ஆலயத்திற்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற நினைப்பா? அதுவும் திருப்பலிக்கு!
ஆண்களே! அதிலும் குறிப்பாக இளைஞர்களே! கழுத்தில்லாத கலர் பனியன் அணிந்து கொண்டு எங்கு செல்கிறீர்கள்? பார்க்கிற்கா ? பீச்சிற்கா ? சினிமாவிற்கா ? இல்ல சுற்றுலாவிற்கா? நீங்கள் கல்வாரி திருப்பலிக்கு செல்கிறீர்கள் என்ற நினைப்பு இல்லையா?
திருப்பலியில் உயிருள்ள கடவுளாக நம் நெஞ்சுக்குள் உறைய வரும் கடவுளைப் பார்க்கவும், அவரை உட்கொள்ளவும் அவரோடு பேசவும் நீங்கள் ஆலயம் செல்கிறீர்கள் என்ற நினைப்பு கூடவா இல்லை? அல்லது உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லையா ? நம் கடவுளால் நமக்கு நன்மையும் செய்ய முடியும் நம்மை நையப்புடைக்கவும் முடியும் என்ற பயமே உங்களுக்கு இல்லையா??
அதே போல் பெண்களே ! ஆடை விஷயத்தில் மிக கவனம் தேவை.. அதிலும் குறிப்பாக ஆலயத்தில் ஆடை விஷயத்தில் மிக மிக கவனம் தேவை…
தலைக்கு முக்காடிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்தே போய் விட்டீர்கள்.. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு கூட சிறுமிகள் கூட நெற்று அணிந்து கொண்டுதான் ஆலயம் வருவார்கள்.. இப்போது கூட சில இடங்களில் சிறுமிகள் கடைபிடிக்கிறார்கள்…பெரிய பிள்ளைகளாகிவிட்டால் எல்லாம் மறந்து விடுமா?
தலையை அலங்கரிக்கிறீர்கள்…ஆனால் அதனுடைய உண்மையான அலங்காரம் முக்காடுதான் என்று தெறியுமா? நீங்கள் யாரையும் உதாரணத்திற்கு பார்க்காதீர்கள்.. கீழ்ப்படிதல் என்பது ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் கொடுத்த கட்டளை.. இதில் பெண்ணடிமைத்தனம் ஒன்றும் இல்லை.. அப்படியென்றால் இரக்கமே உருவான கடவுள் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.. ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு..ஒரு காரணம் உண்டு..
எந்த ஆடை வேண்டுமானாலும் அணியலாம்..லெக்கின்ஸ்.. பேண்ட் சர்ட்.. ஜீன்ஸ் டீ சர்ட்.. ஆலயத்திற்கும் வெளி இடங்களுக்கும் வித்தியாசம் காட்ட மாட்டீர்களா…வெளி இடங்களிலும் கூட நீங்கள் கண்ணியமான ஆடைகளை அணிவதையே நம் தேவ மாதாவும், நம் சேசுவும் விரும்புகிறார்கள்.. ஆடை உங்களின் ஆன்மாவின் அடையாளமாக இருக்கட்டும்…
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதில்லை.. அவர்களே செய்யாத போது அவர்கள் எப்படிக் கற்றுக் கொடுப்பார்கள்.. கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல் போய்விட்டது..
டியூசனுக்கும் ஸ்பெசல் வகுப்புகளுக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மறைக்கல்வி வகுப்புகளுக்கு அனுப்புவதில்லை. அல்லது அவர்களாவது மறைக் கல்வி வகுப்பு எடுக்க வேண்டும்..அதுவும் இல்லை ஒவ்வொரு பெற்றோரிடமும் கடவுள் கணக்கு கேட்பார் என்பதை மறவாதீர்கள்..
ஒவ்வொரு வாரமும் நற்செய்தியில் நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றியும்,, அவரின் எச்சரிப்பும்தான் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் அவைகள் நம் காதுகளில் விழுவதும் இல்லை.. நமக்கு பயம் வருவதும் இல்லை..
முக்காடிடாத தலைகளும், ஆபாசத்தைக் காட்டிய உடல் பகுதிகளும் தண்டணை பெறாமல் போவாது என்று நம் வேதாகமத்தில் தெளிவாக உள்ளது. அதுவரை காத்திருக்க அவசியமில்லை…
நம் கடவுள் இரக்கத்தின் கடவுள்…பொறுமையின் கடவுள்.. அதே நேரம் தண்டிக்கும் கடவுளும் கூட என்பதை மட்டும் மறந்து விட்டால் ஆபத்து நமக்குத்தான்…
ஆடை விசயத்தில் மட்டும் அல்ல நம் ஆன்மா விசயத்திலும் அக்கறை எடுப்போம்…திருப்பலிக்கு செல்லும் முன் நம்மை தயார் செய்வோம்… அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வோம்.. முதலில் செய்த பாவங்களை அடுத்து செய்யாமல் விழிப்பாய் இருப்போம்…தூய உள்ளத்தோடும் தகுந்த தயாரிப்போடும் ஆண்டவரே அனுகுவோம்...
“ இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ அவன் கழுத்தில் பெரிய இயந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம் “
மத்தேயு 18 : 6
“ உன் கையாவது காலாவது உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டி எரிந்து. இரண்டு கைகளோடு அல்லது இரண்டு கால்களோடு முடிவில்லா நெருப்பில் (நரகத்தில்) தள்ளப்படுவதை விட கை ஊனமாய் அல்லது கால் ஊனமாய் வாழ்வில் (மோட்சம்) நுழைவது உனக்கு நலம். உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் அதை பிடிங்கி எறிந்து விடு. இரண்டு கண்களோடு எரி நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒற்றைக் கண்ணனாய் வாழ்வில் (மோட்சம்) நுழைவது உனக்கு நலம் “
மத்தேயு 18 : 8-9
இரக்கமுள்ள கடவுள் பேசியுள்ளதைப் பார்த்தீர்களா?? விவேகம் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்… தங்களைத் திருத்திக்கொள்வார்கள்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
திவ்ய திருப்பலியின் புனிதத்தை கெடுக்காதீர்கள்!
Posted by
Christopher