"பொறாமையும் கட்சிமனப்பாண்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லா கொடுஞ்செயல்களும் நடக்கும்-யாக்3-16"
இன்று சமுதாயங்களில் ஏற்படுகின்ற பகைமைகளின் ஆணிவேர் பொறாமையே
"பொறாமை கொண்டோர் தீயோர்;பிறரை புறக்கணித்து முகத்தை மறுபக்கம் திருப்பிகொள்வர்-சீரா14:8
"பொறாமையானது பகைமை,பிரிவினை,அடிதடி,பில்லிசூன்யம்,கொலைவெறி வரை நம்மை கொண்டுசெல்கிறது.
பொறாமை கொள்வோர் தமது வளர்ச்சியில் அக்கரை கொள்ளாமல் பிறரை பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டே அழிவர்.
சகோதரர்களிடையே,
நண்பர்களிடையே,
உறவினர்களிடையே,
ஊராரிடையே,
வியாபாரிகளிடையே,
தொழில்முனைவோர்களிடையே
பொறாமை ஏற்படுதால் தான் பிளவுகளும் அழிவுகளும் ஏற்படுகிறது.
நம்மை விட படிப்பிலே,
வயதிலே,
பணத்திலே,
அந்தஸ்திலே,
பாரம்பர்ய கௌரவத்திலே
குறைந்தவன் வளர்ந்துவிட்டால் நம்மால் அவனை பாராட்டமுடிகிறதா?
சகோதரர் பெரிய வீடுகட்டினால் மகிழமுடிகிறதா?
அடுத்தவீட்டுகாரர் நவீனகார் வாங்கினால் வாழ்த்த முடிகிறதா?
இந்த கேள்விகளுக்கு ஆம் என சொல்லமுடிகிறதென்றால் நீங்கள் பொறாமையை வென்றவர்களே,
பொறாமை, முதன்மையான பாவங்கள் என்றும் அறியப்படுகின்ற ஏழு கொடிய பாவங்களில் (Seven deadly sins) ஒன்று ஆகும். கத்தோலிக்கத் திருச்சபை பாவத்தை இரண்டு முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது. அற்ப பாவம் மற்றும் சாவான பாவம்.
இதில் சாவான பாவம் மிகவும் கடுமையானவை எனவும். இது அருள் வாழ்வை அழித்துவிடக்கூடியவை என்று கருதப்படுவதோடு ஒப்புறவு அருட்சாதனத்தின் வழியாக தீர்க்கப்படவில்லை என்றால் அல்லது முழுமையான பாவ வருத்தத்தின் வழியாக மன்னிக்கப்படவில்லை என்றாலோ முடிவற்ற நரகத்தை அடைய நேரிடும் என்று திருச்சபை எச்சிரிக்கிறது.
சாவான பாவங்களை செய்ய தூண்டுவதில் முதலிடத்தில் இருப்பது பொறாமையே,
ஆகவே நண்பர்களே,இக்கொடிய பொறாமையை விட்டுவிடுங்கள்,
வேதாகமம் நம்மிடம் வலியுறுத்துவதும் இதுவே.
"...ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும் ஒருவர்மீது ஒருவர் பொறாமைபடாமலும் இருப்போமாக-கலா5:26
ஆமென்