(காணிக்கைத் திருவிழா)
(Presentation of Jesus at the Temple)
கடைபிடிப்போர்:
கத்தோலிக்க திருச்சபை
(Church of Roman Catholic)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
மெதடிசம்
(Methodism)
திருவிழா நாள்: ஃபெப்ரவரி 2
“ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்.”
~ லூக்கா நற்செய்தி 2:23
இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரப்பூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் சூசையப்பரும், மரியாளும் எருசலேமில் இருந்த ஆலயத்தில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக் குறிக்கும். இது, ஃபெப்ரவரி மாதம் இரண்டாம் நாளன்று, ஆண்டு தோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையின் 12 பெருவிழாக்களில் இத்திருவிழாவும் ஒன்றாகும்.
இத்திருவிழா, புதிய ஏற்பாட்டின் லூக்கா எழுதிய நற்செய்தியில் (லூக்கா 2:22-40) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய கிறிஸ்தவ திருச்சபைப் பாரம்பரியங்களில் இத்திருவிழா கேன்டில்மஸ் (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எரியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறிஸ்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தினை நிறைவு பெறச்செய்கின்றது. இங்கிலாந்து திருச்சபையில் ஆங்கிலிக்கன் சமூகத்தினரின் தாய் திருச்சபை இவ்விழா, முதன்மைத் திருவிழாவாக ஃபெப்ரவரி மாதம் இரண்டாம் நாள் அல்லது ஜனவரி மாதம் 28ம் நாள் முதல், ஃபெப்ரவரி மாதம் 3ம் நாள் வரையான காலத்தின் இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும்.
கத்தோலிக்க திருச்சபையில், இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்த நிகழ்வு செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.