புனித செபஸ்தியார் ஆலயம்.
இடம் : கோமல் (குத்தாலம் அருகில்)
மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய இருதய ஆண்டவர் ஆலயம், மாந்தை.
குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : இல்லை.
ஞாயிறு திருப்பலி : இல்லை (.....?)
சுமார் நூறு வருடங்கள் பழமையான இந்த ஆலயமானது மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் ஜூபிலி விழா கண்டது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை மட்டுமே திருப்பலி நடந்து வந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களாக திருப்பலிகள் நடைபெறுவது இல்லை.
பங்குதளமாகிய மாந்தை நகரிலிருந்து இவ் ஆலயம் வர 8கிமீ தொலைவு இருப்பதாலும் அருட்பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் திருப்பலிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இம்மக்கள் வேறு சபைகளுக்கோ அல்லது வேறு ஆலயங்களுக்கோ செல்லாமல் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
(பாருங்கள் ஒரு திருப்பலி காண இம் மக்கள் ஏங்குகின்ற சூழ்நிலையில் , நாம் திருப்பலிகள் இருந்தும் ஆலயம் செல்லாமல் இருப்பதை நினைத்துப் பாருங்கள் )
ஆகவே இம்மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், திருப்பலிகள் கிடைக்கவும் இறைவனிடம் மன்றாடுவோம்.