கிறிஸ்தவ திருமணக் கொடைகளின் சிகரமும், கொடுமுடியுமென விளங்குவது அது திருஅருட் சாத னங்களில் ஒன்றாக இருப்பதே. கிறிஸ்தவ திருமணம் ஒரு திருவருட் சாதனம் எனும் போது, அது உடை படாத பந்தனம் என்றும், அருளுயிரை வழங்கும் ஒரு புனித அடையாளம் என்னும் உயர்ந்த நி லை க் கு க் கிறிஸ்து அதை உயர்த்தியுள்ளார் என்றும் 11ஆம் பத்தி நாதர் விளக்குகிறார். (Casti Connubii n, 31),
"இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட் டும்'' (மத். 19. 6.) என்ற வார்த்தைகளாலும் ''தன் மனைவியை விலக்கிவிட்டு வேறு ஒருத்தியை மணப்பவன் விபசாரஞ் செய்கிறான். தன் கணவனால் விலக்கப்பட்ட வளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்''. (லூக். 16-18) என்னும் வார்த்தைகளாலும் மெய்விவாக உடன் படிக்கை முறிவு படாதது என்று யேசு அழுத்தந்திருத் தமாய்ப் போதித்தார். (Casti Connubii n. 32).
சட்டத்தின்படி செய்யப்பட்டுப் பூர்த்தியாக்கப்பட்ட கிறிஸ்தவ திருமணக்கட்டு. மரணத்தாலன்றி அவிழ்க் கப்படாத ஒன்றாகும். மேற்படி இறைக் கட்டளையின் உள்ளார்ந்த க ர ர ண ம் என்ன என்று உன்னிப்பாக விசாரித்தால், கிறிஸ்தவ விவாக அந்தஸ்தின் மறை பொருளிலேயே அது இருக்கக் காணலாம். முற்றாகப் பூர்த்தியாக்கப்பட்ட விவாக பந்தமானது சிறிஸ்துவுக் கும் திருச்சபைக்கும் இடையில் நிலவும் பிரிக்க முடி யாத ஒன்றிப்பின் அடையாளமாகும். எபேசியருக்கு எழுதிய நிரூபத்தில் புனித சின்னப்பர், கி றி, ஸ் த வ விவாக பந்தனமானது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையில் நிலவும் மிக நெருங்கிய ஒன்றிப்பைக் குறிக் கின்றது என்கிறார். ''இதில் அடங்கியுள்ள மறையுண்மை பெரிது. திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன்'' (எபே. 5. 32)
கிறிஸ்து உயிர் வாழும் வரை, திருச்சபையும் அவரில் நிலைத்தி ருக்கும் வரை, இந்த ஒன்றிப்பும் நிலவும்; பிளவுபடாது முறிவு ப ட ா து. புனித அகுஸ்தினார் போதித்ததும் இதுவே: “ 'இதையே கிறிஸ்துவிலும் திருச்சபையிலும் காண்கின்றோம். ஆகவே விவாகமானவர்கள் விவாக ரத்துச் செய்து தங்கள் மணவாழ்வைப் பாழ் படுத்த வொண்ணாது. நமது இறைவனின் நகரில், அதாவது திருச்சபையில், இந்த அருட்சாதனம் அவ்வளவு மேலாக மதிக்கப்படுவதால் மகப் பேற்றுக்காக ஒருத்தியை விவாகம் செய்திருந்தாலும் மனைவி மலடியானாற் சந்தானத் திற்காக வேறு ஒருத்தியை விவாகம் செய்வது சட்ட விரோதம் ஆகும். ' ' (Casti Conrubii n 35)
கிறிஸ்தவர்களின் விவாக பந்தனம் விபசாரத்திஞாலோ பதிதத்தினாலோ, குண வேறுபாட்டினாலோ அல்லது கைவிடுவதினாலோ பிரிக்கப்பட மாட்டாது. (Council of Trent Sess 24).
கட்டவிழாமையினால் வரும் நன்மைகள் அளப்பரியவை. ''முதலாவதாக, தங்கள் திருமணம் நீடித்த உறுதிப் பாடுடையது எ ன் னு ம் உத்தரவாதத்தைக் கணவன் மனைவியர் பெறுகின்றனர். உண்மை அன்புக்கு என்றும் முடிவு இராது'' (கொரி. 13. 8). பெருந்தன்மையோடு ஒருவரை ஒருவருக்குக் கையளித்தலும் மனப்பூர்வமாக ஒருவர் ஒருவருக்குச் செய்யும் அன்பும் இயல்பாகவே இத்ததைய உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றது. அகத்திருந்தோ புறத்திருந்தோ கற்புடைமைக்கு எதிராக எழும் சோதனைகளுக்கு அது ஓர் அரண் போல் விளங் குகின்றது. இவ்வுத்தரவாதம் வயோதிபத்திலும் துன்ப காலங்களிலுங் கைவிடப்படக்கூடும் என்ற அச்சத்தை நீக்கி, ஒருவிதமான அமைதியையும் பாதுகாப்புணர்வை யுந் தருகின்றது. ஒவ்வொருவரின் கௌரவத்தை விழிப் புணர்வுடன் பேணுவதுமன்றி, ஆபத்து வேளையில் ஒரு வர் மற்றவருக்கு உதவுவார் என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றது, மரணம் மாத்திரமே அழிக்கக் கூடிய திருமண ஒப்பந்தத்தால் அவர்கள் ஒன்றித்திருப்பது, தோன்றி மறையும் நிலையற்ற பொருள்களுக்காகவோ அல்லது அற்ப ஆசைகளை நிறைவு செய்வதற்காகவோ அன்றி, ஒவ்வொருவரின் மேலான நித்திய நன்மைகளை அடைவதற்காகவே என்று அது அவர்களுக்கு நினைவூட் டும். பிள்ளை வளர்ப்பு, கல்வி புகட்டல் போன்ற பல வருடங்களாகச் செய்ய வேண்டிய பணியை ஆற்றுவ தற்குத் தலை சிறந்த வசதி அளிக்கப்படுகிறது. இப் பணி மிகப் பழுவானதும் நீண்டகாலப் பொறுப்புடை யதும் என்ற வகையில், பெற்றோரின் ஒருங்கிணைந்த முயற்சி அதை இலகுவாக்குகின்றது. கிறிஸ்தவத் திரு மணத்தின் முறிவுபடாமையாற் போதுமான நன்மை களை முழுச்சமுதாயமும் பெறுகின்றது. நேர்மை வாழ் வுக்கும் ஒழுக்க சீலத்துக்கும் மூல காரணம், திருமணங் களின் முறிவுபடாமையே என்று அனுபவ வாயிலாக அறிகின்றோம்.'' (Casti Connubii n - 36)
திருமணமானது நீடித்து இருக்கும் ஒரு தாபனம் மாத்திரமன்று, அருளுயிரை உற்பத்தி செய்யும் சாதன மும் ஆகும். எங்கள் ஆண்டவர் யேசுக்கிறிஸ்து, கிறிஸ் தவர்களின் விவாக ஒப்பந்தத்தை ஓர் அருட்சாதனத் தின் உன்னத நிலைக்கு உயர்த்தியுள்ளார், அதாவது, புதிய ஏற்பாட்டின் அருட்சாதனங்களுள் ஒன்றாக, சிறப்பான அருள் வாழ்வை வழங்கும் ஓர் அடையா ளமாக உயர்த்தியுள்ளார். இதனால் சாதாரண திருமண அன்பு சிறப்படைகிறது. அதன் பிளவுபடாத ஒருமைப் பாடு உறுதி அடைகிறது. திருமணமாகுந் தம்பதிகள் புனிதம் அடைகின்ற னர். (Council of Irent s - 24) "விசுவாசிகளின் திருமண ஒப்பந்தம் அருளின் அடை யாளமாகிறபடியால் அதன் உட்பொருள் விவாக அந் தஸ்தோடு ெந ரு ங் கி ய தொடர்புடையதாகின்றது, ஆகவே, திருமுழுக்குப் பெற்றவர்களிடையே திருஅருட் சாதனம் இல்லாமல் உண்மையான திருமணமில்லை.
கிறிஸ்தவ விசுவாசிகள் கள்ளங்கபடற்ற இதயத் தோடு திருமணச் சம்மதத்தைத் தெரிவிக்கும் போது அருட்பிரசாதம் என்னுந் தடாகத்தைத் தங்கள் மேல் மடை திறந்து விடுகிறார்கள். இதிலிருந்து த ங் க ள் வேலைகளையும், கடமைகளையும் பிரமாணிக்கமாகவும், புனிதமாகவும், மரணபரியந்தம் விடாப்பிடியாகவும் செய்வதற்குச் சுபாவத்திற்கு மேலான தைரியத்தைப் பெறுகின்றார்கள். ஏனெனில், விக்கினம் எதுவும் அதன் பலாபலன்களைத் தடை செய்தாலன்றி, இத்திருவருட் சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அத்திவாரமாகிய அருளு யிரை வளம் பெறச் செய்வதுமன்றி மேலதிக சிறப்புக் கொடைகளையும், நல்லுணர்வுகளையுங் கொடுக்கின்றது. மேலும், அது இயற்கை ஆற்றல்களை விசாலப்படுத்திப் பூர்த்தியாக்கி அதைப் பெற்றவர்கள் திருமண அந்தஸ் துக்குரிய நோக்கம், கடமை ஆகியவற்றை மனதாற் புரிந்து கொள்ள ம ா த் தி ர ம ன் றி உள்ளூர இனிது சுவைக்கவும், உறுதியாக ஏற்றுக் கொள்ளவும், திட்ட மாக விரும்பவும், செயலில் நிறைவேற்றவும் வரங் கொடுக்கின்றது. சமயாசமயங்களில் திருமணக் கடமை களைச் செவ்வனே செய்வதற்குத் தேவைப்படும் அருளு தவிகளைப் பெறுவதற்கு உரிமையும் அளிக்கின்றதுஇறை அருளுக்குப் ப ணி ந் த மனதோடு தங்களால் இயன்றதெல்லாம் திறம்படச் செய்வார்களாயின், தங் கள் அந்தஸ்தின் பழுவான கடமைகளைத் தாங்க இந்த அருட்சாதனத்திலிருந்து வலிமைகளைப் பெறுவார்கள். புனித அகுஸ்தீனார் கூறுவதாவது : திருமுழுக்கினால் அல்லது குருத்துவத்தால் ஒருவன் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதற்கு அல்லது குருத்துவக் கடமைகளை நிறை வேற்றுவதற்கு அழைக்கப்படும் போது அந்தந்த அருட் சாதனத்தாற் குறிக்கப்படும் அருளுதவி ஒரு போதும் அவனுக்கு மறுக்கப்படுவதில்லை. அவ்வாறே திருமண பந்தத்தாற் பிணைக்கப்படும் கிறிஸ்தவ விசுவாசிகளும் அதற்குரிய அருளுதவியைப் பெறத் தவற மாட்டார் கள். திருமணக்கட்டும் அவிழ்க்கப்பட மு டி ய ா து. (De Nupt et (oncup. L I, C - 10)
கிறிஸ்தவ கணவன் மனைவியர் தங்களை விலங்கிடப் பட்டவர்களாகவோ அல்லது தடை விதிக்கப்பட்டவர் களாகவோ கருதலாகாது. மாறாக, திருமண அருட்சாத னம் என்னும் பொற் சங்கிலியால் அணி செய்யப்பட்ட டவர்கள் எனவும், இறை உதவியோடு கூடிய வலிமை பெற்றவர்கள் எனவுங் கருத வேண்டும். எனவே அவர் களின் ஒன்றிப்பு, திருமணத்தின் உள்ளார்ந்த ஞானக் கருத்தளவில் மாத்திரமன்று, தங்கள் நடத்தையினாலும் மனப்போக்கினாலும் எக்காலமும் கிறிஸ்துவுக்கும் திருச் சபைக்கும் இடையிலுள்ள உயிருள்ள ஒன்றிப்பின் சாய லாகத் திகழ வேண்டும். சந்தேகமின்றி இதுவே மதிப் புக்குரிய அன்பின் மறைபொருளாய் விளங்குகின்றது (Casti Connbii n 38 - 42).
கத்தோலிக்கரும் கத்தோ லிக்கர் அல்லாதாரும் விவாக ஒப்பந்தம் செய்து கொள் வதைத் திருச்சபை மிகக் கண்டிப்பாய் எதிர்க்கின்றது. காரணம், கத்தோலிக்கரின் விசுவாசத்திற்கும் பிள்ளைக ளின் விசுவாசத்திற்கும் ஆபத்து விளையலாம் என்ற பயத்தினாலேயாம். அண்மைக் காலங்களில் நமது நாட் டிலுங் கூடக் கலப்பு மண எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது. பொதுப்படக் கூறுமிடத்து கலப்பு விவாகங்களைக் களைந்து விட எல்லாவித முயற் சிகளும் நமது க த் ேத ா லி க் க ர் எடுக்க வேண்டும். தவிர்க்க முடியாவிடின் கலப்பு விவாகஞ் செய்யும் தங் கள் பிள்ளைகள் விசுவாசத்தை இழக்காத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தோடு பிள்ளைகளும் ஞான முழுக்காட்டப் பெற்றுக் கத்தோலிக்க பிள்ளைக ளாகப் பயிற்றப்படவும் வளர்க்கப்படவும் வேண்டும். (Casti Connubii n. 84 - 85) (Paul VI - Mottu Proprio: Matrimonia mixta.)