லூஸியா எப்போது ஆடுகளுடன் திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள் பிரான்சிஸம், ஜஸிந்தாவும். பிரான்சிஸ் எதிர்பார்ப்பான்; ஆயினும் ஜஸிந்தாவைப் போல் அவ்வளவு தீவிரமாயிருக்க மாட்டான். லூஸியா வந்ததும் ஜஸிந்தா அவளை நோக்கி ஓடிப் போவாள். காலையிலிருந்து அதுவரை நடந்த செய்திகளை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்து விடுவாள்.
லூஸியாவுடன் தன்னையும் ஆடு மேய்க்க அனுப்பும்படி ஜஸிந்தா தன் தாயிடம் மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தாள். அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவளுக்கு அதுவே பெரிய வேதனையாயிருந்தது. அவள் இவ்வாறு துயரமாயிருக்கும் நாட்களில் மேகம் கூடி மந்தாரம் விழுந்து விட்டால் அவளுக்கு மகிழ்ச்சியே இருக்காது. "இராறு ரம்மனசுக்கள் தங்கள் விளக்குகளைக் கொளுத்த மாட்டார்கள் போலும்!'' என்பாள். ''நம் அம்மாவின் விளக்கில் எண்ணெய் இல்லை போலும்!" என்று வருத்தமாகக் கூறுவாள்.
ஜஸிந்தாவுக்கு அவள் விரும்புவதெல்லாம் கிடைத்து விட வேண்டும். லூஸியாவுன் தானும் ஆடு மேய்க்கச் செல்ல வேண்டும் என்று அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவள் தாய் ஒலிம்பியாவும் இறுக்கமானவள்; எளிதில் இளகி விட மாட்டாள். தான் விரும்பியது கிடைக்கவில்லையென்றால் அதை நினைத்துக் கொண்டே துக்கப்படும் குணம் ஜஸிந்தாவிடம் கிடையாது. அதை மறந்து விட்டு, அடுத்த காரியத்தில் ஈடுபட்டு விடுவாள்.
ஜஸிந்தாவின் இன்னொரு பெரிய ஆசை, புது நன்மையில் சேசுவை வாங்க வேண்டும் என்பது. லூஸியா ஆறு வயதிலே சேசு வாங்கினால் நானும் என் வாங்கக் கூடாது என்பது அவள் நினைப்பு. சேசு பவனியில் சிறுமிகள் சம்மனசுக்கள் போல் அணிவகுத்து சேசு வுக்குப் பூ தூவும் காட்சி அவளைக் கவர்ந்தது.
ஒருநாள் லூஸியா சேசு வாங்கி வந்தபின், ஜஸிந்தா சில பூக்களை மாலை போல் தொடுத்து லூஸியாவின் தலையில் சூடினாள். "இப்படி ஏன் செய்கிறாய்?'' என்றாள் லூஸியா. ''சம்மனசுக்கள் செய்வது போல் உனக்கு நான் செய்கிறேன். உனக்குப் பூக்கள் தருகிறேன்'' என்று பதிலளித்தாள் ஜஸிந்தா.
ஒருநாள் லூஸியா சேசு வாங்கி வந்தபின், ஜஸிந்தா சில பூக்களை மாலை போல் தொடுத்து லூஸியாவின் தலையில் சூடினாள். "இப்படி ஏன் செய்கிறாய்?'' என்றாள் லூஸியா. ''சம்மனசுக்கள் செய்வது போல் உனக்கு நான் செய்கிறேன். உனக்குப் பூக்கள் தருகிறேன்'' என்று பதிலளித்தாள் ஜஸிந்தா.
அடுத்த சேசு பவனிக்கு ஜஸிந்தாவும் பூ தூவும் சிறுமியர் குழுவில் சேர்க்கப்பட்டாள். மற்றச் சிறுமிகள் நற்கருணை சேசுவை நோக்கி மலர்களை அள்ளித் தூவினர். ஆனால் ஜஸிந்தா மலர் அள்ளித் தூவாமல் கதிர்ப் பாத்திரத்தை ஏந்தி வந்த குருவை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்று விட்டாள்.
"நீ ஏன் சேசுவை நோக்கிப் பூத்தூவ வில்லை?" என்று லூஸியாவின் சகோதரி மரியா கேட்ட போது, ஏனென்றால் நான் அவரைக் காணவில்லையே!'' என்றாள் ஜஸிந்தா. "ஆயினும் லூஸியா செய்தது போல் நீயும் செய்திருக்க வேண்டும்" என்றாள் மரியா.
"நீ ஏன் சேசுவை நோக்கிப் பூத்தூவ வில்லை?" என்று லூஸியாவின் சகோதரி மரியா கேட்ட போது, ஏனென்றால் நான் அவரைக் காணவில்லையே!'' என்றாள் ஜஸிந்தா. "ஆயினும் லூஸியா செய்தது போல் நீயும் செய்திருக்க வேண்டும்" என்றாள் மரியா.
இதன்பின் ஜஸிந்தா லூஸியாவிடம், "அப்போ, நீ சின்ன சேசுவைப் பார்த்தாயோ?" என்று கேட்டாள்.
“இல்லை. திரு அப்பத்தில் உள்ள சின்ன சேசுவை நாம் ஒருபோதும் பார்ப்பதில்லை. அவர் மறைந்திருக்கிறார். நன்மை வாங்கும்போது அவரையே வாங்குகிறோம் என்பது உனக்குத் தெரியாதா?”
''அப்போ , நீ நன்மை வாங்கும் போது சேசுவிடம் பேசுவாயா?" "ஆம்!'' ''அப்போ , அவரை ஏன் நீ பார்க்கிறதில்லை ?” "ஏனென்றால் அவர் மறைந்திருக்கிறார்.''
"நானும் சேசுவை வாங்க உத்தரவு தரும்படி என் அம்மாவிடம் கேட்கப் போகிறேன்.''
"உனக்குப் பத்து வயது ஆகும் வரை, நன்மை வாங்க பங்குத் தந்தை விட மாட்டார்."
"நீ மட்டும் வாங்குகிறாயே. உனக்குப் பத்து வயது ஆகவில்லையே!''
"எனக்கு ஞானப் பாடம் எல்லாம் தெரியும். உனக்குத் தெரியாதே.”
இந்த உரையாடலுக்குப் பின் ஜஸிந்தாலூஸியாவின் மாணவி யாகி விட்டாள். ஞானோபதேசத்தை மனப்பாடமாய் மட்டுமல்ல, அதன் பொருளையும் காரணத்தையும் துளைத்துத் துளைத்துக் கேட்டுப் படித்தாள்.
''மறைந்த சின்ன சேசுவை இத்தனை பேர் எப்படி ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்கிறார்கள்? இத்தனை பேருக்கும் ஒவ்வொரு பாகம் எப்படிக் கிடைக்கும்?"
"திரு அப்பங்கள் நிறைய இருக்கின்றன அல்லவா? அதில் ஒவ்வொன்றிலும் சேசு முழுமையாக இருக்கிறார். " இப்படிக் கேள்வியும் பதிலுமாக ஞான உபதேச வகுப்பு நடந்தது. ஆனால் சீக்கிரத்தில் லூஸியா முன்பு சொன்னதையே திருப்பிச் சொல்ல ஆரம்பித்தாள்.
"இதெல்லாம் படித்ததுதானே, வேறு புதியது சொல்'' என்றாள் ஜஸிந்தா . எப்படியோ பாடம் முடிந்தது. ஜஸிந்தா தன் தாயிடம் சேசுவை வாங்கத் தேவையான பாடம் எல்லாம் படித்து விட்டதாகக் கூறினாள். ஒரு நாள் ஒலிம்பியா தன் மகளை பங்குத் தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.
சங். பெனா சுவாமி ஐஸிந்தாவைப் பல கேள்விகள் கேட்டு விட்டு, ஒலிம்பியாவிடம் , ஜஸிந்தா மிகவும் சிறு பிள்ளை , மேலும் அவளுக்கு இன்னும் ஞான அறிவு பற்றாது என்று கூறி அனுப்பி விட்டார்.
தான் சேசுவை வாங்க அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்ததும் ஜஸிந்தா மிகவும் வேதனையடைந்தாள். எவ்வளவோ ஆசித்தும் ஒன்றும் நடக்கவில்லை . ஆயினும் அவள் அந்த வேதனையை மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றாள்.