அதுவும் சேசுநாதர் சுவாமியாலேயே ஏற்படுத்தப்பட்டு, அர்ச். 5ம் பத்திநாதரால் நித்திய சட்டம் ஆக்கப்பட்ட திரிதெந்தன் திவ்விய பலிபூசையை நாம் ஏற்காமல் இருக்க முடியுமா? சட்டத்திற்கு முரணாக செயல்படுவோருக்கு அர்ச். 5ம் பத்திநாதர் பாப்பானவர் அளித்துள்ள சாபத்தை யார் தாங்கக் கூடும்??

உண்மையான திவ்விய பலிபூசை

திரிதெந்தீன் பொதுச் சங்க ஆவணங்கள் படி : "Thr Sources of Catholic Dogma" by Denzinger - Dz) 

1. திவ்விய பலிபூசை கல்வாரிப் பலியின் மறு நிகழ்வாகும். அது இராப்போசனத்தின் வெறும் வர்ணனை அல்ல. இராப்போசனத்திற்கு பின்பு நிறைவேறிய வசீகரம் "கல்வாரிப் பலியின் இரத்தம் சிந்தா , முன் நிகழ்வாகும்.” (Dz-938)

2. திவ்விய பலிபூசை அடிப்படையில் ஒரு விருந்து அல்ல. (Dz-948) பாவப் பரிகார பலியாகும்.

3. திவ்விய பலிபூசை ஒரு சமுதாயக் கூட்டம் அல்ல (Dz-955) குரு மட்டுமே தனித்திருந்து பூசை செய்ய முடியும்.)

நவீன புதுப் பூசை

(2-ம் வத்திக்கான் சங்க ஆவணம் படி : From the definition of New Mass in "Institutio Generalis, $7, of the Roman Missal, 1969")

1. பூசை நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியின் வர்ணணை ஆகும். (பலி அம்சம் இல்லை )

2. பூசை ஒரு விருந்து தான்.

3. பூசை ஒரு சமுதாய கூட்டமாகும்.

எனவே, புதுப்பூசை கிரான்மர், மார்டின் லூத்தர் போன்ற பதிதர்களின் போதனைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, கால்வினின் பூசைக்கு (Calvinist Mass) ஒத்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

2-ம் வத்திகான் சங்க ஆவணங்களில் ஒரு இடத்தில் கூட குரு மக்களைப் பார்த்துப் பீடத்தை திருப்பிக் கொள்ள வேண்டும் என்றோ, லத்தீன் தவிர மற்ற மொழிகளில் புதுப்பூசை செய்ய வேண்டும் என்றோ சொல்லப்படவில்லை.

இந்த விஷயங்களில் நவீனர்கள் தங்கள் இஷ்டம் போல் நடந்து கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்.

திவ்விய பலிபூசை கடவுளை மையமாக கொண்டுள்ளதால், குருவானவர் பீடத்தை பார்த்து பலிபூசை நிறைவேற்றுகிறார். புதுபூசை, மனிதனை மையமாக கொண்டுள்ளதால், குரு மக்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்.


> திரிதெந்தீன் திவ்விய பலிபூசையை ரத்து செய்வதாக 2-ம் வத். சங்கம் அறிவிக்கவில்லை . ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவித்தல் திருச்சபை சட்டடப்படி செல்லாது.

• பலிப்பொருட்கள் திவ்விய பலிபூசையில் வசீகரம் ஆவதற்குரிய நிபந்தனைகளான:

1. மெய்யான குருத்துவம், 
2. சரியான லத்தீன் வசீகர வார்த்தைகள், 
3. சரியான பலிப் பொருட்கள், 
4. பாவத்திற்கு பரிகாரமாக நமதாண்டவரை பலியிடும் திருச்சபையின் குருவானவரின் நோக்கம் 

ஆகிய நான்கும் ஒருங்கே, இன்று புதுப்பூசையில் நிறைவு செய்யப்பட முடியாது. எனவே அது தேவத்திரவிய அனுமானம் ஆக முடியாது.

1. " In our sacraments... the form is (traditionally) so definite that any, even a casual deviation from it renders the sacrament null. Hence the form is expressed in the clearest terms, such as to exclude the possibility of doubt. ("Catechism of the Council of Trent” 1566AD) (Also refer to the "Council of Florence "1424 AD)

2. “To constitute a sacrement it is necessary to have the matter the form and the minister, who must have the intention to do what the church does”. ("Catechism of St. Pius X,” 1908AD). (Refer to “St. Thomas Aquinas")

3. “But those things that are essential to the sacrament are instituted by Christ Himself, who is God and man. And though they are not all handed down by the Scriptures, yet the Church holds them from the intimate tradition of the apostles, according to the saying of the Apostle (1 Corinthians 11:34) “The rest I will set in order when I come”. (St. Thomas Aquinas)