ஏழ்மையின் சொந்தம்- திருக்குடும்பம். முதல் தாழ்ச்சியின் உச்சத்திற்கு உதாரணம்- திருக்குடும்பம்.
இயேசு சுவாமியின் பிறப்பு மாட்டுத்தொழுவம், இயேசுவிற்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது கொழுத்த கன்றுக்கு பதிலாக ஒரு ஜோடி மாடப்புறாக்கள்.
அன்றாடம் தச்சுத்தொலில் செய்யும் தினக்கூலிதான் புனித சூசையப்பர். அவர் வேலை செய்தால்தான் ஆண்டவருக்கும், மாதாவிற்கும் சாப்பாடு. கடவுளுக்கே சாப்பாடு போட்டவர் புனித சூசையப்பர்.
திருக்குடும்பத்திலும் அன்றாடம் பரித்தியாகங்கள் அனுசரிக்கப்பட்டன.. ஒரு சாதரண எழையின் குடும்பமே நம் கடவுள் முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்த திருக்குடும்பம்.
ஆனால் இன்று எழ்மை; துறவு; பரித்தியாகம் என்றால் அலறி ஓடுகிறோம். கடவுள் நம் இல்லத்திற்கு வரவேண்டும் என்றால் ஏழ்மை இல்லாவிட்டாலும் எளிமையாவது வேண்டும்.
எதிலும் ஆடம்பரம், பகட்டு, பந்தா, ஊதாரித்தனம், தற்பெருமை இருந்தால் கடவுள் நமக்கு இல்லை; இல்லவே இல்லை.
இயேசு சுவாமியை அடைய முதல் வழி தாழ்ச்சி, எளிமை, கிடைத்ததை ஏற்கும் சுபாவம், அது துன்பமாக இருந்தாலும் தாழ்ச்சியோடும், ஆசையோடும் ஏற்கவேண்டும். எதிலும் பரித்தியாகம் இருக்கவேண்டும் அட்லீஸ்ட் நம்மைதேடி வரும் துன்பத்தை பரித்தியாகமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
இப்படிசெய்தால் ஆண்டவராகிய இயேசு மெல்ல மெல்ல நம் மனதிற்குள் நுழைந்து நிரந்தரமான இருக்கையில் அமர்ந்துவிடுவார்.
திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு நம் குடும்பத்திலும் கற்பு, ஏழ்மை, கீழ்படிதலை கடைபிடிப்போம்...
கற்பு என்னும் பொக்கிஷத்தை நம் பார்வையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்....
நம் குடும்பத்திலும் திருக்குடும்பத்தின் ஆட்சி மலரட்டும்...
இயேசுவின் இரத்தம் ஜெயம்; இயேசுவுக்கே புகழ் ; மரியாயே வாழ்க !