ஜெயராக்கினி அன்னை ஆலயம்.
மறை மாவட்டம் : சேலம்
மாவட்டம் : சேலம்
நிலை : பங்கு தளம்
கிளைகள் :
1. தாண்டவராயபுரம், ஆரோக்கிய அன்னை ஆலயம்.
2.சின்னப்பநகர், புனித வனத்து சின்னப்பர் ஆலயம்.
3.கல்லாங்குத்து, புனித அந்தோணியார் ஆலயம்.
குடும்பங்கள் : 625
அன்பியங்கள்:19
ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணி மற்றும் 08.15 மணி
பங்குத்தந்தை : அருட்பணி I. கிரகோரி ராஜன்
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஆரம்பித்து 15 ம் தேதி அன்னை யின் விண்ணேற்பு பெருவிழாவுடன் நிறைவு பெறும்.
வரலாறு :
புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் ஆத்தூர் மறைவட்டம்.
இப் பங்கானது சேலம் மறை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஆலயமானது 15.1.1980 ல் அப்போதைய ஆயர் மைக்கில் போஸ்க்கோ துரைசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1.14.1987.ல் அவராலேயே அன்னையின் வழியில் ஆண்டவருக்கு நேர்ந்தளிக்கபட்டது. இந்த ஆலயம் எப்படி கட்டுக்கல்லாலேயே விண்ணை தொடுகிறதோ அது போலவே பங்கு மக்களின் நம்பிக்கையும் ஆண்டவர் இயேசுவை தொடுகிறது. இந்த ஆலயத்தின் வெள்ளி விழா நினைவாக 2011ல் அப்போதைய பங்கு தந்தை Fr.சாலமோன் அவர்கள் சேலம் மறைமாவட்டத்தின் இரண்டாவது நற்கருணை சிற்றாலயம் எழுப்பினார்.
வார நாட்களில் திங்கள்,புதன், வெள்ளி காலை 6.15.
செவ்வாய், வியாழன், சனி மாலை 6.15 திருப்பலி நடைபெறும். மாதத்தின் முதல் சனி காலை 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் ஆராதனையும் அதனை தொடர்ந்து அன்பு விருந்தும் நடைபெறும்.
பங்கில் பல்வேறு சபைகள் இயங்கங்களுடன் "ஜெயமாதா ஜெப குழு மற்றும் சேரா கிளப் (குருக்களுக்காக சிறப்பாக வேண்டுதல்)" இவைகளும் செயல் படுகிறது.
உண்மையில் இந்த சேரா கிளப் ன் சேவை பொதுவாக சேலம் மறை மாவட்டம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றது. இக் குழுவினர் ஒரு மணி நேரம் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகளுக்காக சிறப்பாக ஜெபிக்கின்றனர். மாதத்தில் ஒருநாள் இவர்களுக்காக சிறப்பு திருப்பியும் வருடத்தில் ஒருநாள் ஆயர் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுவது தனிச்சிறப்பு.
இதனால் இப் பங்கிலிருந்து பல துறவிகள் உருவாகி உள்ளனர்.
(இப் பங்கு மக்களுக்கு நம் குழு மற்றும் கத்தோலிக்க அன்பர்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்)
பங்கின் மண்ணின் மைந்தர்கள்
(குருக்கள்) தற்பேது பணியாற்றும் இடங்கள்
1. Frஅதிரூபன், மாதா Tv
2. Fr.ஜான் போஸ்கோ பால், சேலம் ஜான்சன் பேட்டை.
3. Fr.ஜேக்கப் மறைமாவட்ட பொருளாளர். 4. Fr. ஜெய் பெர்னார்ட் ஜோசப் ,USA.
5. Fr.அலெக்ஸ், ஆஸ்திரேலியா
6. Fr. பிரகாஷ், பேட்டைபாளையம்
7. Fr.மரிய ஜோசப் புனே.
குருமாணவர்கள்
1. சகோ.சார்லஸ்.
2 சகோ.பிரான்சிஸ் சேவியர்
3 சகோ. ரெக்ஸ். கோவை நல்லாயன் குருமடம்.