''அவர் உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு கொடுப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது''
லூக்காஸ் 1 : 32-33
''விண்ணகத்தில் அரியதோர் அருங்குறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள், அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மீது நின்றுகொண்டிருந்தாள்; தலையில் பன்னிரு வின்மீன்களை முடியாக சூடியிருந்தாள். அவள் கருவுற்றிருந்தாள்''
''எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண்மகனை அவள் பெற்றெடுத்தாள்''
-திருவெளிப்பாடு 12:1,5
எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஆண்டவரான நம் இயேசு சுவாமி பிறக்க இருக்கிறார். அவர்தான் மூவுலகையும் ஆட்சி செய்கிறார்.. ஆனால் அவரை முதலில் அவர் நம்மை ஆட்சி செய்ய நாம் அனுமதிக்கிறோமா?
இல்லை வேறு எவனையாவது நம்மை ஆட்சி செய்ய அனுமதிக்கிறோமா?
ஆண்டவராகிய இயேசு சுவாமி நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் நம்மிடம் இருக்க வேண்டிய பண்புகள்,
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. பிறர் ஸ்நேகம்
4. கண்ணியம்
5. நேர்மை
6. தூய்மை
7. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
8. மற்றவரின் குற்றங்களை, குறைகளை பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மை
9. பெருமை பேசாமை
10. பரிசுத்தம்
11. சிலுவைகளை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதாவது நமக்கு துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்..
12. எதிரிகளையும் நேசிக்கும் அவர்களுக்காக ஜெபிக்கும் மனோபாவம்
13. முகத்தாட்சண்யம் பாராமை
14. சுய நலம் பாராமை
15. இந்த உலக ஆசைகள், செல்வங்கள், பொன், பொருள், நபர்கள் எல்லாவற்றையும் விட சர்வேசுவரனுக்கு முதலிடம் கொடுப்பது..
இன்னும் பல நல்ல குணங்களை, புண்ணியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..
சாத்தான் நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் நம்மிடம் இருக்கும் பன்புகள்
1. அகங்காரம்
2. தற்பெருமை
3. பொறாமை
4. தான் மட்டுமே.. தன்னை சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை
5. முகத்தாட்சண்யம் பார்த்தல்
6. துன்பங்களை கண்டு முனுமுனுத்தல்
7. பணத்திற்கும், பணக்காரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்
8. கோபம்
9. பழிஉணர்ச்சி
10. பகை
11. தீய சிந்தனை
12. தீய செயல்
13. பண ஆசை, பொருளாசை
14. போதைப் பழக்கங்களுக்கு அடிமையாயிருத்தல்
15. பாவம்
16. எந்த நேரமும் ஆண்டவரிடம் குறைபட்டுகொண்டே இருத்தல்..
17. கடவுளை பெயருக்கு வணங்கிவிட்டு அவரைத் தவிர எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பது
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.. மேலே உள்ள இரண்டு லிஸ்டுமே நம் எல்லாருக்குமே நன்கு தெறியும்.. அதில் விடுபட்ட குணங்கள் செயல்களுக்கும் நமக்கு தெறியும்.. எல்லாம் தெறிந்தாலும் நம்மில் யாரை நாம் அனுமதிக்கிறோம்.. அதுதான் கேள்வி..
பரிசுத்த பரமனையா.. ?? அல்லது பசாசையா??
பரிசுத்தமான பாலன் இயேசு ஒரு பரிசுத்தமான உதிரத்தில்.. பரிசுத்தமான தாயிடம் அவதரித்தது போல் நம் உள்ளத்திலும் அவதரிக்க ஆசைமேல் ஆசையாக இருக்கிறார்.. அந்த திவ்ய பாலனுக்கு நாம் என்ன சொல்ல இருக்கிறோம்..
போராட்டம்தான் வாழ்க்கையே.... பாவங்களும், பாவ சந்தர்பங்களும், பலவித ஆசைகளும், தீமைகளும் தீய நாட்டங்கள் இவைகளுக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும்.. முதலில் நாம் நம்மிடம் உள்ள தீமைகளுக்கு எதிராக போராடுகிறோமா? போர் புரிகிறோமா? என்பதுதான் முக்கியம்..
அப்படிச் செய்தால் கடவுள் எதாவது ஒரு ஆயுதத்தை ( ஜெபமாலை, உத்தரியம் போன்ற) ப்பாநம்மிடம் தந்து போராட வைத்து அல்லது அவரே வந்து கூட நம்மை காப்பாற்றிவிடுவார்.. ஆனால் தீமைக்கும் தீய இச்சைகளுக்கும் எதிராக போராட போராட்ட குணம் நம்மிடம் இல்லை என்றால் மிகவும் ஆபத்து…
ஆகையால் நம்மை ஆண்டவராகிய இயேசு சுவாமி ஆள நம்மை ஆட்சி செய்ய அவரை முழு உள்ளத்தோடு அனுமதிப்போம்… மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்..
ஜெபம்:
திவ்ய பாலன் இயேசுவே… தீமைக்கு எதிராக போர்புரியும் போர்க்குணம் உள்ள நல்ல உள்ளத்தை எங்களுக்குத்தாரும்.. இதுபோன்ற நேரத்தில் உமக்கு தன் பரிசுத்த உதிரத்தையும்,சதையும் தந்து நீர் இந்த உலகில் மனித அவதாரம் எடுக்க காரணமாய் இருந்த எங்கள் அன்புத்தாயும், அலகையின் எதிரியுமான நம் பரிசுத்த தேவ தாயாரின் உதவியை கேட்டு மன்றாடவும், அவர் எங்களுக்கு கொடுத்த ஆயுதமான ஜெபமாலையையும், உத்தரியத்தையும் பற்றிக்கொண்டு வெற்றி கொண்டு உம் பாதத்தை சரணடைய வரம் தாரும்.. நீர் எங்களை ஆட்சி செய்கிறீர் என்ற மன நிலையில் உம் பிறப்பு விழாவுக்கு எங்களை தயாரிக்க வரம் தாரும் பாலன் இயேசு சுவாமி- ஆமென்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !