* " புதுப்பூசை புத்தகம் அதன் பலவகையான எதிர்மாறான பொருள்படும் அம்சங்களால் அதன் முழுமையிலும், அதன் நுட்பங்களிலும், திரிதெந்தீன் பொதுச் சங்கத்தின் 22ம் அமர்வில் வரையறுக்கப்பட்ட திவ்விய பலிபூசையின் இறை இயலில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கிறது''
- கர்தினால் ஒட்டா வியான்னி, கர்தினால் பாஸி, 'புதுப் பூசை பற்றிய சுருக்கமான நுட்ப ஆய்வு'. பக்கம் 27)
* "... 400 வருடங்களாக திருவழிப்பாட்டின் ஒற்றுமையின் ஆதாரமாகவும், சின்னமாகவும் விளங்கிய திருச்சடங்கு பாரம்பரியத்தை கைவிட்டு, தன் கணக்கற்ற அனுமதிகளால் பிரிவினையின் சின்னமாக மட்டுமே இருக்கக் கூடிய ஒரு சடங்கை ஏற்றுள்ளது அளவிட முடியாத பெரும் தவறு என்பதை, எங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அறிக்கையிடுகிறோம்"
- கர்தினால் ஒட்ட வியான்னி, கர்தினால் பாஸி, 'புதுப் பூசை பற்றிய சுருக்கமான நுட்ப ஆய்வு' பக்கம் 27)
* 2ம் - வத். சங்க தப்பறைகளை எதிர்க்காமல் ஏற்போருக்கு வழங்கப்படும் பலிபூசையை (Indult Mass) ஏற்க கூடாது. அதனை ஏற்றால், பாதி விசுவாச சத்தியங்களை மறுதலித்து மீதியை ஏற்பதாகும். விசுவாசிகள் எல்லா விசுவாச சத்தியங்களையும் முழுமையாக ஏற்க கடமை உண்டு!
கல்வாரியின் பலி நிகழாத ஒரு சடங்கினால், புதுப்பூசையால் நமக்கு தேவ வரப்பிரசாதத்தை தரமுடியாது
* 2 - ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியது.
* கத்தோலிக்க வாழ்வின் அத்தனை நிலையான அம்சங்களும் தூக்கி எறியப் பட்டன. அதனால் விளைந்த பயன் என்ன? புதுப் பூசையின் கனிகள் என்ன?
1. புதுப் பூசை வந்த பின் எத்தனை பேர் மனந்திரும்பி கத்தோலிக்க வேதத்தில் சேர்ந்தார்கள்?
2. தேவ அழைத்தல் பெருகி, பரிசுத்தமான குருக்கள் நமக்கு கிடைக்கிறார்களா?
3. புதுப்பூசை வந்த பின், திருச்சபை அதிகாரிகள் பாப்பானவருக்கு அதிகமாக கீழ்ப்படிகிறார்களா? குருக்கள், ஆயர்களுக்கு அதிகமாக கீழ்ப்படிகிறார்களா?
4. குருக்களின் உன்னத முன்மாதிரியை பின்பற்றி விசுவாசிகள் அர்ச்சிஷ்டதனம் அடைகிறார்களா?
5. இந்த புதுப் பூசையால் உருவாக்கப்பட்ட அர்ச்சிஷ்டவர்கள் எத்தனை பேர்?
இக்கேள்விகளின் பதில் நாம் அனைவரும் அறிந்ததே!
* 2002- ம் ஆண்டு அர்ச்சிஷ்டப்பட்டம் பெற்ற 5 காயவரம் பெற்ற அர்ச். பாத்ரே பியோ கடைசி வரை திரிதெந்தீன் திவ்விய பலி பூசையை மட்டுமே செய்து தமது பரிசுத்த கரங்களால் புதுப்பூசையை செய்ய மறுத்து விட்டார். ஏன்?
''புதுப்பூசை பதித போதனைகளின் வாய்க்காலாய் இருக்கிறது", என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.
* புதுப்பூசை வந்த பின் சங்க சபையின் குருத்துவம் அழிந்து வருகிறது. குருக்கள் தேவையில்லாத நிலை இனி வரும் என்று நவீன குருக்களே கூறுகிறார்கள்.
* நமது காலத்தின் அர்ச்சிஷ்டவரான அர்ச். பாத்ரேபியோ சுவாமிகளை பின்பற்றி புதுப்பூசையை ஓதுக்கி விட்டு உண்மையான திவ்விய பலி பூசையை கண்டு, நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொள்வது நமது கடமையாகும்.
இனி என்ன?
* நாம் நமது பாவங்களினாலும், நமது அறியாமையினாலும், நமது கோழைத் தனத்தினாலும், எதிரிகளுக்கு உதவி செய்து, திவ்விய பலிபூசையை இழந்திருக்கிறோம்.
* ஆனால், தேவ பராமரிப்பினால், இந்த உண்மையான பலி பூசை கீழ்வரும் இடங்களில், அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை குருக்களாலும் நமது மேற்றிராசன குருக்களாலும், நிறைவேற்றப்படுகிறது.
* நாம் இனிமேலாகிலும், தைரியம் பெற்று சிறிது முயற்சி செய்து, இந்த பூசை தலங்களில் திரிதெந்தீன் திவ்விய பலி பூசையில் பங்கு பெற்று நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொள்வோம். மற்றவர்களுக்கும் இவற்றை எடுத்துக் கூறி அவர்களும் இரட்சணியம் அடைய உதவுவோம்.
* சகல இடங்களிலும் திரிதெந்தீன் பூசை நிறைவேற்றப்பட முயற்சி எடுப்போம்.
* தலை வெள்ளி - பரிகார திவ்விய நற்கருணையையும், முதல் சனி பரிகார திவ்விய நற்கருணையையும் திரிதெந்தீன் பலிபூசையில் வாங்கி, சேசுமரிய இருதயங்களுக்கு நிந்தை பரிகாரம் செய்வோம்.
* "திவ்வியபலி பூசையின் செபங்களை எல்லாம் குருவானவர் சொல்வார். நீ, திவ்விய பலி பூசையின்போது அங்கே சேசுவின் சிலுவையடியில் நிற்கும் வியாகுல மாதாவோடு இணைந்திரு போதும், திவ்விய பலி பூசையின் பலனைப் பெறுவாய்." - அர்ச். பாத்ரே பியோ