இன்றைய புனிதர் - ஜனவரி 12 - புனிதர் மார்கரெட் பார்கெயாய்ஸ் ***


புனிதர் மார்கரெட் பார்கெயாய்ஸ்

(St. Marguerite Bourgeoys)

மாண்ட்ரியல் நோட்ரெடேம் சபையின் நிறுவனர்:

(Foundress of the Congregation of Notre Dame of Montreal)

பிறப்பு: ஏப்ரல் 17, 1620

ட்ரோயெஸ், ச்சம்பக்ன், ஃபிரான்ஸ் அரசு

(Troyes, Champagne, Kingdom of France)

இறப்பு: ஜனவரி 12, 1700 (வயது 79)

வில்-மேரி கோட்டை, நியு ஃபிரான்ஸ், ஃபிரெஞ்ச் காலனியல் பேரரசு

(Fort Ville-Marie, New France, French Colonial Empire)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை – கனடா

(Anglican Church of Canada)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 12, 1950

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)

புனிதர் பட்டம்: அக்டோபர் 31, 1982

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:

நோட்ரெடேம்-டி-போன்-செகௌர்ஸ் சிற்றாலயம், மாண்ட்ரியல், கியுபெக், கனடா

(Notre-Dame-de-Bon-Secours Chapel in Montreal, Quebec, Canada)

நினைவுத் திருநாள்: ஜனவரி 12

பாதுகாவல்:

வறுமைக்கு எதிராக, பெற்றோரை இழந்தவர்கள், ஆன்மீக சபைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள்

புனிதர் மார்கரெட் பார்கெயாய்ஸ், கனடா நாட்டின் “கியுபெக்” (Québec) பிராந்தியத்தின் இன்றைய பாகமான “நியு ஃபிரான்ஸ் காலனியில்” (Colony of New France) “மாண்ட்ரியலிலுள்ள நோட்ரெடேம் சபையை” (Congregation of Notre Dame of Montreal) நிறுவியவராவார். கி.பி. 1653ம் ஆண்டில், “வில்-மேரி கோட்டையில்” (Fort Ville-Marie) (தற்போதய மாண்ட்ரியல்) வாழ்ந்தவ இவர், இளம் பெண்களுக்கும், ஏழைகளுக்கும், பூர்வீக குடிகளுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமது மரணம் வரை கல்வி கற்பித்தவர் ஆவார்.

புனிதர் மார்கரெட் பார்கெயாய்ஸ், ஃபிரான்ஸ் அரசின் பழங்கால “ச்சம்பக்ன்” (Champagne) பிராந்தியத்திலுள்ள “ட்ரோயெஸ்” (Troyes) எனுமிடத்தில் கி.பி. 1620ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 17ம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர், “ஆபிரகாம் பார்கெயாய்ஸ்“ (Abraham Bourgeoys) ஆகும். தாயாரின் பெயர், “கில்லேமெட் கார்னியர்” (Guillemette Garnier) ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த பன்னிரண்டு குழந்தைகளில் ஆறாவது குழந்தை ஆவார். சமூகப் பின்னணி கொண்ட மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, ஒரு மெழுகுதிரி உற்பத்தியாளர் ஆவார். இவர் சிறுமியை இருக்கையில் இவரது தந்தையார் மரித்துப் போனார். இவருக்கு பத்தொன்பது வயதாகையில் இவரது தாயாரும் மரித்துப் போனார்.

மார்கரெட், ஏழைப் பெண்களின் கல்விக்கு ஆதரவளித்த பிரபலமானவர்களில் ஒருவரல்ல. அவர், சொந்த மனநிலையுடனும் தைரியத்துடனுமிருந்தார். அவர் ஒரு கடின வாழ்க்கை முறையில் வளர்ந்தவர் ஆவார். தமக்கு பதினைந்து வயதாகையில், தமது குடும்பத்தினரின் விருப்பத்தைக் காட்டிலும், தமது விருப்பத்தின்படி நடக்க முடிவு செய்தார். பின்னர், மார்கரெட் தனது ஆரம்ப காலங்களில் ஒரு விரிவுரையாளராக நன்கு அறியப்பட்டார். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், அவர் தேர்ந்து பேசியவற்றில் உண்மையில் ஆன்மிகமும் இருந்தது.

கி.பி. 1653ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், மார்கரெட் தன் சொந்த நாடான பிரான்சில் இருந்து “செயின்ட் நிக்கோலஸ்” (Saint-Nicholas) என்ற கப்பலில் கடல் பயணம் செய்தார். அவருடன் சுமார் நூறு பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர், வேலைகளுக்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சேர்ந்த ஆண்கள் இருந்தனர்.

செப்டம்பர் மாதம் 22ம் தேதி, “கியூபெக்” (Port of Quebec City) நகரின் துறைமுகம் சென்றடைந்த அவருக்கு, “ஊர்சுலின்” (Ursuline nuns) அருட்சகோதரியர் வரவேற்பளித்தனர். மற்றும் “வில்-மேரி” (Ville-Marie) செல்வதற்கான பயண ஏற்பாடுகளும் செய்திருந்தனர். அவர் அந்த வாய்ப்புகளை மறுத்து, ஏழை குடியேறியோருடன் கியூபெக்கில் தங்கியிருந்தார். மாண்ட்ரியலில் உள்ள அவரது சபையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால தன்மையின் இந்த குறிப்புகள் - கடவுளுடைய சித்தத்தை பரப்ப ஒரு மதச்சார்பற்ற மற்றும் நடைமுறை அணுகுமுறையாக இருந்தது. நவம்பர் மாதம் 16ம் நாள் அவர் “வில்-மேரி” (Ville-Marie) சென்றடைந்தார்.

புதிய பிரான்சில் மார்கரெட் வாழ்க்கையின் இந்த காலகட்டம், விரிவாக்க நோக்கம் மற்றும் செல்வாக்கைப் பொறுத்தவரையில் அவரது பிற்பகுதியுடன் ஒப்பிடுகையில், அது மிகவும் நெருக்கமானதாகவே காணப்படுகிறது. காலனியிலுள்ள ஒவ்வொருவரும் மார்கரெட்டை அறிந்திருந்தனர். இருப்பினும், அவர் அங்கு முதல் ஆண்டுகளில் கடினமான போராட்டங்களை எதிர்கொண்டார். குழந்தைகளின் இறப்பு விகிதம் அங்கே அதிகரித்திருந்த காரணத்தால், கல்வி கற்க அங்கே குழந்தைகள் வரவில்லை. இதன் காரணமாக, கல்வி கற்பிப்பதற்கான தனது திட்டத்தில் அவர் விரக்தியடைந்தார். இதைத் தவிர, சமூகத்துக்கு எந்த வகையிலும் உதவுவதற்கு அவர் தன்னை தானே அமைத்துக்கொண்டார். பெரும்பாலும் குடியேற்றக்காரர்களுடன் சேர்ந்து பணியாற்றினார்.

இந்த ஆரம்ப வருடங்களில், சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் செய்து நிர்வகிக்க மார்கரெட்டால் முடிந்தது. கி.பி. 1657ம் ஆண்டு, “வில்-மேரியில்” (Ville-Marie) முதல் நிரந்தர தேவாலயமான, “நல்ல ஆலோசனை அன்னை” (The Chapel of Our Lady of Good Counsel) சிற்றாலயம் கட்டும் பணியை ஏற்றுக்கொண்டார். கி.பி. 1658ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அவருடைய மாணவர்களுக்காக ஒரு பள்ளி இல்லம் கட்டுவதற்கான காலி மனை, “நியு ஃபிரான்சில்” (New France) “மாண்ட்ரியல்” (Montreal) நிர்மாணித்த ஃபிரான்ஸ் நாட்டின் இராணுவ அதிகாரியான “மைஸ்சொன்னெவ்” (Maisonneuve) என்பவரால் வழங்கப்பட்டது. மார்கரெட் வந்து ஐந்தே ஆண்டு காலத்தின் பிறகு, மாண்ட்ரியலில் பொதுப் பள்ளிகள் உருவாக இதுவே ஆரம்பமாக அமைந்தது. இன்று ஒரு நினைவு சின்னம் “பழைய மாண்ட்ரியலில்” (Old Montreal) நிலையான பள்ளியின் தளத்தை குறிக்கிறது. இந்நினைவுத் சின்னமானது, “செயிண்ட்-டிஸியர்” (Saint-Dizier) மற்றும் “செயின்ட்-பால்” (Saint-Paul) தெருக்களின் தென்மேற்கு மூலையில் உள்ள ஒரு சுவரில் காணப்படுகின்றது. பள்ளிகளின் ஸ்திரத்தன்மையை பெற்ற பின்னர், மேலும் அதிக பெண்களை கற்பிக்கும் பணிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தாயகமான ஃபிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.

சரியான நேரத்தில், சரியான இடத்தில் “அரசனின் மகள்களை” (King's Daughters) கவனித்துக்கொள்ளும் பணியில் மார்கரெட் வெற்றி பெற்றிருந்தார். காலனியில் குடும்பங்களை ஸ்தாபிக்கும் காரணத்துக்காக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த அனாதைப் பெண்களை அரசாங்கமே அனுப்பி வைத்தது. மனைவி வேண்டி வந்த காலனியின் ஆண்களை பரீட்சித்து அவர்களுக்கு பொருத்தமான பெண்களை மனம் செய்து வைப்பதும் மார்கரெட் மற்றும் அவரது நான்கு இணை தோழமைகளின் பொறுப்பாகவும் இருந்தது.

நியு ஃபிரான்ஸ் காலனியை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் மார்கரெட் காட்டிய ஈடுபாடு அளப்பற்றது. கல்வியிலும் எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவி நிர்வகித்தார்.

சிறந்த ஆசிரியரான மார்கரெட் பார்கெயாய்ஸ், கி.பி. 1700ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் நாள், அமைதியாக மரித்தார்.

“அரசனின் மகள்கள்” (King's Daughters):

“அரசனின் மகள்கள்” (King's Daughters) என்பது, சுமார் 800 இளம் பிரெஞ்சு பெண்களைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

கனடாவின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்காக “அரசன் பதினான்காம் லூயிசால்” (Louis XIV) சில திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. 

இதன் முக்கிய இரண்டு பகுதிகளாவன:

1. புலம்பெயர்ந்து வந்த ஆண்களை நிரந்தரமாக குடியேற ஊக்குவித்தல்.

2. திருமணத்தை ஊக்குவித்தல், குடும்ப உருவாக்கம் மற்றும் குழந்தைகளின் பிறப்பு.

இதற்காக, கி.பி. 1663 மற்றும் 1673ம் ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில், சுமார் எண்ணூறு இளம் ஃபிரெஞ்ச் பெண்கள் “நியு ஃபிரான்ஸ்” (New France) காலனிக்கு புலம் பெயர்ந்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள் “அரசனின் மகள்கள்” ((King's Daughters)) என்றும் “அரசனின் பாதுகாவலில் உள்ளவர்கள்” (King's Wards) என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்களது பயணத்துக்கான செலவுகள் முழுதும் அரசனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.