1. செபமாலைக்கு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வலிமை உண்டு என்று வரலாறே எண்பித்துள்ளது. சோவியத் படைகன் ஆஸ்திரியாவை அபகரித்துக் கொண்டனர். மக்கள் செபஇயக்கத்தினால் அதை எதிர்க்கொண்டனர். நாள்தோறும் செபமாலை சொல்வதாக பெரும் தொகையினர் வாக்களித்தனர். அதன் விளைவு 1955 மே மாதம் 13ஆம் தேதி பாத்திமா காட்சியின் ஆண்டு நாளில் சோவியத் படைகள் வாபசாக தொடங்கின. சில நாளில் எல்லா படைகளுமே வெளியேறின. இதை கண்டு உலகமே வியந்து போனது. ஆனால் திரேசா நைமன் அம்மையார் வியப்படையவில்லை. ஐந்து காய வரம் பெற்ற அப்புனிதை “சோவியத் ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவைக் காப்பாற்றியது செபமாலை தான்” என்று பெருமிதத்துடனும் ஐயமின்றியும் அறிக்கையிட்டார்.
2. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 1964லில் புனித வாரம் முழுவதும் நடைபெற்று செபமாலை பவனிகள் ரஷியாவுக்கு இரையாகயிருந்த பிரேசில் நாட்டை காப்பாறின. காரணம் கியூபாவில் காஸ்ட்ரோ செய்தது போல பிரேசில் நாட்டையும் ரஷியாவுக்கு அடிமையாக்க அதன் அதிபர் யோவாவோ கூலார்ட் திட்டமிட்டிருந்தார். அதை திருச்செபமாலை தான் தவிடு பொடியாக்கியது..
அயர்லாந்தில் நடைபெற்ற மதகலவரத்தின் போது என்ன நடந்தது தெரியுமா? ஒரு குருவுக்கு இடம் தந்தாலோ, அல்லது திருப்பலியில் பங்கேற்றாலோ சித்திரவதைக்குள்ளாகி இறந்தனர். அவ்வேளையில் செபமாலையைத் தவிர வேறு எந்தவிதத்திலும் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பமும் செபமாலை செய்தது. அதுவே எங்களது “உலர் திருப்பலி” என்றனர். இப்படியாக எத்தனையே வரலாற்று நிகழ்வுகளை சான்று பகரலாம்.
3. எண்ணிக்கையில் அதிகமான வேறு மதத்தை சார்ந்தவர்கள் 1571 அக்டோபர் 7தேதி லெபாண்ட்டாவில் கிறிஸ்துவப் படைகள் முறியடித்த போது அன்று வரை தோல்வியே அறிந்திராத அவர்கள் தாக்கப்பட்டபோது ஐந்தாம் ஆம் பத்திநாதர் என்ன சொன்னார்? உரோமையில் அமர்ந்தபடியே லேபாண்ட்டோ வெற்றியை காட்சியில் கண்டு “செபமாலையின் வெற்றி இது” என்றார். அதன் நினைவாக நிறுவப்பட்டதே செபமாலை அன்னை திருநாள் -அக்டோபர் 7.
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!