கிறிஸ்தவ குடும்பங்களின் சிறந்த மாதிரிகை - திருக்குடும்பம்

அன்பிலும் அனுசரணையிலும் மரியாதையிலும் கிறிஸ்தவ குடும்பங்கட்கு ஒரு மாதிரிகையாக விளங்கு மாறு இறைவன் ஒரு குடும்பத்தை உலகுக்கு அளித் தார். நசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பமே அந்த மாதிரிக் குடும்பம். உலகப் பார்வையில் தரித்திரக் கோலத்தில் காட்சி அளித்த இச்சிறு குடும்பம் விண் ணக ஐசுவரியங்களால் நிறைந்து துலங்கியது. மனித நோக்கில் மறைந்ததும் அறியாததுமாக இருந்த போதி லும் வான தூதர்கள் அத்திருக்குடும்பத்தை வாழ்த்தி வணங்கினர்.

மரியன்னையும், சூசையப்பரும் அன்பும் வாழ்வும் நிறைவாக ஒன்றித்த வாழ்வை மேற் கொண்டனர். இவ்வரிய சூழலில் இறைவனுக்கும் மனிதருக்கும் மு ன் ப ா க இயேசு ஞானத்திலும் வயதிலும் வளர்ந்து வந்தார், இத்திருக்குடும்பத்தின் இல்வாழ்வு மேடுபள்ளங்கள் நிரம்பியதோர் நீண்ட பயணமாகும். இறைவன் மட்டி லும் ஒருவர் மற்றவர் மட்டிலும் கொள்ள வேண்டிய விசுவாசத்துக்கு எதிராகப் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

மரியாளைப் பற்றிய சந்தேகமும் ஐயுறவும் சூசையை வாட்டி வருத்திய போதும், மறைபொருளாய் அமைந்த மனிதாவ தாரத் திட்டத்தை எண்ணி மரியாள் மெள னத்தில் ஏங்கித் தவித்த போதும், இறைவன் தலை யிட்டு அச்சங்கள் அனைத்தையும் அகற்றி, ஐயுறவை நீக்கி, மறைபொருளை வெளிப்படுத்தினார். ஏனெனில் சூ ன ச நீதிமானாகவும் மரியாள் இறைவார்த்தையில் விசுவாசம் கொண்டவளாகவும் விளங்கினர்.

மிகப் பயங்கரமான பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. செசாரின் குடிமதிப்பு ஆணைக்கு அடிபணிந்து பெத்லகேம் சென்றனர். முன் னறிந்திராத எகிப்து நாட்டுக்கு இரவோடிரவாக பய ணம் செய்தனர். ஜெருசலேம் ஆலயத்தில் இயேசுவை இழந்து தவித்தனர். நாசரேத்தில் தச்சுத் தொழிலாளி யின் சாதாரண வருவாயில் ஏழ்மையின் பிடியில் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். இச் சந்தர்ப்பங்களிலெல்லாம் மரி சூசை தம்பதிகள் இறைவனின் திருவுளத்துக்கு அன்போடு பணியும் பண்புள்ள கணவன் மனைவியாக பாசம் நிரம்பிய அன்னை தந்தையாக விளங்கினர்.

இத்திருக் குடும்பத்தில் உருவான இல்லத் திருச் சபை கிறிஸ்துவின் பீ ட் புப் பணியாக பிரவாகித்து அனைத்துலகுக்கும் பரந்து செல்கின்றது. இவ்வன்புத் தம்பதிகள் தம் அறநெறி வாழ்வின் சன்மானமாக பெற்றுக் கொண்டவை எம்மால் என்றுமே மனதிலி ருத்திக் கொள்ள வேண்டியவை. இயேசுவினதும் மரி யாளினதும் அரவணைப்பில் நல்மரணம் அடையும் பேறு சூசைக்குக் கிடைத்தது. மரியாள் கல்வாரிவரை தைரி யத்துடன் சென்று சிலுவையடியில் உறுதியுடன் நின்று இயேசுவுடன் துணை மீட்பர் ஆனாள்.

வாழ்வின் வழியில் சுகதுக்கங்கள் சூழ்ந்து வரும் போது இத்திருக் குடும்பத்தினை நோக்க வேண்டியது கிறிஸ்தவ குடும்பங்களின் தலையாய கடமையாகும். திருக்குடும்பத்தில் நிலவிய நம்பிக்கையும் உறுதியும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கிறிஸ்தவ குடும்பங் கட்கு அத்தியாவசியம் தேவைப்படும். இயேசு, மரி, சூசையிடம் விளங்கிய புண்ணியங்களைக் கிறிஸ் தவ கு டும் பங்கள் கைக்கொண்டு, இறைபணியிலும், மக்கள் பணி யிலும் சிறந்து விளங்குவார்களாக. இ ந் த உன்னத அப்போஸ்தலப் பணியால் கிறிஸ்துவின் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற உதவுவார்களாக.

ஆமென்.