உலகம் மிக வேகமாகத் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆன்ம மேய்ப்பர்கள் உலகின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, ஆன்மாக்களோ உறங்கிக் கொண்டிருக்கின்றன!
நோவேயின் நாட்களில் எப்படியிருந்ததோ, அப்படியே மனுமகனின் வருகையிலும் இருக்கும். எவ்வாறெனில் பெருவெள்ளத்திற்கு முந்தின நாட்களிலே, நோவா என்பவர் பேழையில் பிரவேசிக்கும் நாள் வரையில் ஜனங்கள் உண்டும், குடித்தும், பெண் கொண்டும், கொடுத்து மிருந்து, பெருவெள்ளம் வந்து சகலரையும் வாரிக்கொண்டு போகும்வரைக்கும் உணரா திருந்தார்கள். அவ்விதமே மனுமகனுடைய வருகையிலும் இருக்கும்" என்ற நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் எழுத்துப் பிசகாமல் நிறைவேறிக் கொண்டிருப்பதை எங்கும் காண்கிறோமே!
ஐயோ! ஆத்துமங்களை இந்த நரக பயங்கரத்திலிருந்து காப்பாற்ற யார் முன்வருவார்கள்!