வழியோரம் கண்டெடுக்கப்பட்ட ஒரு மகன் மீது மிகுந்த தயாளமுள்ள ஒரு தகப்பன் இருந்தார். அவர் சிறுவனின் அன்பையும், நம்பிக்கையையும் பெற எல்லா முயற்சிகளும் செய்தார்; விலை மதிப்புள்ள பரிசுகளை அவனுக்குத் தந்தார். அவனுக்காகப் பல நன்மைகள் செய்தார்; தம் நேசத்தை நிரூபிக்க தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் கவனமாகப் பயன்படுத்தினார்.
ஆனால் அந்த எல்லா நேசமும், ஆனால் அவனோ அவரை மதிக்காமல் ஒருநாள் தன் வயதான தகப்பனை நிந்தித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். அந்தப் பரிதாபத்திற்குரிய தகப்பனின் இருதயம் உடைந்து போனது. தாம் இவ்வளவு பிரியத்தோடு நேசித்த தன் சிறுவனை இழப்பதை விட மற்ற எதையும் இழக்க அவர் தயாராக இருந்தார். அவரது இருதயம் நசுக்கப்பட்டது.
இவ்வாறுதான் நம் இரட்சகரின் இருதயமும் நம் பாவங்களால் நசுக்கப்படுகிறது. அவர் நம்மை எவ்வளவோ பிரியத்தோடு நேசித்தார். நமக்கு எண்ணற்ற பொக்கிஷங்களைத் தந்தார். நாமோ இன்னும் அவரை நேசிக்க மறுக்கிறோம். அவர் நமக்காக உயிர்விடத் துணிந்தார். அழிவை நோக்கி ஓடுவதிலிருந்து நம்மைத் தடுக்க நம் பாதையில், கிழிக்கப்பட்டதும், இரத்த மயமானதுமாகிய தம் மரித்த சரீரத்தை வைத்தார்.
நாமோ அவரை நம் கால்களால் மிதித்துவிட்டு, தொடர்ந்து பாவம் செய்து கொண் டிருக்கிறோம்! ஓ, எங்கள் பாவங்களின் நிமித்தம் காயப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டு, மாவாக அரைக்கப்பட்ட சேசுவின் திரு இருதயமே! அவர் தம்மால் முடிந்ததெல்லாம் நமக்காக செய்தார். இருந்தும் நம் இருதயங்கள் குளிர்ந்தவையாகவும், கொடூரமானவையாகவும், நன்றியற்றவை யாகவும் இருக்கின்றன. கருணையுள்ள ஒரு தந்தைக்கு நன்றிகெட்டதனத்தை விட அதிகப் பெரிய கொடுமை ஏதுமில்லை. காயங்களை விட நன்றிகெட்டதனம் அதிக வேதனை தருகிறது.
நேசிக்கிற ஓர் இருதயம், தன்னால் நேசிக்கப்படுபவன் இவ்வளவு தீயவனாக இருப் பதைக் காணும்போது எப்படித் துன்பப்படுகிறது என்பதை உணர முடியுமானால், அப்போது, நாம் பாவத்தில் விழுவதை சேசு காணும்போது, அவருடைய திரு இருதயம் எவ்வளவு காயப்படுகிறது, நசுக்கப்படுகிறது என்பதை நாம் சிந்திக்கத் தொடங்குவோம். அவர் நம்மேல் வைத்துள்ள எல்லையற்ற அன்பிலிருந்தே அவரது துன்பங்கள் வருகின்றன. அவர் நம்மை நேசியாதிருந்தால், நாம் பரிசுத்தர்களா, பாவிகளா என்பது பற்றி அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் சேசுவின் அந்த மாபெரும் நேசம், நாம் உத்தமதனம் அடையப் பாடுபடும்படி ஏங்கவும், அதற்காக நம்மிடம் மன்றாடவும் அவரை வற்புறுத்துகிறது.
ஒரு குறைந்த அளவு உத்தமதனத்தோடு நாம் திருப்தியடைவதை அவர் காணும்போது, அவரது இருதயம் நோய்வாய்ப்படுகிறது, வேதனை யடைகிறது. தாம் அர்ச்சியசிஷ்டதனத்தின் பெரும் சிகரங்களுக்கு உயர்த்த விரும்புகிற தம் சொந்த மணவாளிகள் கீழேயே தங்கி விடுவதையும், ஞான வெதுவெதுப்பு, அசமந்தம், தரமின்மை ஆகியவற்றின் சுவர்களைத் தங்களைச் சுற்றி எழுப்பிக் கொள்வதையும் கவனிப்பது அவருக்குப் பெரும் இருதய வேதனையாக இருக்கிறது. தரமின்மை என்பது ஆத்துமத்தின் சாபமாக இருக்கிறது. அது துரு அல்லது பூஞ்சைக் காளானை விட மோசமானது! ஒரு குறைவான உத்தமதனத்தை அடைய ஒரு பலவீனமான முயற்சியை மேற்கொள்வதோடு ஓர் ஆத்துமம் திருப்தி யடையும்போது, ஜீவியத்தின் உப்பும், உயிர்ச்சாறும் இழக்கப்படுகின்றன. தன் குறிக்கோளைக் குறைத்துக்கொள்ள யாரும் அனுமதிக்கப்படவில்லை. நம் இரட்சகர் ஓர் வரம்பற்ற குறிக்கோளை நிர்ணயித்திருக்கிறார். அதைவிடத் தாழ்ந்ததொரு குறிக்கோளை நமக்கென நாம் நிர்ணயித்தால், நாம் மூடர்கள். அந்தக் குறிக்கோள் அவரது பரலோகப் பிதாவின் சொந்த உத்தமதனமே. அதை வந்து அடையும்போதுதான் நீ உன் முயற்சியை நிறுத்த முடியும். ஆனாலும், நீ அதை அடைய முடியாது என்பதால், தொடர்ந்து அதை அடையப் பாடுபட்டுக் கொண்டிருப்பது உன் கடமை யாக இருக்கிறது--இடையில் நீ நிறுத்திவிடக் கூடாது. குறைகளுள்ள மனிதர்களைத் தங்கள் உத்தமதனத்தின் மாதிரிகளாக ஏற்றுக்கொள்வோர் நம் இரட்சகரை வெகுவாகக் காயப்படுத்து கிறார்கள். நாம் உயர்ந்த நோக்கத்தை, மனித சுபாவம் ஒருபோதும் வந்தடைய முடியாத அளவுக்கு உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த நோக்கத்தை அடைவதற்கு அவரை நாம் நம்பி சார்ந்திருக்க வேண்டுமென்றும் அவர் ஆசிக்கிறார். பெரும் காரியங்களை அடைய துணிவு கொள். ஆயினும் அது அவருக்காகவும், அவரது பலத்தோடும் மட்டுமே. அப்போது அது அவரை மிகவும் மகிழ்விக்கிறது என்பதை விரைவில் நீ காண்பாய்.
இவ்விஷயத்தில் சிறிய புஷ்பத்தைப்போல இரு. அவள் தரையை விட்டு எழ முடியாத ஒரு பறவைக் குஞ்சாக இருந்தாலும், சூரியனை நோக்கி உயரும் கழுகைப் போல இருக்க விரும்பி னாள். அது அவளுடைய பரலோக மணவாளரை வெகுவாகப் பிரியப்படுத்தியது. ஓ, நாம் மட்டும் நம் ஆசைகளில் இன்னும் சற்று அதிகத் துணிவோடு இருக்க முடிந்து, அதே சமயம், இன்னமும் நம்மில் அதிகம் நம்பிக்கை வைக்காமல், நம்மில் மாபெரும் காரியங்களை உண்மை யாகவே செய்கிற நம் தெய்வீக நேசரில் அதிக நம்பிக்கை கொள்வோமென்றால்! நமது பலவீன மான ஆசைகளால் இனியும் சேசுவின் திரு இருதயத்தை நாம் காயப்படுத்தாமல் இருப்போமாக! அவர் நிமித்தமாக பெரிய காரியங்களை நாம் விரும்புவோமாக.