உலகத் தண்டனை பற்றிய அறிவிப்பு

ஒரு குறிப்பு உங்களுக்குக் கொடுக்கிறேன். உரோமாபுரியில் புரட்சி ஏற்படுவதை நீங்கள் பார்க்கையில், கேட்கையில், உணருகையில் - பாப்பரசர் இன்னொரு நிலத்தில் அடைக்கலம் தேடிப் போவதைக் காண்கையில், தருணம் வந்ததென அறிந்து கொள்ளுங்கள்
- சேசுவின் நியூயார்க் செய்தி செப்டம்பர் 14, 1976.

உரோமாபுரியில் விசுவாசப் புரட்சி

உரோமாபுரி விசுவாசத்தை இழக்கும். அது அந்திக் கிறீஸ்துவின் ஆசனமாகும்.
- சலேத் மாதாவின் அறிவிப்பு. செப்டம்பர் 19, 1846.

பாத்திமாவில் மாதாவின் முன்னறிவிப்பு

அநேக நாடுகள் நிர்மூலமாகும்.
- சலேத் மாதாவின் அறிவிப்பு. செப்டம்பர் 19, 1846.

ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டும். இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.
- பாத்திமாவில் மாதா.

நன்றியற்ற மனிதர்களின் பாவ முட்களால் ஊடுருவப்பட்டிருக்கும் உன் தாயின் இருதயத்தைப் பார். நீயாவது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முயற்சி எடு.
(சேசு சகோதரி லூஸியாவிடம் கூறியது)

பூசை முடிவில் சொல்லும் ஜெபங்கள் 

அருள் நிறை மந்திரம். (மூன்று முறை )

கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க. எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள், ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உமது தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதுவுமன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே.

குரு : சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாக இருக்கத் தக்கதாக,


விசு: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். குரு: ஜெபிப்போமாக.

எங்கள் அடைக்கலமும் பலமுமாகிய சர்வேசுரா, உம்மை நோக்கிக் கூப்பிடுகிற சனங்கள் பேரில் கிருபை நோக்கம் பாலித்தருளும். அன்றியும் மகத்துவம் பொருந்திய அமலோற்பவக் கன்னிகையும், தேவதாயாருமான அர்ச். மரியம்மாள், அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச். சூசையப்பர், உமது அப்போஸ்தலர்களாகிய அர்ச். இராயப்பர், சின்னப்பர் முதலிய சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மன்றாட்டுகளுக்குத் தேவரீர் திருவுளமிரங்கி, பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், எங்கள் தாயாகிய பரிசுத்த திருச்சபை சுயாதீனம் பெற்றுத் தழைத்தோங்குவதற்காகவும் நாங்கள் செய்து வருகிற ஜெபங்களைக் கிருபைதயாபத்தோடு கேட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால். ஆமென். 

குரு : அதிதூதரான அர்ச். மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் துர்க்கருத்தையும், அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு, சர்வேசுரன் பசாசுக்குக் கற்பிப்பாராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகில் சுற்றித் திரியும் பேயையும், மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக. ஆமென். 

குரு : சேசுவின் மகா பரிசுத்த இருதயமே, 

பரி: எங்கள் பேரில் இரக்கமாயிரும். (மும்முறை)

ஆமென்.