புனித குழந்தை தெரசாள் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்
இடம் : புஷ்பகிரி.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : கொல்லங்கோடு.
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்
பங்குத்தந்தை : அருட்தந்தை தேவதாஸ்.
நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் :150
அருள் வாழ்வியம் (அன்பியங்கள்) : 12
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை.
திருவிழா : அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஏழு நாட்கள் நடைபெறும்.
வழித்தடம் : கொல்லங்கோடு - பாறசாலை பிரதான சாலையில் சூழால் என்ற இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ உள்ளே சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.
வரலாறு :
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியார் பெயரில் திருமுழுக்கு கொடுங்கள் (மத் 28:20) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு மொழியினைக் கடைபிடித்து அவரது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமையாரின் நற்செய்தி அறிவிப்பு பணியில் உருவாகிய மலங்கரை கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், இறைமக்கள் ஆகியோரின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியினால் உருவானதே இப்புனிதமான புஷ்பகிரி - புனித குழந்தை தெரசாள் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்.
திருவனந்தபுரம் மறை மாநிலத்தின் கீழ் இயங்கி வந்த மெதுகும்மல் (இன்றைய நடைக்காவு) பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை டேனியல் தோட்டம் அவர்கள், ஆனப்பாறையை சுற்றியுள்ள மக்கள் மந்திரவாதம், கொதிக்கு ஓதுதல், எதுப்பு, கண்பேறு, பில்லி சூன்யம் போன்ற மூட நம்பிக்கைகளில் வாழ்ந்து வந்ததைக் கண்டு, இவர்கள் இறைவனை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இப்பகுதியில் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட திரு. பொடிக்குட்டி நாடார் அவர்களை சந்தித்து ஒரு தேவாலயம் அமைப்பது அவசியம் என்பதை எடுத்துக் கூறினார். அவர் இப்பகுதியில் உள்ள சில நல்லுள்ளங்களின் நிலங்களை வாங்கி, இப்பகுதி நல்லுள்ளங்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் அருகில் உள்ள அடைக்காகுழி, குறப்புறம் பகுதியை சார்ந்த இருவர் ஆகியோரின் விடா முயற்சியால் 29-06-1966 ல் ஓலையால் ஆன தேவாலயம் நிறுவப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டது. இத் தேவாலயத்தின் முதல் ஞானஸ்நானம் 26-08-1966 ல் கொடுக்கப் பட்டது.
பங்கின் வளர்ச்சி :
அருட்தந்தை டேனியல் தோட்டம் அவர்களின் அயராத உழைப்பால் ஆனப்பாறை, வலியவிளை, விளாத்திவிளை, பொட்டன்விளை, கூட்டாங்கல்விளை, சிறிய குடையால் விளை, நெய்தவிளை, குழிஞ்ஞான் விளை, குடையால் விளை, மேலோட்டு விளை, கல்லம்பொற்றை ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து இறை இயேசுவின் மாண்பினை வெளிப்படுத்தி, தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுத்து தேவாலய உறுப்பினராக்கினார்.
அருட்தந்தை பிலிப்போஸ் தோமஸ் அடிகளார் அவர்கள் இத்தேவாலய மக்கள் பொருளாதாரத்தில் குன்றியிருப்பதைக் கண்டு நிலச்சீர்திருத்தத் திட்டம், நெய்யாறு இடதுகரை சானல் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்.
அருட்தந்தை சக்கரியாஸ் குழிப்பறம்பில் அவர்கள் ஓலை மேற்கூரையாலான ஆலய கட்டமைப்பு நிலையை மாற்றி, கருங்கல்லினால் அமையப்பெற்ற சிறப்பான புஷ்பகிரி தேவாலயத்தை அமைத்தார்கள். இதற்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்த Mrs. Julia Quinee அவர்கள் நிதி உதவி செய்தார்கள்.
இப்பங்கில் மேரி மக்கள் கன்னியர் சபையிலிருந்து பல கன்னியர்கள் நன்முறையில் இறைப்பணியாற்றி, பங்கின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். 2013 ம் ஆண்டு மேரி மக்கள் கன்னியர் இல்லம் நிறுவப் பட்டது.
அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் பணிக்காலத்தில் அவரது முயற்சியில் குருசடி நிறுவப்பட்டது. அருட்தந்தை அருள்தாஸ் பணிக்காலத்தில் குருமேடை மற்றும் கொடிமரம் நிறுவப் பட்டது.
புஷ்பகிரி பங்கின் பொன்விழா ஆண்டில், புதியகுருமேடை 24-05-2015 அன்று நிறுவப்பட்டது. 13-06-2015 அன்று அருட்தந்தை ஜெனன் ஜெரால்டு அவர்களால் மணிமேடைக்கு அடிக்கல் நிறுவப்பட்டு, பங்குமக்களின் உழைப்பு மற்றும் நன்கொடைகளால் பணிகள் நிறைவு பெற்று 04-12-2016 ல் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் அழகிய மணிமேடை அர்ச்சிக்கப் பட்டது.
பங்கின் இறை அழைத்தல்கள் :
1. அருட்தந்தை ஜெயபால்
2. அருட்தந்தை சஜி P. சைமன்
3.அருட்தந்தை கெபின்
மேலும் இறையியல் படிக்கும் Rev Bro பெனடிக்ட் ஆன்றோ, இளம் குருமடத்தில் படிக்கும் Rev Bro ஷபின் மற்றும் Rev Bro பிஜேஷ் ஆகியோர் இப்பங்கிற்கு கிடைத்த அன்பான இறை அழைத்தல் முத்துக்களாகும்.
பங்கில் இறைப்பணியாற்றிய அருட்தந்தையர்கள் :
Fr. ஜோசப் ஞாயல்லூர் வருகை தந்து திருப்பலி நிறைவேற்றினார்கள் அவரைத் தொடர்ந்து
Fr. ஜேக்கப் களியங்கானம்
Fr. ஜோண் குற்றியேல்
Fr. ஜோஸ்வா தாழந்தேயில்
Fr. ஜான் தாழையில்
Fr. ஜோசப் பிலாங்காலை
Fr. பிறேம் குமார்
Fr. செலஸ்டின்
Fr. ஜார்ஜ் தாவரத்தில்
Fr. ஜஸ்டின் நுள்ளிக்காடு
Fr. பெர்னார்ட் நடுத்தேரிவிளை
Fr. அருள்தாஸ்
Fr. ஜெனன் ஜெரால்டு
Fr. தேவதாஸ்.
இவ்வாறு சிறப்புற்று விளங்குகின்றது பொன்விழா கண்ட புஷ்பகிரி புனித குழந்தை தெரசாள் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்.