உண்மைச் சம்பவம் நன்றி - மார்ச் 2002 'The Angelus'
2002ம் ஆண்டில் பாரிஸில் வாழ்ந்த ஒரு கத்தோலிக்க பெண்ணுக்கு ஒரு சந்தேகம் உதித்தது. அவள் அடிக்கடி கண்டுவரும் நவீனப் புதுபூசையில் ஏதோ குறையிருப்பது போல அவளுக்கு தோன்றியது.
நவீன பங்கு குருவிடம் சென்று, "ஏன் இப்படி? இங்கு என்ன நடக்கிறது?' என்று வினவினாள். அந்த குருவின் பதில்கள் அவளுக்கு திருப்தியளிக்கவில்லை .
அவளுடைய உறவினள் ஒருத்தி முன்பு அவளிடம் கூறிய வாக்கியம் அடிக்கடி ஞாபகம் வந்தது. “தேவமாதா சிறு பிள்ளைகளிடம் எளிதாக பேசுவார்கள்” என்பதே அந்த வாக்கியம். ஒரு நாள் அவள் தன் 8 வயது மகளை மாதாவிடம் பேசும்படி செய்யலாமே என்று தீர்மானித்தாள்.
நமது தேவத்தாய் அர்ச். கத்தரீன் லாபோருக்கு காட்சி கொடுத்த தேவாலயம் பாரிஸ் நகரின் மத்தியில் உள்ளது. அங்கு, அந்த பெண் தன் மகளை காரில் கூட்டிச் சென்றாள். அது பகல் வேளை, ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருந்ததால், அவள் காரை கோவில் அருகில் நிறுத்த முடியவில்லை .
மகளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு ரோட்டில் போகும் வாகனங்களோடு தானும் சென்று கோவில் இருந்த பகுதியை காரிலேயே சுற்றி வலம் வர முடிவு செய்தாள். மகளிடம், "நீ போய் தேவமாதாவிடம் நாங்கள் எந்த பூசைக்குப் போக வேண்டும் என்று கேட்டு வா” என்றாள். சிறுமி மட்டும் கோவிலுக்குள் நுழைய, தாய் காரை செலுத்தியபடி இருந்தாள்.
சில வட்டங்கள் முடிந்தபின், தன் மகள் கோவிலுக்கு வெளியே நிற்பதைக் கண்டு அவளிடம் விபரம் கேட்க, சிறுமி, "நாம் அர்ச். நிக்கோலாஸ் தெ சார்னெட் தேவாலயத்திற்கு போக வேண்டுமாம்" என்று கூறினாள்.
கலவரம் அடைந்த தாய் "ஐயோ, அது பிரிவினைவாத SSPX- பூசை திரிதெந்தீன் திவ்விய பலிபூசை நடக்கும் கோவில் , நீ போய் நன்றாகக் கேட்டு வா” என்று திருப்பி அனுப்பினாள்.
மகள் கோவிலுக்குள் மறுபடியும் போகவே, தாய் வீதியை வலம் வந்தாள். மறுபடியும் வெளியே வந்த சிறுமி, "அங்கே தான் உண்மையான திருச்சபை இருக்கிறதாம்" என்றாள். அந்த பெண் மறுபடியும், "மகளே நாம் அங்கே போகக் கூடாது. எனக்கு ஒன்றும் புரியவில்லை . உண்மையான திருச்சபை என்றால் என்ன? கேட்டு வா" என மறுபடியும் மகளை தேவ மாதாவிடம் அனுப்பினாள்.
இப்படி தேவ மாதாவுடன் அந்த பெண் ஆரம்பித்த கேள்வி - பதில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து 3 வாரங்கள் நடந்தேறின. 8 வயதுச் சிறுமி, தாய் அறியாத ஒரு வேளை நவீன குருவும் அறியாத) வேத உண்மைகளை தெளிவாக போதித்தாள்.
1ம் வத்திக்கான் சங்க போதனைகளைப்பற்றி பேசினாள். 'Quas Primas,' 'Mortalium Animos' 861600116166001 லத்தீன் மொழியில் மேற்கோள் காட்டினாள். முன்பு அறிந்திராத லத்தீன் மொழியில் பேசினாள்.
திருச்சபை சங்கங்களின் தீர்மானங்களை விளக்கினாள். இதனால், ஓரளவு தெளிவு அடைந்த தாய் பாரம்பரிய கத்தோலிக்க போதனைகள் அடங்கிய புத்தகங்களை கடைகளில் வாங்கி வாசித்தாள். மேலும் தெளிவு பெற்றாள்.
3ம் வாரம் முடிவில், தாயும், மகளும் நமது தேவதாய் சிறுமிக்கு கூறிய ஆலோசனை படி , அர்ச். நிக்கோலஸ் தேவாலயத்திற்கு சென்று உண்மையான திவ்விய பலி பூசையை காணத் துவங்கினார்கள். அந்த பெண்ணே , இ ந் நிகழ்ச்சி ைய வ ந் . ெப ல் லே ஆண்டகையிடம் கூறினாள்.
நாம் கடவுளை உண்மையாகவே நாடினால் சர்வேசுரன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். ஒரு சிறிய விஷயத்திற்கு கூட ஒரு பெரும் புதுமையைச் செய்து, நம்மை காப்பாற்ற சர்வேசுரன் தயாராய் இருக்கிறார். தேவதாயே நம்மிடம் வந்து உதவ தயாராய் இருக்கிறார்கள்.
நமது தேவ மாதாவின் சொல்லை கேட்டு நவீனத்தை விட்டு, உண்மையான திவ்விய பலிபூசையில், பங்கு பெறுவோம்