கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 13 /25 ***


“ என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்பு பெற்றது எப்படி?”

லூக்காஸ் 1 : 43

   “ இதோ உன் தாய்”   அருளப்பர் 19 : 27

முதல் வசனத்தில்ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு முன் எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு சொல்லிய வார்த்தை இது. தூய ஆவியானவர் இயேசு பிறப்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் அன்னை மரி இறைவனின் தாய் என்று,

இரண்டாவது  வசனத்தில்இறைவார்த்தை சுதனாகிய இயேசு தன் பாடுகளின் உச்சத்தில், தான் மரிப்பதற்கு சற்று முன், எனக்காக கடவுள் கொடுத்த தாயை நான் சும்மா விட்டுவிட போவதில்லை, கடவுளின் திருத்திட்டம் நிறைவேற, வெற்றி பெற தன்னையே அளித்த என் அன்புத்தாயை இதோ நான் உலக மக்கள் அனைவருக்குமே தாயாக தருகிறேன் என்று தன் உலக வாழ்க்கைமுடியும் கடைசி தருவாயில் இயேசு நமக்குத் தருகிறார்.

இந்த இரண்டாவது வசனத்தை இன்னும் ஆழமாக சிந்தித்து பார்த்தால் இறைவன் இயேசு தான் வாழ்ந்த 33 ஆண்டுகளும் சரி அல்லது நற்செய்தி அறிவித்தவித்த கடைசி மூன்று ஆண்டுகளும் சரி இயேசு எங்கேயும் சொல்லவில்லை. “ இதோ உன் தான் “ ஏன் ?

ஏனென்றால் தான் வாழ்ந்த காலத்தில் எனக்கு மட்டும் தாய் என் தாய் சொந்தம். எனக்கு என் தாய் வேண்டும்.அந்த அன்னையின் பாசம் வேண்டும். அந்த அன்னையின் தெய்வீக புண்ணகை வேண்டும். அந்த தாய் என்னோடு இருந்தால்தான் என்னால் என் பணியை செய்ய முடியும். அந்த தாயின் உடனிருப்பு எனக்கு தனிப்பட்ட ஒரு சக்தியை தருகிறது. அந்த தூய்மையான தெய்வீக அன்பான துணையிருப்பு இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்று என்றுதான் தன் தாயை நமக்கு தாரைவார்த்துக்கொடுத்தார்.

அன்னையின் அன்பு, பக்தி அவர் பிள்ளையான இயேசுவை விட்டு யாரையும் செல்லவிடாது. மாறாக அவரிடமே கொண்டு வந்து சேர்க்கும். சேர்த்துள்ளது, சேர்த்துக்கொண்டும் இருக்கிறது. அதற்கு எத்தனையோ புனிதர்களும், அவர் பிள்ளைகளும் உதாரணம்..

இந்த கிறிஸ்துமஸ் காலங்களில், அன்னை கடவுளின் விசேச பேரன்பையும், மகிமையையும், பெற்ற காலமான இந்த காலகட்டங்களில் இந்த தெய்வீக பேரன்பு கொண்ட தாயின் கரங்களில் நம்மை ஒப்படைப்பது சாலவும் நன்று.

ஜெபம் : 2014 ஆண்டுகளுக்கு முன்பு இதே வேளையில் கபரியேல் தூதரின் மங்கள வார்த்தையை கேட்டபின்பும், புனித எலிசபெத் அன்னையை வாழ்த்திய போதும் நீர் எவ்வளவு பேருவுவகை கொண்டிருப்பாய் அம்மா. உலகத்திற்கு மீட்பு உன் வழியாகத்தான் இந்த உலகத்திற்கு வர இருக்கிறது என்ற செய்தி உன் காதில் ஒலித்ததும் எவ்வளவு தெய்வீக மகிழ்ச்சி அடைந்திருப்பாய்.அந்த உன்னுடைய மகிழ்ச்சிக்கு இந்த உலகத்தில் உள்ள எந்த மகிழ்ச்சி ஈடாகும். அந்த உன் மகிழ்ச்சியை நினைத்துப்பார்க்கிறோம். 

அதே வேளையில் அதன் பின்பு நீ எத்தனையோ கஷ்ட்டங்கள், வேதனைகள் ஏன் வியாகுலமே அடைந்தாலும் உன் அன்பு மட்டும் மாறாமல் இருப்பதற்கு காரணம் உன் தெய்வீக குணாதிம்தான் காரணம்.

இப்பேர்பட்ட பேரன்பு கொண்ட உன்னை எங்களுக்கு தாயாக தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி உன் தெய்வீக துணையிருப்பில் எங்களை பேணிக்காத்து இறைவன் திருப்பாதத்தில் முழுமையான அவரின் பிள்ளையாக உம்மிடம் வேண்டி எங்களை உம் குமாரன் பிறப்பு விழாவுக்கு தயாரிக்க வரம் தாரும் – ஆமென்.