158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை


திருக்குடும்ப ஆலயம் 

இடம் : தக்காளிவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறை மாவட்டம் : தக்கலை

நிலை : பங்குதளம் 

கிளைகள் : இல்லை 

திருத்தந்தை : பிரான்சிஸ் 

ஆயர் : மேதகு மார் ஜார்ஜ் இராஜேந்திரன் 

பங்குத்தந்தை : அருட்தந்தை ஜஸ்டின் சுதீஷ் 


குடும்பங்கள் : 60
உறவியம் (அன்பியம்) : 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு 

திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 06.00 மணிக்கு திருப்பலி 


புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும். 

திருவிழா : ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் ஐந்து நாட்கள். 

வரலாறு :

திருக்குடும்ப ஆலயமானது 30-11-1997 அன்று சூசைபுரம் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து பிரிந்து இணைப் பங்காக "பேரருட்தந்தை பிலிப் கொடியந்தரா" அவர்களின் பெரும் முயற்சியால் துவக்கப்பட்டது. 

கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் ஆயராக இருந்த அக்கால கட்டத்தில் தக்காளிவிளையில் செயல்பட்டு வந்த பாலர் பள்ளியினை புதுப்பித்து ஆலயமாக மாற்றி முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 

அன்று முதல் புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலியும், ஜனவரி மாதத்தில் திருக்குடும்ப திருவிழாவும் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதற்கு முன்பாகவே 1971  ம் ஆண்டு முதல் அருட்தந்தை தோமஸ் முட்டத்து குன்னேல் அடிகளாராலும், பின்பு அருட்தந்தை மாத்யூ வாக்கேல் அடிகளார் அவர்களாலும் பூர்வாங்க பணிகள் வெள்ளியாவிளை மற்றும் தக்காளிவிளையில் நடைபெற்று வந்தது. 

சூசைபுரத்தில் செயல்பட்டு வந்த வின்சென்ட் தே பவுல் சங்கத்தின் உறுப்பினர்களாயிருந்த தக்காளிவிளையைச் சார்ந்த அன்பர்கள் திருக்குடும்ப ஆலயம் அமைய காரணமாயிருந்தனர்.

அவர்கள் மக்கள் நலனுக்காக உருவாக்கிய கிணறு ஆலயத்தின் அருகாமையில் இன்றளவும் பயன்தருகிறது. 

பங்கு மக்களின் மனதில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்ததை உணர்ந்த அருட்தந்தை ஜான் புதுமனை அவர்கள் 2005 ம் ஆண்டு ஆலய பயன்பாட்டிற்காக 20 சென்ட் நிலத்தை ஆயரின் உதவியுடன் வாங்கினார். அன்று முதல் ஆலயம் கட்ட தேவையான பொருளுதவிகள் சிறுகச் சிறுக திரட்டப்பட்டு வந்தது. 

26-02-2017 அன்று அருட்தந்தை லின்ஸ்லால் மங்கலத்தில் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடந்து வந்தது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும், மற்ற நாட்களில் மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 20 க்கும் மேற்பட்ட பங்கு மக்கள் ஆலயப் பணிகளை எவ்வித ஊதியமுமின்றி உழைத்தது பெருமைக்குரிய செயலாக அமைந்ததோடு,  ஆலயப் பணிகள் குறுகிய காலத்தில் நிறைவடைய பேருதவியாக அமைந்தது. 

ஆலயப் பணிக்கு தேவையான பொருளுதவிகளை திரட்ட, திறம்பட திட்டமிட்டு மக்களோடு சேர்ந்து களப்பணியில் ஈடுபட்டு எட்டு மாதத்தில் பணிகளை நிறைவுச் செய்த பெருமை "அருட்தந்தை லின்ஸ்லால் மங்கலத்தில்"அவர்களையே சாரும். 

21-102017 அன்று மாலை 04.00 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மேதகு மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் புதிய ஆலயத்தை அர்ச்சித்து, முதல் திருப்பலி நிறைவேற்றி வைத்தார்கள். எழில்மிகு ஆலயமான திருக்குடும்ப ஆலயத்தை தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜஸ்டின் சுதீஷ்  அவர்கள்  சிறப்பாக வழி நடத்தி இப்பங்கை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்கிறார்கள்.

"வெறும் ஐந்து இலட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு 60 குடும்பங்களைக் கொண்ட இப் பங்கு மக்கள், எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆலயத்தை குறுகிய காலத்திலேயே முழுமையாக நிறைவு செய்து அர்ச்சிப்பு விழா எடுத்ததை இம்மக்களின் உழைப்பும், பங்குத்தந்தையின் ஒத்துழைப்பும் இறைவனின் ஆசீரும் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்". 

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:

பூர்வாங்க பணிகள் தக்காளிவிளை மற்றும் வெள்ளியாவிளை -யில்

1.Fr தோமஸ் முட்டத்து குன்னேல் 

2.Fr மாத்யூ வாக்கேல் 

3.Fr பிலிப் 

கொடியந்த பங்குதளம் திருக்குடும்ப ஆலயம் தக்காளிவிளை :

4.Fr பிலிப் கொடியந்தரா

5.Fr ஜான் புதுமனை 

6.Fr சிஜன் பதியில் 

7.Fr சினோஜ் காருபிளாக்கில் 

8.Fr ஜோஷி குளத்துங்கல்

9.Fr ஜோஷி புத்தன்புரைக்கல்

10.Fr ஆன்றனி ஜோஸ் 
11.Fr அலக்ஸ் புத்தேட்டு

12.Fr லின்ஸ்லால் மங்கலத்தில் 

13.Fr ஜஸ்டின் சுதீஷ்.. (தற்போது)

வழித்தடம் : 

இவ்வாலயமானது வெள்ளியாவிளையிலிருந்து சகாயநகர் செல்லும் சாலையில் தக்காளிவிளையில் அமைந்துள்ளது.