கிறிஸ்தவ குடும்பத்தின் ஒரே அலுவல் அல்லது பணி கிறிஸ்துவை அறிவித்தலே எனத் திருத்தந்தை 6.வது சின்னப்பர் கூறுகிறார். மனுக்குலத்தின் பல்வேறு நிலையினர்க்கும் நற்செய்தியை அறிவித்தலும், தனது செல்வாக்கினால் மனித இனத்தை உருமாற்றி, புதுப் பித்தலுமே கிறித்தவ குடும்பத்தின் பணி யா கு ம். (Evangelii Nuntiandi n. 18)
''பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உயிர் அளிக்கிறார் கள் என்பதால் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டி யது அவர்களது தலையான கடமை. எனவே அவர்களே குழந்தைகளுக்கு முதன்மையான, முக்கியமான ஆசிரி பர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கல் விட்' பணி எவ்வளவு முக்கியமானதென்றால், இது நிறை வேற்றப்படாதிருக்கும் இடத்தில் வேறெதுவும் கொண்டு இதனை நிறைவு செய்வது மிகவும் கடினம். கடவுளுக் கும், மனிதருக்கும் காட்டும் அன்பாலும் பற்றாலும் உயிரூட்டப் பெற்றுள்ள குடும்பச் சூழ்நிலையை உருவாக் குதல் பெற்றோர்களுடைய கடமையாகும். இதனாற் குழந்தைகளின் தனி, சமூகக் கல்வியைக் குறையற நிறைவு செய்ய முடியும். குறிப்பாக, திருமணம் என்ற திருவருட் சாதனத்தின் அருளாலும் கடமையாலும் வளம் பெற்றுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் திருமுழுக் கால் அவர்கள் பெற்ற விசுவாசத்துக்குத் தக்கபடி கட வுளைக் கண்டுணரவும், அவரை வழிபடவும், பிறருக்கு அன்பு செய்யவும் பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலி ருந்தே கற்பிக்கப்பட வேண்டும்''.
(2ஆம் வத்திக்கான் சங்கம் : கிறிஸ்தவக் கல்வி இல. 3 )
" உயிருள்ள விசுவாசம் நிலை பெறச் சமூகத்தின் - உதவி வேண்டப்படுகிறது. எனவே, தம் பிள்ளைகளை பங்கு முயற்சிகளில் ஈடுபடுத்தும் பொறுப்பு பெற்றோர்க் குரியது. அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் ஆழ்ந்த விசு வாசத்துக்கும் தேவையான பயனுள்ள வேறு சமூக நிறுவனங்களிலும் ஈடுபாடுள்ளவர்களாகப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். (இன்றைய உலகில் கிறிஸ்தவ குடும்பத்தின் பணி ப. 32).
- சமூக வாழ்வில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாறு தல்களினால் கல்விப் பணியில் மேலும் சிரமங்களைக் குடும்பம் எதிர் நோக்க வேண்டுயுள்ளது. கல்வி நிறுவ னங்கள் தன்னாளுமையும் மனிதப் பண்பும், கிறிஸ்தவ உருவாக்கமும் கொண்ட நற்கல்வியை தனி ஆளுக்கு ஊட்டக்கூடிய நிலையில் இல்லை. எனவே, பாடசாலை வழங்க முடியாததை வழங்க வேண்டிய பொறுப்பு குடும்பத்தைச் சார்கிறது. மறைக்கல்வி ஊட்டலில் குடும்பத்தின் பங்கு அதிகமாகிறது. பச்சாத்தாபம், திருவிருந்து, உறுதிபூசுதல், எனும் திருவருட்சாதனங் களுக்கான ஆயத்தங்களில் பெற்றோரும் ஒன்று சேர வேண்டுமென்ற புதிய பரீட்சார்த்த முறைகள் பெற் றோரின் கடமைகளை இன்னும் அதிகமாக்குகின்றன. பள்ளிக்கு முந்திய பருவத்தில் சிறப்பான ம ன ற க் கல்வியை பெற்றோர் கொடுக்க வேண்டியவர்களாயிருக் கின்றனர். கல்விப் பணியில் பெற்றோர் தம் பிள்ளைக ளின் உதவியையும் சே ர் க் க வேண்டிய து அவசியம். (Role of the Christian Family P, 33-34)
திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பர் அண்மையில் கல்வி பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து நோக்கற்பாலது. இளைஞர்க்கான கல்வியின் நோக்கம் அவர்களின் உரு வாக்கலில் உதவுதலும், கிறிஸ்தவ கண்ணோக்குடன் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளச் செய் தலுமாகும். இவை மட்டில் அக்கறை இல்லாத அல்லது பகைமையுடைய் உலக போக்கை மாற்றிச் சமு தாயத்துக்குப் பணி செய்பவர்களாகவும், விசுவாசமுள் ளவர்களாகவும் அவர்களை ஆக்க வேண்டும். பெற்றோ ருடன் ஒன்றித்து திருச்சபையின் வாழ்வில் ஊக்கமுடன் பங்கு கொள்ளச் செய்தல் நம் கடமையாகும், . (Role of the Christan Family P. 34)