திரு இருதய ஆண்டவர் திருத்தலம்.
இடம் : N. பஞ்சம்பட்டி ( நிலக்கோட்டை அருகிலே இருப்பதால் N சேர்க்கப்பட்டுள்ளது)
மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
நிலை: பங்குத்தளம் ( திருத்தலம்)
கிளைப் பங்குகள் :
1. பெரிய அந்தோணியார் ஆலயம், பிள்ளையார் நத்தம்.
2. உலக மீட்பர் ஆலயம், RMTC காலனி
குருசடிகள்: 20
குடும்பங்கள் : 2500
அன்பியங்கள் : 45
பங்குத்தந்தை : அருட்தந்தை. ரிச்சர்டு பாபுமோன் (பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட அதிபர்)
உதவிப் பங்குத்தந்தை : அருட்தந்தை. சாம்சன் ஜெபராஜ் OMD
திருவழிபாட்டு நேரங்கள்:
திங்கள்: காலை 05.15 மணி
மாலை07.00 மணி (அமல அன்னை ஆலயம்)
செவ்வாய்: காலை 05.15 மணி மாலை07.00 மணி
புதன்: சக்திநிறை சகாய அன்னை நவநாள் திருப்பலி காலை 05.15 மணி மாலை 07.00 மணி.
வியாழன்: காலை 05.15 மணி
வெள்ளி: திரு இருதய ஆண்டவரின் நவநாள் திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு.
காலை 05.15 மணி,
காலை11.00மணி,
மாலை 07.00 மணி.
சனி: காலை05.15 மணி
மாலை07.00 மணி (அமல அன்னை ஆலயம்)
ஞாயிறு: காலை 05.00 மணி, காலை 08.00 மணி, மாலை 07.00 மணி.
திருவிழா : ஜூன் மாதத்தில் இயேசுவின் திரு இருதய பெருவிழாவை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
மண்ணின் மைந்தர்கள்:
அருட்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. A. ஜோசப் செல்வராஜ்
2. அருட்தந்தை. சேவியர் லூர்துசாமி
3. அருட்தந்தை. V.பீட்டர் ராஜ்
4. அருட்தந்தை. K.A. ஆரோக்கியசாமி.
5. அருட்தந்தை. U.S. ஆரோக்கியசாமி
6. அருட்தந்தை. அலெக்ஸ் பீட்டர் MSFS
7. அருட்தந்தை. ஜான் சேவியர் ISCH
8. அருட்தந்தை. லாரன்ஸ் Religious
8. அருட்தந்தை. ஆரோக்கியசாமி OFM Cap
மேலும் பல அருட்பணியாளர்களையும் பல அருட்சகோதரிகளையும் நற்செய்தி பணிக்காக தந்துள்ளது நி. பஞ்சம்பட்டி இறைசமூகம்.
திருத்தல அமைவிடம் :
திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து 8கிமீ தொலைவிலும், மதுரையில் இருந்து 55 கிமீ தொலைவிலும், செம்பட்டியில் இருந்து 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பேருந்து வழித்தடம்: திண்டுக்கல் -பஞ்சம்பட்டி 9B
திண்டுக்கல் -செம்பட்டி வழித்தட பேருந்துகள்: 7,7B,7C,7D,7E,7F,7G(LSS),8A இறங்குமிடம்: பஞ்சம்பட்டி பிரிவு.
மினிபஸ்: புனித செபஸ்தியார்.
வரலாறு :
முற்காலத்தில் அடர்ந்த காடுகளை உடைய நி. பஞ்சம்பட்டி பகுதியில் சில கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கி.பி 1725 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1830 ஆம் ஆண்டு வரையில் வருடத்திற்கு 4 அல்லது 5 முறை பாண்டிச்சேரி யில் இருந்து அருட்பணியாளர்கள் வந்து மக்களை ஆன்மீகத்தில் வளரச் செய்தார்கள்.
02.06.1836 ல் பங்கு ஆரம்பித்து ஒரு சிறு ஆலயம் எழுப்பப்பட்டு இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டது. இந்தப் பங்கின் கிளைப் பங்குகள் கம்பம், கூடலூர் வரையிலும் பரவி இருந்தது. மேலும் 96 கிராமங்களைக் கொண்டு இயேசு சபை குருக்களால் வழிநடத்தப்பட்டு வந்தது.
அமிர்தநாதர் என்று அழைக்கப்பட்ட அருட்தந்தை. ஜூலியஸ் லார்மே சே. ச அவர்கள் தற்போதுள்ள திருத்தலத்திற்கு அடித்தளமிட்டு 02.06.1893 அன்று பணிகளை ஆரம்பித்தார்.
1901 ஆம் ஆண்டில் தொடர்ந்து வந்த அருட்தந்தையர்களால் சிறிது சிறிதாக ஆலயம் கட்டப்பட்டது. அருட்தந்தை. நெஸ்புளூஸ் அவர்கள் ஆலய டூம் கட்டி முடித்தார்.
அருட்தந்தை. நெஸ்புளூஸ் நினைவாக 1918 ல் பாஸ்கு மேடை கட்டப் பட்டது.
அருட்தந்தை. அந்தோனி பர்னாந்து அவர்களின் முயற்சியால் தற்போது உள்ள அழகிய பீடம், தூத்துக்குடி பரதகுல கனவான்களின் உதவியால் ரூ. 2000 செலவில் புனித சூசையப்பர் தொழிற்சாலையில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு, 06.11.1921 அன்று நிர்மாணிக்கப் பட்டது.
அதன் பிறகு அருட்தந்தை. பிளாஞ்சார்டு, அருட்தந்தை. செரே ஆகியோரால் ஆலயம் முற்றிலும் கட்டப் பட்டது.
1944 இல் அருட்தந்தை. மரியசூசை அவர்கள் லூர்து அன்னை கெபியை கட்டினார்.
அருட்தந்தை. லோபோ (1948-1957) அவர்கள் திருத்கலத்திற்கு மின் இணைப்பும், நற்கருணைப் பெட்டியும் அமைத்தார்.
1974 ல் அருட்தந்தை. மரியநாயகம் அவர்கள் திருத்தலத்தைப் புதுப்பித்தார்.
அருட்தந்தை. அற்புதசாமி அவர்கள் பாஸ்குமேடையை திருத்தி அமைத்தார்.
அதன்பிறகு மீண்டும் அருட்தந்தை. செல்வராஜ் அவர்கள் திருத்தலத்தை அழகுற சீர்படுத்தி, கெபியின் முன்பு அன்னையின் அரங்கத்தைக் கட்டினார். குருக்கள் இல்லம் புதுப்பிக்கப் பட்டது.
அதன் பிறகு வந்த அருட்தந்தை. தாமஸ் ஜான் பீட்டர் அவர்கள் திருத்தலத்தைச் சுற்றி சிலுவைப்பாதை நிலைகளை கட்டினார். குருக்கள் இல்லத்தை விரிவுபடுத்தினார்.
அவருக்கு பின் வந்த அருட்தந்தை. A.J. சேசுராஜ் அவர்கள் ஆலயத்தைப் புதுப்பித்தார். மேற்கூரையில் தட்டு ஓடுகள் பதிக்கப்பட்டன. பழைய கொடிமரத்தை எடுத்துவிட்டு புதிய கொடிமரம் வைக்கப் பட்டது. நற்கருணை பீடம் புதிதாக கட்டப்பட்டு புதிய நற்கருணை பேழை வைக்கப்பட்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் 07-06-2019 அன்று மேதகு ஆயர். தாமஸ் பால்சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
அமலவை கன்னியர்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்கள்:
1. புனித அகஸ்தினார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
2. புனித மரியன்னை தொடக்கப்பள்ளி.
3. புனித தெரசாள் விடுதி இல்லம்.
4. அமலியகம்
5. புனித லார்மே இல்லம்.
பொது நிறுவனங்கள்:
1.SSSP Trust
2.இந்திய ஜெர்மானிய குழந்தைகள் இல்லம்(DMSS நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது)
3.அரசு மேல்நிலைப் பள்ளி.
பங்கின் பக்த சபைகள்:
1.பீடச் சிறுவர்கள்
2.ஆலயப் பணியாளர்கள்.
3.நற்செய்தித் தம்பதியர்கள்.
4.அன்பியப் பொறுப்பாளர்கள்.
5.புனித வின்சென்ட் தே பவுல் சபை
6.திரு இருதய சபை
7.நோவாவின் பேழை(இயேசுவின் பரிசுத்த மீட்பு தியான இல்லம்).
பங்கின் சிறப்புகள்:
1.184 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம்.
2.திண்டுக்கல் மறைமாவட்டத்திலேயே இரண்டாவதாக தோன்றிய பங்கு (1836).
3.மறைவட்டம்(வட்டார முதன்மை திருத்தலம்)
4.அமலவை கன்னியர் சபை தோன்றிய இடம்.
5.திருத்தல பீடத்தில் உள்ள ஐந்து சுரூபங்களும் ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை.
6.பெரிய நற்கருணைப் பேழை
7.பாரம்பரிய பாஸ்கு திருவிழா.
8.ஜெபமாலை மாதா பீடம் (தமிழ் நாட்டில் ஒருசில ஆலயத்தில் மட்டுமே அமைந்துள்ளது)
9.மாதா மரத்தடியில் காட்சி கொடுத்த இடம்.
10.இரண்டு புனிதர்களுக்காக காத்திருக்கும் பங்கு.
புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இருக்கும் இரண்டு அருட்தந்தை யர்கள்:
1. இறை ஊழியர். அந்தோணி சூசைநாதர்
2. இறையடியார். அகஸ்டின் பெரைரா.
இறையடியார் அகஸ்டின் பெரைராவின் கல்லறை இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.
நி. பஞ்சம்பட்டி மறைவட்ட பங்கு ஆலயங்கள்:
1. நி. பஞ்சம்பட்டி (1836)
2. A. வெள்ளோடு (1933)
3. சின்னாளபட்டி (1972)
4. காமலாபுரம் (1988)
5. சிறுநாயக்கன்பட்டி (1999)
6. ஆரியநெல்லூர் (2005)
7. வக்கம்பட்டி (2009)
8. பெருமாள் கோவில்பட்டி (2014)
பாஸ்கா பெருவிழா :
சேசு சபை குருக்களின் தமிழ்ப்பற்று, நற்செய்தி பரப்புதல் ஆர்வத்தின் காரணமாக, தமிழ் கலையான நாடக அடிப்படையில் தமிழ் இயல் இசை நாடக பாடலை இயற்றி நடத்தப் படுவது தான் பாஸ்கா பெருவிழா.
96 கிராமத்தைச் சேர்ந்த இறைமக்களின் தாயகமாம் நி. பஞ்சம்பட்டி பங்கு மக்களோடு இணைந்து பங்குத்தந்தையர்களின் ஆசியுடனும், பொது மக்களின் பேராதரவுடனும் கடந்த 137 ஆண்டுகளாக சிறப்பாக பாஸ்கா விழா நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளியை அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடத்தப் படுகிறது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. மோசேட் (1836-1842)
2. அருட்பணி. லூயிஸ் சே. ச (1842-1845)
3. அருட்பணி. புரூஸ்பர் சே. ச(1845-1852)
4. அருட்பணி. லூயிஸ் சே. ச (1852-1854)
5. அருட்பணி. கிளமென்ட் சே. ச (சில மாதங்கள்)
6. அருட்பணி. பெரடெரிக் சே. ச (1855-1857)
7. அருட்பணி. விக்டர் சே. ச (1857-1860)
8. அருட்பணி. ஜான் ஒலீவர் சே. ச (1860-1866)
9. அருட்பணி. தாமஸ் கியூ சே. ச (1866-1872)
10. அருட்பணி. லாரன்ஸ் சே. ச (சில மாதங்கள்)
11. அருட்பணி. பெக்ஸ் பேயர் சே. ச (1873-1875)
12. அருட்பணி. மரியானூஸ் சே. ச (சில மாதங்கள்)
13. அருட்பணி. ஜூலியஸ் லார்மி சே. ச (1876-1901)
14. அருட்பணி. விசுவாசம் சே. ச (1901-1904)
15. அருட்பணி. நெஸ்புளூஸ் சே. ச (1904-1917)
16. அருட்பணி. அந்தோனி பர்னாந்து (1918-1922)
17. அருட்பணி. குனி சே. ச (சில மாதங்கள்1923)
18. அருட்பணி. குலை சே. ச (சில மாதங்கள்1924)
19. அருட்பணி. J. பிளாஞ்சார்டு சே. ச (11925-1930)
20. அருட்பணி. J. செரே சே. ச (1930-1938)
21. அருட்பணி. A. விசுவாசம் (சில மாதங்கள்1938)
22. அருட்பணி. K. லூர்து (1938-1941)
23. அருட்பணி. J. மரியசூசை (1941-1946)
24. அருட்பணி. K. A. லூர்து (1946-1948)
25. அருட்பணி. S. W. லோபோ (1948-1957)
26. அருட்பணி. T. விசுவாசம் (1957-1967)
27. அருட்பணி. M. இஞ்ஞாசி (1967-1971)
28. அருட்பணி. P. ஆரோக்கியசாமி (சில மாதங்கள்)
29. அருட்பணி. V. M. மரியநாயகம் (1972-1978)
30. அருட்பணி. மரிய பாக்கியம் (1978-1981)
31. அருட்பணி. K. S. அற்புதசாமி (1981-1987)
32. அருட்பணி. A. ஜெயராஜ் (1987-1988)
33. அருட்பணி. A. மனுவேல் (1988-1991)
34. அருட்பணி. A. S. ஜெயக்குமார் (1991-1993)
35. அருட்பணி. A. பீட்டர் ஜான் (1993-1997)
36. அருட்பணி. J. செல்வராஜ் (1997-2003)
37. அருட்பணி. T. சகாயராஜ் (2003-2005)
38. அருட்பணி. V. செல்வராஜ் (2005-2009)
39. அருட்பணி. A. தாமஸ்ஜான் பீட்டர் (2009-2014)
40. அருட்பணி. A. J. சேசுராஜ் (2014-2019)
41. அருட்பணி. S. ரிச்சர்ட் பாபுமோன் (2019 முதல் தற்போது வரை..)
ஆலய வரலாறு : பங்கின் குடும்பக் கையேடு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.