திருமணி ஆராதனை.

தொடக்க செபம்.

எனதன்பான சேசுவேஎன் ஏக நேசமேஎங்கள் பாவங்களினாலேயும்அசட்டைத்தனத்தினாலேயும் உமது நேச இருதயத்திற்கு நாங்கள் கொடுக்கிற கஸ்தியின் நிமித்தம் நீர் உமது மனம் நொந்து பெருமூச்செறிந்து என்னோடு துக்கப்படும்படி ஒருவரைத் தேடிப் பார்த்தேன்அப்படிப்பட்டவர் ஒருவரையும் காணேன்எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி ஒருவரைத் தேடினேன்அப்படிப்பட்ட ஒருவரும் கிடைக்கவில்லை” (சங் 68.21) என்று வசனித்தீரேஉம்முடைய இந்த முறைப்பாட்டைக் கேட்டு என் இருதயம் துக்க சாகரத்தில் அமிழ்ந்து, சிநேக அக்கினியால் சுவாலை விட்டெரிந்து என்பேரில் வைத்த சிநேகப் பெருக்கத்தால்சற்பிரசாதத்தில் இராப்பகலாய் வீற்றிருக்கும் உட்முடைய திரு இருதயத்திற்கு ஆறுதல் தர ஆசையாயிருக்கிறேன்.
துயரம் நிறைந்த சேசுவேதேவரீருடைய துக்கப் பெருக்கத்திற்கு காரணம் என்னுடைய கணக்கற்ற பாவத் துரோகங்களல்லவோஆயினும்என் அன்பான சேசுவேஎன் பாவங்களைப் பற்றி என் மேல் கோபமாயிராமல் நீர் எனக்காகப் பட்ட திருப்பாடுகளைப் பார்த்துபட்சமுள்ள தகப்பனார் தனது ஊதாரிப் பிள்ளையை ஏற்றுக்கொண்டது போல (லூக். 15.20.24) என்னையும் ஏற்றுக்கொண்டு என் பேரில் இரக்கமாயிரும்பாவியாயிருந்த மரிய மதலேனம்மாளுக்கு நீர் சொன்னதுபோல எனக்கும் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லும்உமது திரு இருதயத்தின் நேசமகள் மார்கரீத் மரியம்மாளுக்கு என் மகளேஎன் இருதயத்துக்கு ஆறுதலாக ஒரு உயிர்ப்பலியைத் தேடுகின்றேன்உன்னை நான் தெரிந்துகொண்டேன்.” என்று நீர் சொல்லியது போல் ஏழைப் பாவியாகிய எனக்கும் சொல்லி என்னை உம்முடைய திரு இருதயத்துக்குள் ஏற்றுக் கொள்ளும்அங்கே எப்போதும் நான் இருந்து சீவிக்கும்படி என்னை ஆசீர்வதித்தருளும்உமது அன்பினால் என் இருதயத்தைப் பற்றியெரியச் செய்தருளும்.
சேசுவின் மதுரமான திருஇருதயமேஎன் சிநேகமாயிரும்.

என் நல்ல சேசுவேஎனது பாவங்களுக்குத் துக்கப்பட்டு உமக்காக சிநேகத்தால் எரிந்துஉம்முடைய பிரிய மகளிடத்தில் நீர் கேட்டதுபோல் இந்த ஒருமணி நேரத்தில் நீர் ஜெத்சமனித் தோட்டத்தில் பட்ட துக்க துயரத்தோடும்சொன்ன செபத்தோடும்நானும் சேர்ந்திருக்கும்படி எனக்குக் கிருபை செய்தருளும்.

வியாகுலம் நிறைந்த தேவ தாயாரேஉம்முடைய திருக்குமாரன் ஜெத்சமனித் தோட்டத்தில் தனிமையாய் மரணமட்டும் துக்கமாயிருந்த நேரத்தில்அவருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்வதற்கு இயலாமல் நீர் பட்ட துக்கத்தை நினைத்து இந்தத் திருமணி ஆராதனையில் உம் திரு இருதயத்தோடு என் இருதயத்தையும் ஒன்றித்துக்கொள்ளும்உம்மோடு அழுது பிரலாபித்து சற்பிரசாதத்தில் யாரும் கவனியாமல் இருக்கிற உமது திருமகனை நேசித்து அவருக்கு ஆறுதல் கொடுக்கும்படி எனக்குத் தயை செய்யும்.

உத்தம மனஸ்தாப மந்திரம்:

சர்வேசுரா சுவாமிதேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன்இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன்.

எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லைஎனக்கு இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லைஇனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.

மேலும் எனக்குப் பலம் போதாமையால்சேசுநாதர் சுவாமி பாடுப்பட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்துஎன் பாவங்களையெல்லாம் பொறுத்துஎனக்கு உம்முடைய வரபிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்.

திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.
ஆமேன்.

பொறுத்தருளும் கர்த்தாவே உமது சனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும்என்றென்றைக்கும் எங்கள் பேரில் கோபமாயிராதேயும் சுவாமிதயவாயிரும் சுவாமி தயவாயிரும்.


முதலாம் கால் மணி.

என் ஆத்துமம் மரணமட்டும் துயரத்தால் நிறைந்திருக்கிறது”. மத். 26.39

தியானம்.

நேச இயேசுவேநீர் எங்கள் மேல் வைத்த அன்பினால்எங்களோடு உலக முடிவுபரியந்தம் வசிக்கும்படிக்கும்எங்கள் ஆத்தும போசனமாகவும்எங்கள் இருதயம் உமது நேசத்தால் எரியும்படிக்கும் திவ்விய சற்பிரசாதத்தை ஏற்படுத்தினீர்.

அதன்பிறகுஅதே இரவில் எங்களைப் பாவத்திலும்பசாசின் அடிமைத்தனத்திலும் நின்றுமீட்பதற்காக புங்காவனத்திற்கும் எழுந்தருளி முகங்குப்புற சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை உயிர்ப்பலியாக உமது பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தீர்.

என் ஆத்துமமேபாவத்தின் குரூரமும் கொடுமையும் எத்தகையதென்று இதிலிருந்து நீ அறிந்துகொள்ளக்கூடும்சேசுக்கிறீஸ்துநாதர் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படி அவை எல்லாவற்றையும் தம்மேல் சுமந்துகொண்டார்அப்பொழுது இந்தப் பாவங்களின் அழுக்கினாலும், ””அரோசிகத்தினாலும் அவலட்சண குஷ்டரோகம் நிறைந்த ஒரு தேவதுரோகியைப் போல பயங்கரமான துக்க துயரங்களுக்குள்ளானார்அப்பொழுது இந்தத் துயரத்தைத் தாங்க மாட்டாமல் முகங்குப்புற விழுந்து மரணமட்டும் என் ஆத்துமம் துயரத்தால் நிறைந்திருக்கின்றது” (மத். 26.38) என்று வசனித்தார்பின்னும் அதைப் பொறுக்க இயலாததுபோல இரத்தத் துளிகளாக அவருக்கு வியர்வையுண்டாகி நிலத்தில் சிந்திற்று” (லூக். 22.44). சேசுக்கிறீஸ்துநாதர் தாம் பட்ட இந்தப் பாடுகளைப்பற்றி அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளுக்குப் பின்வருமாறு வசனித்தார். "பாவத்தினுடைய குரூரத்தையும்அரோசிகத்தையும் மனிதர் அறியாதபடியால் நான் பூங்காவனத்தில் பட்ட துக்கத்தை விளங்கிக்கொள்ள முடியாது”.

அது மட்டுமல்லஇவ்வளவு கடுமையான வேதனைகளைப் பட்ட பிறகும் சதாகாலத்துக்கும் நரகத்திற்குப் போகிற திரளான மனிதர்களைப் பற்றி நினைத்து இன்னும் துக்கத்துக்குள்ளாகி அதிகமதிகம் செபித்தார். (லூக். 22.43).

இரக்கம் நிறைந்த சேசுவேஎங்கள் பாவங்களை உமதுமேல் சுமந்துகொண்டு அதற்கு உத்தரிக்கும்படி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது உமது பிதாவின் பயங்கரமான பார்வையை சகிக்க முடியாமல் என் தேவனேஎன் தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?” (மத். 27.46) என்று சொல்லிக் கதறினீராகில், பாவத்தில் அமிழ்ந்தி மரணத் தறுவாயிலிருக்கிறவர்களுக்கு அது எவ்வளவு பயங்கரமுள்ளதாயிராது.

மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திரு இருதயமேமரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும்.

என் ஆத்துமமேஉனக்கு இவ்வளவு நேசம் காட்டுகிற தேவனுக்கு விரோதமாக எப்படிப் பாவம் செய்யத் துணிந்தாய்நீசத்தனமாக திரும்பவும்திரும்பவும் எத்தனையோதரம் பாவம் செய்தாய்! ஆஎன் நேச சேசுவேஎன் பாவங்களைப் பொறுத்தருளும்இனிமேல் உம்முடைய உதவியால் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டேன் என்று கெட்டியான பிரதிக்கினை செய்கின்றேன்.

வியாகுல மாதாவேஎன் நேசத்தாயேஎனக்குக் கிருபை செய்தருளும்.

சேசுநாதருடைய திருப்பாடுகளின் செபம்.

எங்களுக்காக மனிதனாய்ப் பிறந்துஎங்கள் மேல் வைத்த அன்பினால் சிலுவையில் அறையுண்டு உயிர்விட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

எங்களுடைய பாவச்சுமையை தேவரீர் சுமந்துஅதன் கனத்தால் தேவரீருடைய இருதயம் நைந்துமரணமட்டும் துக்கமாய் உம்முடைய சரீரம் இரத்த வியர்வையில் தோய்ந்து, ஜெத்சமனித் தோட்டத்தில் கடின அவஸ்தைப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

பூங்காவனத்தில் மிகுந்த துக்கப்பட்டு பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கடவது” என்று பிதாவை வேண்டிக்கொண்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்டுமுத்தமிட்ட துரோகியாகிய யூதாஸ் என்பவனால் யூதருக்குக் கையளிக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சங்கிலிகளாலும்கயிறுகளாலும் கட்டப்பட்டு வழியில் தேவ தூஷனை சொல்லி அடிக்கப்பட்டு ஒரு குற்றவாளி போல நீசமான மரணத் தீர்ப்புப்பெற இழுத்துக்கொண்டு போகப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

அன்னாஸ்கைப்பாஸ்பிலாத்துஏரோது இவர்கள் முன்னால் அவமானமாய் கொண்டுபோய் நிறுத்தப்பட்டுஅநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டுகன்னத்தில் அறையப்பட்டுநிந்திக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

திருமுகம் மூடப்பட்டவருமாய்சட்டைகள் கழற்றப்பட்டவருமாய்கற்றூணில் கட்டுண்டு மிகுந்த நிஷ்டூரத்தோடு அடிக்கப்பட்ட இயேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

முள்முடி தரிக்கப்பட்டுதிருமுகத்தில் துப்பப்பட்டுதிருச்சிரசில் மூங்கிற்றடியினால் அடிக்கப்பட்டுஓர் பரிகாச இராஜாவாக அவமானப்படுத்தி நிந்திக்கப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய திருச்சரீரமெல்லாம் அடிகளால் கிழிக்கப்பட்டுதிருஇரத்தம் வெள்ளமாய் ஓடயூதர்களுடைய கோபம் தீரும்படியாய் பிலாத்து என்பவனால்இதோ மனிதன்” என்று யூதர்களுக்குக் காட்டப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீர் அவர்களுக்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்திருந்தும்இருதயம் வெடிக்கும்படி தேவரீருடைய திருச்சரீரம் கிழியுண்டிருந்ததைக் கண்டும்உம்மை விட்டுக் கொலைகாரனான பரபாசைத் தெரிந்துகொண்டதைப் பார்த்தும் அதிக துயரமடைந்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பு பெற்ற சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

நிந்தையும் அவமானமுமான சிலுவையைச் சுமந்து மிகவும் சாதுள்ள ஓர் செம்மறிப் புருவையைக் கொலைக்களத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறதுபோல கொண்டு போகப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

அகோர வேதனையினாலும்தேகத்தில் இரத்தமெல்லாம் குன்றிப்போனபடியாலும்சிலுவையின் பாரத்தால் அநேகதரம் கீழே விழுந்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையில்தேவரீருடைய பரிசுத்த வியாகுல மாதாவை சந்தித்துப் பொறுக்க முடியாத கஸ்தியும்உருக்கமும் அனுபவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையை சுமந்து கொண்டு போகத் தேவரீருக்கு உதவி செய்த சீரேன் நகர சீமோனின் இருதயத்தை தேவசிநேக அக்கினியால் மூட்டி எரியப்பண்ணின சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

வேற்றுருவாயிருந்த தேவரீருடைய திருமுகத்தை வெரோணிக்கம்மாள் துடைத்தபொழுதுஅந்தத் துகிலிலே உம்முடைய திருமுகம் அற்புதமாய் பதியச் செய்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையைச் சுமந்துகொண்டு போகையில் உம்மைப் பார்த்து அழுதப் பரிசுத்தப் பெண்களுக்கு ஆறுதல் சொன்ன சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

உம்முடைய காயங்களோடே ஒட்டியிருந்த ஆடைகள் உரியப்பட்டதினாலே அகோர வேதனையும் மானபங்கமும் அனுபவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

திருப்பாதங்கள் கொடூர இரும்பாணிகளாலே துளைத்து அறையுண்டுஇரு கள்வர் நடுவில் சிலுவையில் உயர்த்தப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையில் தேவரீர் அனுபவித்த கடைசி மரண அவஸ்தை நேரத்தில் எங்கள் மேல் கொண்ட இரக்கத்தால் உம்முடைய திருமாதாவை எங்களுக்குத் தாயாகக் கையளித்துஅவருடைய தயாளமுள்ள மாதாவுக்குரிய அன்புக்கு எங்களை ஒப்புக்கொடுத்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீரோடு சிலுவையிலே அறையுண்டு பச்சாதாபக் கள்ளனுக்கு மோட்ச இராச்சியத்தை அன்றே வாக்களித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய துக்க சாகரத்தில் உம்முடைய பரமபிதாவினால் கைவிடப்பட்டுஉம்முடைய தாகத்துக்கு மனிதர் கசப்பான காடியைக் கொடுக்கஅந்நேரத்தில் எவ்வித ஆறுதலும் இன்றித் தவித்த சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சிலுவையில் மரித்த எங்களுடைய பாவப் பொறுத்தலுக்காக தேவரீருடைய உயிரைப் பரமபிதாவுக்குப் பலியாக்கின சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

எங்கள் மேல் சொரிந்த தேவசிநேகத்தினாலே உம்முடைய உயிரை எங்களுக்கு பலியாக்கின பின்னும்உயிரற்ற உமது திரு இருதயம் ஈட்டியால் குத்தப்பட்டுக் கடைசித்துளி இரத்தமும்தண்ணீரும் சிந்திய சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய திருச்சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டு வியாகுலம் நிறைந்த உம்முடைய திருமாதாவின் மடியில் வளர்த்தப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

தேவரீருடைய திருச்சரீரமானது பரிமளத் தைலத்ததால் பூசப்பட்டுபரிசுத்த கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட சேசுவேஎங்கள்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

செபிப்போமாக.

மதுரமான சேசுவேதேவரீருடைய பரிசுத்த பாடுகளினாலும்சிலுவை மரணத்தினாலும்திருக்காயங்களினாலும்திரு இரத்தத்தினாலும் எங்களைச் சடுதி மரணத்தினின்றும்நிர்ப்பாக்கிய சாவினின்றும் காப்பாற்றிபாவத்தினின்றும்நித்திய நரகத்தினின்றும் இரட்சித்துஎன்றென்றும் உமது திரு இருதயத்திற்குள் எங்களை வைத்துக் காப்பாற்றியருளும் சுவாமிஆமென்.


இரண்டாம் கால் மணி.

என் பிதாவே! இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்ஆனால் என் மனதின்படியல்லஉம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்!” (மத். 26.38)

தியானம்.

நேச சேசுவேமனிதருடைய ஆங்காரத்தினாலேயும்கீழ்ப்படியாமையினாலேயும் பாவம் விளைந்தபடியால்உம்முடைய தாழ்மையான கீழ்ப்படிதலினால்அதற்கு உத்தரித்து பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றக் கிருபைகூர்ந்தீரேஉம்முடைய திருச்சரீரத்திலிருந்து இரத்த வியர்வை வடிந்துஉம்முடைய திரு இருதயம் துக்கத்தால் நொறுங்கி நடுநடுக்கமுற்றுப் பயங்கரத்துக்குள்ளாகி, ”என் பிதாவேஇந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று வசனித்தீரேஉம்முடைய மனித சுபாவத்துக்குப் பயங்கரமான கடின வேதனைகளைக் கையேற்றுக் கொண்டு நீர் தாழ்மையாகச் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் சமயத்தில் இந்தக் கசப்பான பாத்திரத்தைப் பிதாவின் சித்தப்படி விருப்பத்தோடு கையேற்றுக்கொண்டீரே!

!எனது ஆத்துமமேஉன்னுடைய சகல துக்க துயரங்களிலும் சேசுக்கிறீஸ்துநாதர் உனக்குக் காட்டுகிற நேசத்தைப் பார்த்துஇவ்வளவு நேசமுள்ள தேவன் எனக்கு நன்மையன்றி தீமை ஒருபோதும் வரவிடமாட்டாரென்று விசுவசிப்பாயாகசேசுநாதர்சுவாமி நமக்காகப்பட்ட துக்கத்தை நினைத்து நம்முடைய துக்கங்களை அவருடைய திருப்பாடுகளோடு சேர்ப்போம்இன்னும் அவர் பூங்காவனத்தில் செபித்ததுபோல் நாமும் அவரோடு செபிப்போம். ”என் பிதாவேஇந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்ஆனால் என் சித்தப்படியல்லஉம்முடைய சித்தப்படியாகட்டும்என் பிதாவேநான் இந்தப் பாத்திரத்தைக் குடித்தாலொழிய அது நீங்கிப்போகக் கூடாதாகில்உமது சித்ததப்படியே ஆகட்டும்”.

என் அன்பான தாயாரேஉம்முடைய திருக்குமாரனின் தூய இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவும்அவருடைய திருப்பாடுகளைப் பார்த்து சகலப் பாவச் சோதனைகளிலுமிருந்து என்னை இரட்சித்துக்கொள்ளும்அவருடைய மகிமைப் பிரதாபத்தால் என்னை உடுத்தியருளும்உம்முடைய புண்ணியங்களால் என்னை அலங்கரியும்உம்முடைய திருக்கரங்களில் என்னை ஏந்திநான் என்னுடைய சீவியத்தை உம்முடைய திருக்குமாரனின் சித்தப்பிரகாரம் நடத்த எனக்குக் கிருபைபுரிந்து அவருடைய திரு இருதயத்துக்கு என்னையும் ஓர் உயிர்ப்பலியாக ஒப்புக்கொடுத்தருளும்.

நன்மரணமடைய சேசுநாதரை நோக்கி செபம்.

மதுரமான சேசுவேதயை மிகுந்த ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதரே, மிகுந்த மனஸ்தாபப்பட்டுக் கலங்கிப் பிரலாபித்து உமது திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிற அடியேனைப் பாரும்பாவத்துக்கு ஆசைப்பட்டு உமது நேச அழைத்தலைக் கவனியாமல்தேவரீரை இப்பொழுது நான் புறக்கணித்து நிந்திக்கலாம்ஆனால் ஒருநாள் நான் சாவது நிச்சயம்நான் நினையாத நேரத்தில் மரணம் வந்து என்னைப் பிடித்துக்கொள்ளும்மின்னலலைப் போலும்அதிதுரிதமாக அது வந்தென்னைக் கைப்பற்றும்அதன்பின் எனது தீர்வை நடக்கும்அது மோட்ச இன்பத்திற்கோநித்திய நரக வேதனைக்கோ என்னை நிச்சயிக்கும்.

என் அன்பான சேசுவேஎன் பலவீனத்தையும்பாவச் சார்பையும் அறிந்திருக்கிற நான்என் நிர்ப்பாக்கியத்தில் உம்மையேஓ சேசுவேஉலக சீவியத்தின் முக்கியமான நேரமாகிய மரண அவஸ்தையில்என்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சி மன்றாடுகின்றேன்.

என் கால்கள் இரண்டும் அசைவின்றிஉஷ்ணமின்றி என் படுக்கையிலே கடினமாய் வலித்துநான் இவ்வுலகில் செய்த பயணம் முடிந்ததென்று காட்டும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கைகளிரண்டும் அதிர்ந்துநடுநடுங்கிப் பலனற்றுகடைசிச் சரணமாக ஏந்தியிருக்கிற உமது திருச்சிலுவை சுரூபத்தை கைநெகிழ விடும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் உதடுகள் குளிர்ந்துகறுத்துக்கிடுகிடுத்துஉமது திருநாமத்தைக் கடைசிவிசையாய் உச்சரிக்கும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கன்னங்களிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிமரணத்தின் அடையாளமாய் வெளுத்துஎன் தலையோடு மயிரொட்டிஎன் நெற்றியிலே வியர்வை எழஎன்னைச் சூழ்ந்து நிற்பவர்களுக்குப் பயங்கரமும் அருவருப்பும் வருத்துவிக்கும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கண்களிரண்டும் பஞ்சடைந்துஅகோரமாய்த் திகைத்துபயங்கரமாய் விழித்துஇவ்வுலகத்திலுள்ள பொருட்களை ஒன்றும் காணாமல்தன்னந்தனியே அச்ச நடுக்கத்தோடு நான் சரணடைகிறபோதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் காதிரண்டும் கேள்வியற்றுமனித சம்பாஷனையை விட்டுப் பிரிந்துநீர் ஊழியுள்ள காலம் இடப்போகிற தீர்வையைக் கேட்கத் தயாராகும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

மயங்கும் என் மனதிலே அச்சம் உறுத்தவீண் எண்ணங்களும் அவலட்சணத் தோற்றங்களும் தோன்றிபயங்கரமாயிருக்கும் அந்நேரத்தில்தயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

இப்பயங்கரத்தினால் என் இருதயம் கலங்கியிருக்கும் வேளையில்பசாசு என் பாவங்களை மிகுவித்துஉமது நீதியைப் பெருக்கிஉமது அளவில்லாத கிருபையை மறைத்துநான் அவநம்பிக்கையாய்ச் சாக என்னோடு கடைசி யுத்தம் நடத்தும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாயிருக்கும் போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

மரணம் மட்டும் கடைசிக் குறியாக என் கண்களிலே நின்று கண்ணீர் சொரிந்து விழஅந்தக் கண்ணீரை என் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு பயங்கரமான அவ்வேளையில் என்னைக் கைவிடாதேயும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சுவாசம் விட நான் படும் பாட்டையும்மரண இக்கட்டுக்குள்ளே அகப்பட்டு நான் படும் வேதனையையும் என் பாவங்களுக்குப் பரகாரமாகநான் அனுபவிக்கிற தண்டனையாக ஏற்றுக்கொண்டு என்பேரில் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிடநான் கடைசி மூச்சை வாங்கிஎன் ஆத்துமம் சரீரத்தை விட்டுப்பிரிய கடும் போர் புரியும்போது உமதுபேரில் எனக்குள்ள சிநேகத்தால் உம்மிடம் வர நான் படும் பிரயாசையை ஏற்றுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் சுற்றத்தார்சிநேகிதர் என்னைச் சூழ்ந்துகொண்டுஅலறிப் பதறி மாரடித்து எனக்காக உம்மை மன்றாடிஐயோ சாகிறானே என்று சொல்லியழும்போதுஎன்மேல் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

குளிர்ந்த உணர்வற்ற என் சரீரத்தினின்று என் ஆத்துமம் பிரியும்போதுநான் அதை உம் திரு இருதயத்துக்கு நேசப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன்என் அன்பான பலியை ஏற்றுக்கொள்ளும் சுவாமி.  தயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

நான் நினையாதபோது திடீரென்று மரணம் எனக்கு வந்தாலும்ஆண்டவரேஎனக்கு உதவ தீவிரித்து வரத் தாமதியாதேயும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

கடைசியாய் என் ஆத்துமம் மகிமைப் பிரதாபமுள்ள உமது சமூகத்திலே நிறுத்தப்பட்டுதன்னுடைய தீர்வையை கேட்க நடுநடுங்கி நிற்கும்போது மதுரமான சேசுவேஎனக்கு நடுவராயிராமல்என் இரட்சகராய் இரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் நல்ல தகப்பனேஎன்னைப் புறக்கணித்துத் தள்ளாமல்என்னைக் கிருபாகடாட்சத்தோடேபார்த்து உம்மை என்றென்றும் வாழ்த்தித் துதிக்க நான் உமது இராச்சியத்திற்கு வரப்பண்ணியருளும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

செபிப்போமாக.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல சர்வேசுராஎங்கள் மரண நேரத்தையும்இடத்தையும்சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு மறைக்கத் தேவரீருக்குச் சித்தமாயிற்றுஆகையால் மரண நேரம் வரும்போது நாங்கள் இஷ்டப்பிரசாத அந்தஸ்திலே மரித்துஉமது நித்திய மகிமைப் பாக்கியத்திற்குப் பங்காளிகளாகிறதற்குஎப்பொழுதும் பரிசுத்த புண்ணிய சீவியம் சீவிக்கும்படி எங்களை ஆசீர்வதிக்க வேணுமென்று தேவரீரைப் பிரார்த்திக்கிறோம்இந்த மன்றாட்டுகளை சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளையும்திரு இரத்தத்தையும்திருக்காயங்களையும் பார்த்துபூங்காவனத்தில் அவர் பட்ட மரண அவஸ்தையினாலேயும் எங்களுக்குத் தந்தருள அவருடைய திருநாமத்தினாலே வேண்டிக் கொள்ளுகிறோம்ஆமென்.


மூன்றாம் கால் மணி

என்னோடுகூட ஒரு மணிநேரமாவது விழித்திருக்க உங்களால் முடியாமல் போனதோ?”  (மத். 26.40)

தியானம்.

என் ஆத்துமமேசேசுநாதர் சுவாமி தம்முடைய நேச மகள் அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளுக்குப் பெருமூச்செறிந்து சொன்ன வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பாயாக. ”என்னுடைய திருப்பாடுகளில் நான் பட்ட சரீர வேதனைகளைப் பார்க்கிலும் பூங்காவனத்தில் என் இருதயத்தில் அதிகம் பாடுபட்டேன்மனிதரின் பாவங்களையெல்லாம் என்மேல் சுமந்துகொண்டு சர்வேசுரனுடைய அதிபரிசுத்ததனத்திற்கு முன் நின்றேன்அவரும் என் மாசில்லாத்தனத்தை அறிந்தபோதிலும்அவரது உண்மையான நீதியின்படி பாவங்களுக்காக கசப்புள்ள காடி நிறைந்த பாத்திரத்தைக் குடிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்நான் பட்ட துக்க வேதனைகளை எந்த மனிதனாலும் அறிந்துகொள்ள முடியாது.

பொறுக்க முடியாத இந்தத் துக்க துயர வேளையில் தம்முடைய சிநேகிதர்களாகத் தெரிந்துகொண்ட சீஷர்களிடம் மும்முறை திரும்பி வந்தார்அப்பொழுது அவர்கள் யாதொரு கவலையின்றித் தூங்கிக் கொண்டிருக்கிறதைக் கண்டுஅதிகத் துயரத்திற்குள்ளானார்.

என்னோடு ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியாதோ?” என்று முறையிட்டார்இப்படி ஆண்டவர் பட்ட பாடுகளை நாம் நினைத்து இந்தத் திருமணி தியனப்பக்தியால் அவருக்கு ஆறுதல் தரும்படி அவர் அர்ச்மர்கரீத் மரியம்மாளிடம் கேட்டுக்கொண்டார்.

எல்லோரும்சேசுவேஉமக்காகவே சீவிக்கிறேன்உமக்காகவே மரிக்கிறேன்சீவியத்திலும் மரணத்திலும் உம்முடையவனாகிறேன்.

சேசுவேபூங்காவனத்தில் அவர்கள் நித்திரையிலிருந்ததைக் கண்டு நீர் இவ்வளவு துக்கத்துக்குள்ளானீர் என்றால்நீர் எங்களைப் பற்றித் திவ்விய நற்கருணையில் ஒரு மறியல்காரனைப் போல இராப்பகலாய் வீற்றிருந்தும் மனிதரிடமிருந்து உமக்குக் கிடைப்பது அசட்டைத்தனமும் அவமானங்களும்துரோகங்களுமேஉம் திரு இருதயத்துக்கு எவ்வளவோ துயரம் உண்டாக்குகிறதற்கு இவை காரணமாகின்றன.

மனிதரை இவ்வளவாக சிநேகித்த என் இருதயத்தைப் பார்அதற்குப் பிரதிபலனாக மனிதருள் அநேகரிடம் எனக்குக் கிடைக்கிறது என்னவென்றால்என்னுடைய சிநேக தேவதிரவிய அநுமானத்தின் மட்டில் அவர்களுக்குள்ள குளிர்ந்ததனமும்கவலையின்மையும்தேவ துரோகமும் தான்திருப்பாடுகளில் நான் பட்ட சகலப் பாடுகளைப் பார்க்கிலும் இவையே எனக்கு அதிக துக்கம் வருவிக்கின்றனஅவர்கள் கொஞ்சமாகிலும் என் நேசத்திற்குப் பிரதிநேசம் காட்டினால்... அவர்களைப் பற்றி இன்னும் கூடுமானால் அதிகம் பாடுபட நான் ஆசையாயிருக்கிறேன்.” என்று வசனித்தீரே!

ஐயோ எனது நேச சேசுவேசில சமயங்களில் செபம் பண்ணுவதற்கு அல்லது தேவ ஊழியத்தில் எந்தக் காரியத்திலாவது கவனம் இல்லாமல் நடக்கிறதற்கு ஒரு சோதனை வந்தால்அந்தச் சமயங்களில் நீர் துக்கத்தால் நிறைந்து என்னோடுகூட ஒரு மணிநேரமாவது விழித்திருக்க உன்னால் முடியாமல் போனதோ?”  என்று சொன்ன முறைப்பாட்டை நினைத்து உம்மை மெய்யாகவே சிநேகித்துஉமது பேரிலுள்ள சிநேகத்தால் அப்பாவ சோதனைக்கு இடம் கொடுக்காமலிருக்க எனக்குக் கிருபை செய்தருளும்.

எனது அன்பான சேசுவேஇனிமேல் நான் எவ்விடத்திலிருந்தாலும்இராக்காலங்களில் நான் எழுந்திருக்கும் சமயங்களில் எனக்காக திவ்விய சற்பிரசாதத்தில் வீற்றிருக்கும் உம்மை எப்பொழுதும் நினைத்து உமக்கு என்னுடைய நேசத்தைக் கொடுக்க உதவி செய்யும்சேசுவேநான் உம்மை நேசிக்கிறேன் ஞான விதமாய் உம்மை என் இருதயத்தில் பெற்றுக் கொள்ளுகிறதற்கும்கோவில்களுக்கு முன்பாகப் போகும்போது உம்மை நான் நினைத்து சங்கை மரியாதை செய்யவும்நேரமிருந்தால் கோவிலுக்குள்ளே போய்சேசுவேநான் உம்மை நேசிக்கிறேன் என்றாவது சொல்லவும்கூடுமானால் தினந்தோறும் உம்மை சற்பிரசாதத்தின் வழியாய் என் இருதயத்துக்குள் பெற்றுக்கொள்ளவும் எனக்குக் கிருபை புரியும்.

பரிகாரச் செபம்.

சேசுவேதெய்வீக இரட்சகரேஒரே விசுவாசம்ஒரே பரிகாரம்ஒரே சிநேகத்தின் ஆசையால் தூண்டப்பட்டு இங்கு ஒன்றுகூடி தங்களுடைய சொந்தத் துரோகங்களுக்காகவும்தங்கள் சகோதரராகிய சகல நீசப் பாவிகளுடைய துரோகங்களுக்காகவும்அழுது பிரலாபிக்கும் உமது பிள்ளைகளாகிய எங்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்நாங்கள் ஒருமனப்பட்டு இப்போது விசேஷித்த விதமாகச் செய்யவிருக்கும் வார்த்தைப்பாடுகள் உமது தெய்வீக இருதயத்தைத் தொட்டுஎங்கள் பேரிலும்உலகத்தின் பேரிலும்உம்மை சிநேகிக்காத சகல நிர்ப்பாக்கியர்களின் பேரிலும் உமது இரக்கத்தை அடைந்தருளும்படி செய்வீராக.

இன்றையிலிருந்து நாங்கள் எல்லோரும் வாக்களிப்பதாவது.

மனிதருடைய மறதிக்கும் நன்றிகெட்டதனத்திற்கும் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவ நற்கருணைப் பெட்டியில் தேவரீர் கைவிடப்பட்டிருப்பதற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

பாவிகளின் அக்கிரமங்களுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

துஷ்டர்களின் பகை விரோதத்திற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீர் பேரில் சொல்லப்படும் தூஷணங்களுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய தெய்வீகத்திற்கு செலுத்தப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய அன்பின் தேவத்திரவிய அநுமானத்தை அவசங்கைப்படுத்தும் தேவதுரோகங்களுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது பரிசுத்த சந்நிதியில் கட்டிக்கொள்ளப்படும் அவமரியாதைஅநாச்சாரங்களுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஆராதனைக்குரிய உயிர்ப்பலியாகிய தேவரீருக்குமனிதர் செய்கிற தீமை பக்கங்களுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய பிள்ளைகளுக்குள்ளே அநேகர் உமக்குக் காட்டுகிற அசட்டைத்தனத்திற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது நேச அழைப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது அன்பர் என்று சொல்லிக்கொள்ளுவோருடைய அவிசுவாசத்திற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீருடைய வரப்பிரசாதங்களை அவமதிப்பதற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்களுடைய சொந்த அவிசுவாசத்துக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

புத்திக்கு ஒவ்வாத எங்களுடைய மூடக் கல்நெஞ்சத்திற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை நாங்கள் நேசிக்க வெகுநாள் தாமதம் செய்ததற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பற்ற எங்கள் தன்மைக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஆத்துமங்கள் சேதமாவதினால் நீர் அடையும் கடுந்துயரத்திற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை எங்கள் இருதய வாசலண்டை வெகுகாலம் காக்க வைத்ததற்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை மனநோகச் செய்யும் நிஷ்டூர நிந்தைகளுக்குப் பரிகாரமாகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

அன்பின் மிகுதியினால் எங்கள் மத்தியில் தேவரீர் சிறைவைக்கப்பட்டிருப்பதற்காகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் விட்ட பெருமூச்சுகளுக்காகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் சிந்திய கண்ணீருக்காகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் அடைந்த மரணத்திற்காகநாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஜெபிப்போமாக.

சேசுவேதெய்வீக இரட்சகரே, ”எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி ஒருவரைத் தேடினேன்அப்படிப்பட்டவர் ஒருவரும் கிடைக்கவில்லை” என்னும் துயரமான முறைப்பாடு உமது திரு இருதயத்தினின்றல்லோ வந்ததுஇதோ நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எளிய ஆறுதலைக் கருணையுடன் ஏற்றுக்கொள்ளும்இனி உம்மை மனநோகச் செய்யும் எல்லாவற்றையும் நாங்கள் விலக்கிஎல்லாவற்றிலும்எல்லாவிடங்களிலும் நாங்கள் உமது பக்தியுள்ள பிள்ளைகளாக விளங்கும்படி எங்களுக்குத் துணைபுரியும்.


நான்காம் கால் மணி.

மனுமகன் பாவிகள் கையில் அகப்படுகிற நேரம் வந்துவிட்டதுஎழுந்திருங்கள்இவ்விடத்தை விட்டுப் போவோம்” (மத். 26.45-46).

தியானம்.

எங்கள் அன்பராகிய சேசுவேநாங்கள் பாவச் சமயங்களைத் தேடி விருப்பத்தோடு பாவத்தில் விழுகிறபடியால் அதற்குப் பரிகாரம் செய்கிறதற்காக உம்மைக் காட்டிக்  கொடுக்க வருகிற யூதாஸ் இஸ்காரியத்தோடும்உமக்கு இவ்வளவு வேதனையைக் கொடுத்துச் சிலுவையில் அறைகிறதற்கு ஆயத்தத்தோடு நிற்கிற யூதர்களோடும் விருப்பமாய்ப் போகிறீரோஎனது மதுர சேசுவேபாவ சோதனை அல்லது பாவ ஆசை எனக்கு வரும்போது பாவத்துக்காகப் பாடுபட்டு சிலுவையில் உயிர்ப்பலியாகியும்இன்னும் உலக முடிவு வரையில் சற்பிரசாதத்திலிருந்து தன்னைத் தானே உயிர்ப்பலியாக ஒப்புக்கொடுக்கிற உம்மை நான் நினைக்கும்படி கிருபை செய்யும்இந்த சற்பிரசாதத்தில் வீற்றிருந்துஉலக முழுவதிலும் அனைவரும் செய்கிற சகல பாவங்களையும் காண்கிறதாக யோசித்து மனுமகன் பாவிகளின் கையில் அகப்படுகிற நேரம் வந்துவிட்டதுஎழுந்திருங்கள்இவ்விடத்தைவிட்டுப் போவோம்” என்று நீர் சொன்ன இந்த வாக்கியத்திற்குக் காது கொடுத்துஅப்பாவச் சோதனையை விட்டு விலக எனக்கு உதவிபுரியும்.

நீர் என்னோடு கூட மெய்யாகவே இருக்கிறதை விசுவசித்துஉம்மேல் என் நம்பிக்கையை வைத்து உம்மோடுகூட அந்தப் பாவச் சோதனையை அகற்றிப் போட எனக்கு வரப்பிரசாதத்தைத் தந்தருளும். ”மெய்யாகவே என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு என்னால் எல்லாம் செய்யக்கூடும்.” (பிலிப். 4.13)

எல்லோரும்நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரமதிவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

என் ஆத்துமமேநீ பாவத்தில் விழுந்துகிடக்கும்போதோஅல்லது பாவச்சோதனையால் வாதைப்படும்போதோசேசுநாதர் தம்முடைய அன்புப் பார்வையினாலே அர்ச்சியசிஷ்ட இராயப்பரின் இருதயத்தில் சிநேகம் நிறைந்த மனஸ்தாபமுண்டாகச் செய்ததுபோல உன் இருதயத்திலும் உணர்வு””ட்டும்படி எப்போதும் உன் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்அவருடைய இந்த இரக்கம் நிறைந்த பார்வையை நீ கவனியாதிருப்பாயாகில் யூதாசுக்கு சொன்னது போல உனக்கும் அதிகத் தயை இரக்கத்தோடு சொல்லுவார்:

சிநேகிதாநீ எதற்காக வந்திருக்கிறாய்? ” (மத். 26.50)

யூதாஸ்நீ முத்தமிட்டு மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறாயோ?” (லூக். 22.48)

” நீயும் யூதாஸைப்போல் துரோகியாவாயோ?”

என் ஆத்துமமேஇதோ சேசுநாதர் நம்பேரில் வைக்கிற பரிதாபத்தைப் பார்பூங்காவனத்தில் நம்முடைய சரீரப் பலவீனத்தைக் காண்பித்து, ”ஆத்துமம் வேகமுள்ளதுதான்சரீரமோ துர்ப்பலமுள்ளது” (மத். 26. 41) என்று சொன்னதுபோலவும்சிலுவையிலிருந்து நாம் பாவத்தின் துஷ்டத்தனத்தை அறியாமல் விழுகிறோமென்று சொல்லி, ”பிதாவேஇவர்கள் செய்கிற குற்றம் அறியாமல் செய்கிறபடியால் இவர்களை மன்னியும்” (லூக். 23.34) என்று செபித்தது போலேயும்இப்பொழுதும் மோட்சத்திலிருந்துகொண்டும்உலகத்தின் திவ்விய சற்பிரசாதத்தில் இருந்துகொண்டும் நமக்காகப் பிரார்த்திக்கிறார்.

இன்னும் பசாசின் சோதனைக்குள் அகப்படாதபடிக்கு விழித்திருந்து செபம் செய்யுங்கள்” என்று நம்மை எச்சரித்து இவ்வுலகில் நம்மை சகோதர நேசத்தால் ஒற்றுமைப்படுத்தி தேவ திரித்துவத்தோடு சதாகாலத்துக்கும் நம்மை ஒன்றாக்கிக் கொள்கிறதற்காக இப்படிச் செபித்தார்: ”பரிசுத்த பிதாவேநீர் எனக்குத் தந்தருளினவர்கள் நம்மைப் போல ஒன்றாயிருக்கும்படி உமது நாமத்தினால் அவர்களைக் காப்பாற்றியருளும்அவர்கள் எல்லோரும் ஒன்றாயிருக்கவும்பிதாவேநீர் என்னிலும் நான் உம்மிலும் இருக்கிறதுபோலஅவர்களும் நம்மிடத்தில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்.” (அரு. 17.11-210

எல்லோரும்நேச சேசுவேஎங்களிடமுள்ள சகல கோப வைராக்கியத்தையும் நீக்கிஉம்மைக்குறித்து எங்களுடைய பகைவர்களை மன்னித்து அனைவரோடும் சமாதானத்தோடு வாழ எங்களுக்குக் கிருபை செய்யும்உம்முடைய திரு இருதயத்துக்குள் எங்களைச் சேர்த்து வைத்துக்கொள்ளும்.

சேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:

மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவேமனுக்குலத்தின் இரட்சகரேஉமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும்நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம்இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமிமனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லைவேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள்மகா தயாளம் நிறைந்த இயேசுவேஇவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும்ஆண்டவரேஉம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல்என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றிஉம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராகஇவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராகஅபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும்விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராகஎங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படிஇவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும்விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும்இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும்இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமிமுற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.

ஆண்டவரேஉம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும்சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும்இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாகமகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாகஎன்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவதுஆமென்.

கடைசி வேண்டுதல்.

என் அன்பான சேசுவேஉம்மோடு இந்த ஒருமணி நேரத்தில் அழுது பிரலாபித்துதுக்க துயரத்தால் நிறைந்திருக்கிற உம்முடைய திரு இருதயத்திற்கு ஆறுதல் தருகிறதற்கு நீர் என்னைக் கையேற்றுக் கொண்டபடியால் என்னுடைய முழு இருதயத்தோடு உமக்கு நன்றி செலுத்திசதா காலத்துக்கும் என் நேசம் முழுமையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன்.

அன்புக்குரிய சேசுவேஉம்முடைய திருப்பாடுகளை எப்பொழுதும் தியானித்து தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கிற உம்மோடு ஒன்றித்திருக்க அனுக்கிரகம் செய்தருளும்இன்னும் சர்வேசுரன் எனக்கு அனுப்புகிற இன்ப சுக செல்வ பாக்கியங்களை மாத்திரமல்லஆனால் எனக்கு வருகிற சகல வேதனை வியாதி துன்பங்களையும் பொறுமையாய் ஏற்கிறதற்கு எனக்கு உதவி செய்தருளும்உம்மோடு கூட சந்தோஷமாய் அவை யாவற்றையும் அனுபவித்துஇனிமேற்பட என்னுடைய முழுச் சீவியத்தையும் தேவ ஊழியத்தில் செலவழிக்க எனக்குக் கிருபை செய்யும்.

எனது அன்பான சேசுவேஉம்முடைய கிருபை ஆசீர்வாதத்தால் இந்த ஒருமணி நேரத்தில் நீர் பூங்காவனத்தில் பட்ட பாடுகளையும்சற்பிரசாதத்தில் உமக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களையும் நினைத்துத் துக்கித்துஇதற்குப் பதிலாக நான் தருகிற எளிய ஆறுதலைப் பார்த்து என் பக்கமாய் உம்முடைய கண்களைத் திருப்பியருளும்என்னுடைய இந்த வேண்டுதலுக்குக் காதுகொடுத்தருளும்.

(இவ்விடத்தில் உங்களுக்கு வேண்டிய காரியங்களை விசுவாசத்தோடு கேட்கவும்இந்த ஒரு மணி நேரத்தில் நீங்கள் அவருக்குக் கொடுத்த ஆறுதலால் அவருடைய இருதயம் உங்கள் மேல் சிநேகத்தால் எரிந்துநீங்கள் கேட்கிற யாவற்றையும் உங்களுக்கு நிறைவாய்த் தந்தருள்வார்.)

என் பிரிய சேசுவேநான் இந்த மணிநேரம் முழுவதும் உம்மோடுகூட இருந்ததுபோல் என்னுடைய மரண நேரத்தில் என்னோடுகூட இருந்து எனக்கு ஆறுதல் கொடுத்தருளும்சற்பிரசாதத்தின் வழியாய் உம்மை என் இருதயத்துக்குள் பெற்றுசிலுவையில் உயிர்விடும்போது நீர் சொன்னது போல், ”பிதாவேஎனது ஆத்துமத்தை உம்முடைய திருக்கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சொல்லி என் ஆத்துமத்தை உமது கையில் ஒப்புக்கொடுக்கச்செய்தருளும்என்னுடைய ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரியும்போது, ”என் சேசுவேஉம்மை நேசிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு உம்முடைய திரு இருதயத்தோடு ஒன்றித்து நான் சாக எனக்குக் கிருபை செய்தருளும். ”இன்றுதானே நீ நம்மோடுகூட பரகதியில் இருப்பாய்” என்று உம்முடைய திருவாயால் நீர் சொன்ன வார்த்தையைக் கேட்கிறதற்கு நான் பாக்கியவானாகும்படிஎனக்கு உம்முடைய வரப்பிரசாத்தைத் தந்தருளும்.

வியாகுல மாதாவேஎன் நேசத் தாயேஉம்முடைய நேசக்குமாரான் உம்மைவிட்டுப் பிரிந்து பூங்காவனத்தில் மரண அவஸ்தையாயிருக்கும் பொழுது அவருக்கு யாதொரு ஆறுதலும் கொடுக்கிறதற்குக் கூடாமலிருந்தபடியால் உம்முடைய திரு இருதயத்தில் உண்டான வியாகுலத்தை நினைத்து என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாதேயும்அவர் சிலுவையில் தொங்கி மரித்தபொழுது நீர் அவர் அருகே நின்று அவருடைய திருச்சரீரத்தை உம்முடைய திருக்கரங்களில் ஏந்திக்கொண்டதுபோலநீர் என்னையும் கட்டி அணைத்து இந்த பயங்கரமான மரண நேரத்தில்பசாசையும் அதன் சோதனைகளையும் ஜெயித்து சமாதானமாய் மரித்து மோட்ச பேரின்பப் பாக்கியத்தை அடைய உதவி புரிந்தருளும்

ஆமென்.