அந்நாட்டில் ஓர் அணைக்கட்டு அங்கேயுள்ள மதகை ஒரு பாசாசு தனது பிடியில் வைத்திருந்தது
மதகை திறக்க திருவுள சீட்டு போட்டு அதை எடுத்து யார் பெயருக்கு விழுகிறதோ அவரை பலி கொடுப்பது வழக்கம்
ஒரு முறை மன்னனின் மகளுக்கு சீட்டு விழுந்தது
அரண்மனை சோகத்தில் ஆழ்ந்தது படை வீரரான புனிதர் ஒரு வெண் குதிரை கேட்டார் கொடுத்தால் தான் மன்னன் மகளை காப்பாற்றுவேன் என்றார்
குதிரை வழங்கப்பட்டது புனித தேவமாதாவிடம் ஒரு மன்றாட்டு வைப்பார் அதேதெனில் தாயே என் இக்கட்டில் எனக்கு துணை நிற்க வேண்டும் என்பதாகும் எனவே அவரது படத்திற்கு பின்புலத்தில் மாதா படம் இருக்கும்
மாதாவை வேண்டிக் கொண்டு மதகை பிடித்திருந்த பசாசை குதிரையிலிருந்தபடி தனது ஈட்டியால் குத்திக் கொன்றார் தலையை நசுக்கும் தேவதாயின் வல்லமையால் அந்த புதுமையை நிகழ்த்தினார்
புனித ஜார்ஜியார் மூன்று முறை கொலைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்
முதல் முறை உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒரு மலை உச்சியில் வீசினர்
வீரர்கள் மலை அடிவாரத்தை அடையும் போது உயிருடன் அவர்கள் முன் தோன்றி கிறிஸ்துவே மெய்யான தேவன் என போதித்தார்
இரண்டாம் முறை ஈயம் குங்கிலியம் கந்தகம் கலவையில் புனிதரை போட்டு காய்ச்சி சாகடித்தான்
புனிதர் மன்னர் முன் தோன்றி மெய்யான கடவுள் கிறிஸ்து மட்டுமே என போதித்தார்
மூன்றாம் முறை கடவுள் அவருக்கு அனுமதித்தபடி தலை வெட்டுண்டு வேதசாட்சியானார்
இப்புனிதரை கீழை திருச்சபையார் கத்தோலிக்கர் இசுலாமியர் வழிபடுகின்றனர்
இடைக் காலத்தில் கத்தோலிக்கம் இவர் புனிதரல்ல என அறிவித்தது கீழை திருச்சபையார் அந்த அறிவிப்பை திரும்ப பெறச் செய்தனர்