தேவ மாதா மந்திரமாலை ஜெபிக்கும் முன் ஜெபம்.
ஆண்டவரே! உமது திரு நாமத்தை நான் வாழ்த்த என் நாவைத் திறந்தருளும். அவமான பொல்லாத வீண் புத்தி விசாரங்களிநின்று என் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தும். நான் இந்த மந்திர மாலையைச் சரியான கவனத்தோடும் பக்தியோடும் ஜெபிக்கும்படிக்கும் , தேவரீருடைய திருச்சமூகத்தில் நான் கேட்கும் மன்றாட்டை அடையும்படிக்கும், என் ஆண்டவரான இயேசுக்கிரிச்துனாதரைப் பற்றி என் புத்திக்கு பிரகாசத்தையும் என் நேசத்துக்கு அக்கினியையும் கொடுத்தருளும் சுவாமி. ஆமென்.
ஆண்டவரே நீர் பூமியில் இருக்கும்போது எந்தக் கருத்தோடு சர்வேசுரனுக்குப் புகழ் புரிந்தீரோ, அந்தக் கருத்தோடு இச்செபத்தை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
விடியற்காலக் கணிதம். ஸ்தோத்திர ஜெபம்
முதல்: மாசற்ற கன்னிகையின் புகழ்ச்சியையும் அவருடைய மேலான நாமத்தையும்
எல்:என் நாவே களிகூர்ந்து வாழ்த்துவாயாக
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
சங்கீதம்
1. பூலோகத்துக்கு ஆண்டவளே!
பரலோக இராக்கினியே வாழ்க!
கன்னியர்க்கெல்லாம கன்னிகையே
விடியற்கால நட்சத்திர மே வாழ்க!
2. வரப்பிரசாத பூரணியே மரியே! வானொளி விண்மீனே!
ஆண்டவளே! அவனியின்
பிணி தீர்க்க தீவிரிப்பாயே!
3. இறைவன் ஏக சுதனாம்
சர்வத்தையும் உண்டாக்கிய
உன்னத கடவுளின் தாயாக
உம்மைத் தெரிந்தெடுத்தார்
4. தாம் வசிப்பதற்கு இருப்பிடமாக
தரணியில் பாவக்கறையற்ற
பரிசுத்த மணவாட்டியாக
பரிவுடன் தெரிந்தார் உம்மையே ஆமென்
முதல்: மனுக்குலம் மாசுபடுமுன் இந்த பரமநாயகியை இறைவன் தெரிந்து கொண்டார்
எல்: அவளைத் தமது ஆலயத்தில் வாசம் செய்யச் செய்தார்.
முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாதவரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்கும் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
முதற் கணிதம்
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம்
1. ஞானமுள்ள கன்னிகையே வாழ்க!
ஞானார்த்த தம்பங்கள் ஏழுடன்
உன்னத பீடமும் ஒருங்கே சேர்ந்த
உன்னத இறைவனின் மாளிகையே
2. அன்னவர் உலகிற்கிட்ட சாபம்
உன்னையே தீண்டாது உன் தாயின்
உதிரத்திலேயே உலகில் ஜனிக்கும் முன்
முதல்வன் அருளை முற்றும் பெற்றாய்
3. சீவியர்களுக்கு சிறந்த தாயே!
தூய பரிசுத்தவான்களின் வாசலே
யாக்கோபின் நவ நட்சத்திரமே
வானவருக்கு இராக்கினியே
4. சேனையைப் போல் அணி வகுக்கப்பட்ட
அலகைக்குப் பயங்கரமானவளே
தஞ்சம் நீ கிறிஸ்தவருக்கு
தங்குத் துறையும் தாபரமும் நீ ஆமென்
முதல்:அவர் அவளைப் பரிசுத்தமுள்ள வளாய் உண்டு பண்ணினார்.
எல்: அவர் அவளைத் தம்முடைய சகல படைப்புகளுக்கு மேலாக உயர்த்தினார்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாத வரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக . ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்கும் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
மூன்றாம் கணிதம்
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம்
1. சாலமோனின் சிம்மாசனமே வாழ்க!
கலக்கம் நீக்கும் வான் வில்லே வாழ்க!
மோயீசன் கண்ட முட்செடியே வாழ்க!
நோவா தங்கின பெட்டகமே வாழ்க!
2. சேதையோனின் கம்பளமே வாழ்க' .
ஆரோனின் துளிர் விடும் கோலே வாழ்க' .
இறைவனின் திறக்கப்படாத வாசலேl
சஞ் சோனுடைய தேன்கூடே வாழ்க!
3. நர தேவனுக்குத் தாயாகப்
பரன் தாமே பண்பாய்த் தெரிந்த
மகத்தான இக் குழந்தையை
அவர் தாமே அர்ச்சித் தருளினார்
4. ஏவையாலே சாவினுள் ளானோம்
சீவம் நீயே, ஒரு க்ஷணமும்
பாவமா சு உன்னைச் சேராது
அவதரித்த சுதன் தற்காத்தார்
முதல்:உன்னத ஸ்தலத்தில் நான் வீற்றிருக்கிறேன்
எல்: என்னுடைய சிம்மாசனம் மேக மண்டலத்தின் தூணுக்குள் இருக்கிறது
முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாத வரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக . ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்கும் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
ஆறாம் கணிதம்
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம்
1.கன்னித்தாயே வாழ்க!
திரித்துவத்தின் ஆலயமே
சம்மனசுக்களின் சந்தோஷமே
பரிசுத்தத்தின் இருப்பிடமே
2. ஆனந்தத்தின் சோலையே
அழுவோர்க்கு ஆறுதலே
கற்பகத் தருவே
பொறுமையின் பூங்காவே
3. புண்ணிய பூமியே
குருத்துவத் தாரணியே
ஆதாமின் ஆதி தோஷம்
அண்டாத அமலியே
4. உன்னதமானவரின் உயர் நகரே
உத்தம கன்னிகையே
கீழ்த்திசை வாசலே
வரப்பிரசாத பூரணியே வாழி ஆமென்
முதல்:முட்செடிக்குள் லீலி என்னும் புஷ்பமாய் இருக்கிறது போல
எல்:ஆதாமின் குமாரத்திகளுக்குள்ளே என் அன்புக்கு உரியவளாய் இருக்கிறார்
முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாதவரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்கும் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
ஒன்பதாம் கணிதம்
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம்
1. அடைக்கலம் தரு நகரே வாழ்க!
படைக்கலங்களும் கொத்தளங்களும்
சாலவே செறிந்து நிற்கும்
தாவீதின் திறமான உப்பரிகையே
2. அற்புத உற்பவத்தால் தானே
அன்பின் சுவாலை சுடர் விட
பூர்வ காலத்து பறவை நாகம்
பூர்ணமாய் உம்மால் நசுக்கப்பட்டதே
3. அஞ்சாத யூதித்து நீரே
நெஞ்சத்தில் வீரியம் கொண்டவளே!
உம்மைத் தாவீதனைக் கொங்கைகளில்
உண்பித்த அபிசாக் நீரே
4 . எகிப்து நாட்டின் இரட்சகராம்
யோசேப்பைப் பெற்றாள் இராக்கேல்
பூவுலகம் முற்றும் இரட்சித்த
பூபதியைப் பெற்றவள் நீரே ஆமென்
முதல்: என் நேசமுள்ளவளே / நீர் முழுமையும் அழகுள்ளவர்
எல்:ஜென்ம பாவத்தின் மாசு உம்மிடத்தில் ஒரு போதும் இருந்ததில்லை
முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாத வரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்கும் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
வெஸ்பர்ஸ் என்னும் மாலை ஜெபம்
முதல்:பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத் தந்தருளும்
எல்: மாசற்ற கன்னிகையே / சகல சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
சங்கீதம்
1. ஆதித்தன் ஆருடன் நான்கு
சோதி இரேகைகள் பின்னிடப்
பாக்கியம் பெற்றிலங்கின
ஆக்காஸின் சூரிய கடிகாரமே
2. வார்த்தை மாம்சமாகி
வரம்பில்லாக் கடவுள் வானோர்க்குத்
தாழ்ந்து மனிதனை உன்னத
ஸ்தலத்துக்கு உயர்த்தினார்
3. வெய்யோன் கதிர்களுக்கிடையில்
மெய்யாய் இலங்குகிறாள் மாமரி
வைகறை உதயம் போல் அவள்
விளங்குகிறாள் உற்பவத்தில்
4. முட்களிடையில் லீலியாம்
சர்ப்பத்தின் தலையை நசுக்கினாள்
திங்களின் வதனத்தால்
தயங்குவோருக்கு ஒளியாம்
முதல்:வானத்தின் மாறாத ஒளியை உதிக்கச் செய்தேன்
எல்: பூமி முழுதும் மூடுபனியைப் போல் மூடினேன்
முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
செபிப்போமாக
புனித மரியாளே / யாரையும் கைவிடாத வரும் புறக்கணியதவரும் ஆன மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே பூலோகத்துக்கு ஆண்டவளே / உம்முடைய கருணைக் கண்ணால் என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும். உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்
முதல்:ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது
முதல்:ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்
எல்: இறைவனுக்குப் புகழுண்டாகக் கடவது
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப் பாறக் கடவது. ஆமென்
தேவமாதாவுக்குப் புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
புனித தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியாயே *
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனுடைய புனித மாதாவே *
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே
மகா அன்பிற்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே
கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவ வரப்பிரசாத மாதாவே
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே
கன்னிசுத்தங்கெடாத மாதாவே
மகா அன்புக்குரிய மாதாவே
ஆச்சர்யத்துக்குரிய மாதாவே
நல்ல ஆலோசனை மாதாவே
சிருஷ்டிகருடைய மாதாவே
இரட்சகருடைய மாதாவே
மகா புத்தியுடைத்தான கன்னிகையே
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே
பிரகாசமாய்த் துதிக்கப்பட்ட கன்னிகையே
சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே
தயையுள்ள கன்னிகையே
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்தின் இருப்பிடமே
எங்கள் சந்தோஷத்தின் காரணமே
ஞான பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே
தாவீது ராஜாவுடைய உப்பரிகையே
தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே
சொர்ணமயமாயிருக்கிற ஆலயமே
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே
பரலோகத்தினுடைய வாசலே
விடியற்காலத்து நட்சத்திரமே
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
கஸ்திப்படுகிரவர்களுக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுக்களுடைய இராக்கினியே
பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே
மறைசாட்சிகளுடைய இராக்கினியே
துதியர்களுடைய இராக்கினியே
கன்னியர்களுடைய இராக்கினியே
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே
ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே
மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே
திருச்செபமாலையின் இராக்கினியே
சமாதானத்தின் இராக்கினியே
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
சர்வேசுரனுடைய புனித மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதர்க்குப் பாராமுகமாக இராதேயும் . ஆசீர்வதிக்கப்பட்டவளும் மோட்சமுடையவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே , சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும் ஆமென்
ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தேவமாதாவுக்கு தோத்திர ஜெபம்
சமுத்திரத்தின் நட்சத்திரமே ! சர்வேசுரனுடைய பூஜிக்கப்பட்ட மாதாவே ! நித்திய கன்னிகையே , பரலோகத்தின் பாக்கியமான வாசலே
கபிரியேல் என்னும் சம்மனசினுடைய சொல்லிலிருந்து புறப்பட்ட மங்கள வார்த்தையைக் கேட்டு ஏவையின் பெயரை மாற்றி எங்களைச் சமாதானத்திலே நிலை நிறுத்தும்
ஆக்கினைக்குப் பாத்திரமானவர்களுடைய கட்டுக்களை அவிழும் ; குருடருக்குப் பிரகாசத்தைக் கொடும் ; எங்கள் பொல்லாப்புக்களை நீக்கி சகல நன்மைகளும் எங்களுக்கு வர மன்றாடும்
நீர் எங்களுக்குத் தாயாராய் இருக்கிறீர் என்பதைக் காண்பியும் ;எங்களுக்காக அவதரித்த உம்முடைய திருக்குமாரன் இயேசுநாதர் உம்மாலே எங்கள் வேண்டுதலைக் கேட்கக் கடவாராக
உத்தம கன்னிகையே! எல்லாவற்றிலும் அமைதியும் , பாவங்களில் நின்று விடப்பட்டவளாகிச் சாதுக்களாகவும் கற்புடையவர்களாகவும் செய்தருளும்
நாங்கள் இயேசுவை தரிசித்து நித்தமும் களிகூர்ந்து பரிசுத்த நடத்தையைத் தந்து பயமில்லாத வழியில் நடத்திப் போக அனுக்கிரகம் செய்தருளும்
சர்வேசுரனாகிய பிதாவுக்கு ஸ்தோத்திரம்; உத்தம கிறிஸ்துவுக்கு திருப்பலி; பரிசுத்த ஆவிக்கு மங்களம்; இந்த மூன்றாட்களுக்கும் ஒரே உத்தம தேவாராதனை உண்டாகக் கடவது ஆமென்
கிறிஸ்துவே! உம்மைச் சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே
மிகுந்த மதுரமுள்ள புனித மரியாயே , ஒன்றான சர்வேசுரனைப் பழுதற்ற கன்னிகையாயிருந்து உமது கர்ப்பத்திலே பிள்ளையாகத் தரித்தீரே ! தேவ சுதனைக் குறையற்ற பிறப்பில் துன்பமில்லாமல் பெற்ற அன்னையே வாழ்க! அவரைப் பெற்ற பின்னும் , எப்பொழுதும் பரிசுத்த கன்னியே வாழ்க ! சர்வேசுரனுடைய புனித மாதாவே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
ஆமென்.