126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்

  

தூய ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம்

இடம் : செவ்வாய்பேட்டை, சேலம்.

மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு சிங்கராயர்

பங்குத்தந்தையர்கள் : அருட்பணி பீட்டர் பிரான்சிஸ்
அருட்பணி கிஷோர்.

நிலை : இணைப் பேராலயம்
கிளை : பாத்திமா கன்னியர் இல்லம், லைன்மேடு.

குடும்பங்கள் : 900
அன்பியங்கள் : 33

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 08.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும்.

திருவிழா : மே மாதத்தில்.

செவ்வை நகர் பங்கின் சில வரலாற்று குறிப்புகள் :

1623 ல் அருட்பணி ராபர்ட் தே நோபிலி அவர்கள் இங்கு முதலில் மறை போதகம் மேற்கொண்டு வந்தார்.

1796 ல் புனித இஞ்ஞாசியார் ஜெபக்கூடம் அன்னதானம்பட்டி யில் கட்டப்பட்டது.

1840 ல் அறைவீடு, சத்திரம் கட்டப்பட்டது.

1850 ல் அருட்பணி மரிய சவரிநாதர் இப்பங்கின் முதல் குரு ஆனார்.

1851 ல் புனித செபஸ்தியார் குருசடி கட்டப்பட்டது.

1852 ல் குருக்கள் இங்கு குடியிருக்கத் துவங்கினர்.

1860 ல் 30 அடிகள் உயர மணிக்கூண்டு கட்டப்பட்டது.

1861 ல் பள்ளிக்கூடம்.

1887 ல் புனித மரியன்னை திரு இருதய மடம் உருவானது.

1902 ல் புனித ஆரோக்கியநாதர் பஜனை மடம்.

1920 ல் ஜெயராக்கினி பள்ளிக்கூடம்.

1922 ல் தற்போதைய ஆலயம் மற்றும் மணிக்கூண்டு கட்டப்பட்டது.

1940 ல் ஜெயராக்கினி பிரஸ் உருவானது.

1952 ல் குளூனி கன்னியர் மடம்.

12-03-1957 ல் ஆயர் மேதகு புருனியர் அவர்கள் உடல் அடக்கம்.

1979 ல் தூய ஆரோக்கிய அன்னை ஜெபக்கூடம்.

06-12-1975 ல் பங்கு ஆலய அர்ச்சிப்பு.

27-11-1991 ல் இணைப் பேராலயமாக உயர்த்தப் பட்டது.

1996ல் குளூனியர் கன்னியர் இல்லம்.

இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு 21-08-2011 அன்று அர்ச்சிக்கப்பட்டது.