கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 23 /25 ***


“அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.  அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது “

லூக்காஸ் 1 : 32-34

ஆண்டவருடைய குரலை, வார்த்தையை ஆதாம் கேட்டார். மோசஸ் கேட்டார். எலியாஸ் கேட்டார். சாமுவேல் கேட்டார். சாலமோன் கேட்டார். நம் அன்பு அன்னை கேட்டார், சூசையப்பர் கேட்டார், ஸ்நாபக அருளப்பர் கேட்டார் அவர் பெற்றோர்கள் கேட்டார்கள். இயேசுவின் சீடர்கள் கேட்டார்கள்.. கடவுளின் குரலை எத்தனையோ இறைவாக்கினர்கள் கேட்டார்கள். இயேசுவின் குரலை எத்தனையோ புனிதர்கள் கேட்டார்கள் நாம் கேட்கிறோமா?

குறிப்பாக இயேசுவின் பிறப்பு விழாவுக்கு வெகு அருகில் இருக்கும் நாம், 2014 ஆண்டுகளுக்கு முன்பாக இதே காலத்தில்தான் எத்தனையோ இறைவாக்கு அறிவுப்பு நிகழ்த்து..

சக்கரியாஸ், அன்னை மரியாள், புனித சூசையப்பர், இடையர்கள், ஞானிகள் எல்லாருக்கும் அறிவிக்கப்பட்ட காலம் இது. இந்த காலத்தில் மட்டுமல்ல, தவக்காலம் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் அறிவிப்பு, அழைப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு நம் உள்ளத்தோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் நாம் அவர் குரலை கேட்பதும் இல்லை. அவரை கண்டுகொள்வதும் இல்லை. ஆனால் அவர் சோர்வுறுவதில்லை. விரக்தி அடைவதில்லை.தொடர்ந்து அழைத்துக்கொண்டும் காத்துக்கொண்டும் நம் இதயம் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறார் என்றாவது ஒரு நாள் என் குரலை கேட்பான், கேட்பாள் என்று..

அவர் மட்டும்தான் காத்துக்கொண்டிருக்கிறாரா என்ன ? நம்மில் பலர் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தான் நேசிப்பவர்களின் நேசத்திற்காக காத்திருக்கிறார்கள்.. எதிர்பார்ப்பது போல் கணவனோ மனைவியோ கிடைக்க காத்திருக்கிறார்கள்..நல்ல வேலை கிடைக்க காத்திருக்கிறார்கள், விரும்பிய படிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.. வெளி நாட்டில் வேலைகிடைக்க, சொந்த வீடு கட்ட, கை நிறைய பொருள் ஈட்ட என்று உலகம் சார்ந்த விசயங்களுக்காகவும், தன் சொந்த ஆசைகள் நிறைவேறவும் எத்தனையோ காத்திருப்பு தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

அது தவறு என்று சொல்லவே இல்லை. ஆனால் அந்த 

விசயங்களே இதயத்தையும், சிந்தனையும் ஆக்கிரமித்து விடுவதால் நமக்காக காத்துக்கொண்டிருக்கும் இயேசு நினைக்க நேரம் இல்லை..

நாம் எல்லாருக்கும்  “ YES“  சொல்லிவிட்டு கடவுளுக்கு மட்டும்  “NO” சொல்வது நியாயமா ? நீதியா ? நம்மை படைத்து, நம்மை காத்து, நம்மை பராமரிக்கும் கடவுளுக்கு மட்டும் “NO” ஆனால் அவர் தவிர அனைத்திற்கும் “ YES“ . இது மட்டும் சரியா ? சிந்திப்போம்..

ஜெபம் : அன்பின் இறைவா !  நீ தவிர எல்லாமே எங்களுக்கு முக்கியமாக தெறிவதால்தான் எங்களுக்கு முக்கியமான இருக்க வேண்டிய  நிம்மதி எங்களிடம் இருந்து miss ஆகி விடுகிறது. உன்னை நாங்கள் மிஸ் பன்னுவதால் நிம்மதியும் மிஸ்ஸாகிவிடுகிறது..

இனி நாங்கள் யாருக்கு  " YES" சொல்லுகிறோமோ இல்லையோ உமக்கு முதலில் " YES" சொல்லுகிறோம்..இப்போதே சொல்லுகிறோம் சொல்லியும் விட்டோம். இனி நாங்கள் யாரை எதை Miss பன்னினாலும் உம்மை மட்டும் Miss பன்ன மாட்டோம்..

உம் பிறப்பு விழாவுக்கு இதுதான் சிறப்பான தயாரிப்பாக இருக்கும்.. அதற்குண்டான தைரியத்தை எங்களுக்கு கொடுக்க உம்மை நோக்கி மன்றாடுகிறோம் - ஆமென்