திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…
இயேசு சுவாமியை அடக்கம் செய்கிறார்கள்…
பிறந்த போதும் சொந்த இடம் இல்லை.. அடக்கம் செய்வதற்கும் சொந்த இடமில்லை..
ஒன்றரை நாட்களாக மனதிலும், உடலிலும் தொடர்ச்சியாக அனுபவித்த இன்னல்கள்.. பட்ட வேதனை.. பாடுகள்.. அதாவது ஒரு பத்து நிமிடம் கூட அவரை சும்மா இருக்க விடவில்லை.. பெரிய வியாழன் இரவிலிருந்து அவர் தேகம் பட்ட துயரம்.. கட்டி இழுத்தல் .. இங்கே.. அங்கே என்று அழைக்கலித்தல்.. இடையிடையே அடி.. உதை.. அவமானம்.. திருமேனி கிழிதல்.. கடைசியில் சிலுவையில் அறைதல்.. சிலுவையில் மூன்று மணி நேரம்.. வாதை.. ( மத்தேயு நற்செய்திப்படி பார்த்தால் 6 மணி நேரம்).. என்ன ஒரு வாதை.. எவ்வளவு பெரிய பரிகாரம்..
இப்போது அந்த திருத்தேகம் அமைதியாக ஓய்வு பெறுகிறது..
பிறப்பு ஓரு எளிமை.. 30 ஆண்டுகள் வாழ்ந்த வீடு…ஏழை வீடு என்பதை விட ஏழை கூடு என்பதே சரி.. பெற்றோர்கள் ஏழை.. செய்த தொழில் குடிசைத்( தச்சு) தொழில்.. ஏழைத் தொழில்.. உணவு.. எளிமையான ஏழை உணவு.. தொழில் இல்லாத போது பட்டினி… தொழில் இருந்த போது ஏழைகளுக்கு தானம்..
திருக்குடும்பம் எப்படி வாழ்ந்திருக்கும் அனுதினமும் ஜெபம்.. இரவு ஜெபம்.. உப வாசம்.. பாடுகளியப்பற்றிய தியானம்.. ஜெபம்.. தவம்.. பரிகாரம்..
இது எப்படித் தெறியும்..?
ஆண்டவரும் சரி… மாதாவும் சரி தாங்கள் கடைபிடிக்காத ஒன்றை மக்களுக்குச் சொல்வதில்லை.. அவர்கள் கடைபிடித்த அளவு நம்மால் கடைப்பிடிக்க முடியாது என்பதே உண்மை..
இயேசு சுவாமி பொது வாழ்வுக்கு வந்துவிட்டார்..
மூன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியான ஓயாத நற்செய்திப்பணி.. ஒரே அலைச்சல்.. பயணத்தால் களைத்திருந்தாலும் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்குபோது கூட அங்கேயும் போதனை..
“ பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார் “ அருளப்பர் 6:4
மூன்றரை ஆண்டுகள் எங்கே தங்கினார்..
“ அவர் பகலிலே கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குப் போய் வெட்டவெளியில் தங்குவார்.
பொழுது விடிந்ததும், கோயிலில் அவர் சொல்வதைக்கேட்க மக்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள் “. லூக். 21: 37-38
இன்னொரு நற்செய்தி இரவெல்லாம் கண்விழித்து ஜெபித்தார் என்கிறது..
மேலும் இன்னொரு இடத்தில் இப்படிக்கூறுகிறார்.
இயேசு அவனை நோக்கி,
"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார். லூக் 9:58
இயேசு பாடவும் செய்தார்.. புகழ்பாக்கள் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றனர்..
சரி இப்படி ஓய்வில்லாமல்.. உறக்கமிலாமல்.. வெட்ட வெளியில் தங்கி நற்செய்தி பணி செய்தார் என்றால் அவர் சிலுவையில் மட்டும் நம் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வில்லை.. இந்த மூன்று ஆண்டுகளும் கூட நமக்காக பரிகாரம் செய்திருக்கிறார்..
எல்லா இடத்திலும்.. நல்லதையே போதித்தார்… நல்லதே செய்தார்.. புதுமைகள் பல செய்தார்.. மூன்று பேரை உயிர்த்தெழச் செய்தார்.. இப்படி அவர் நல்லதே செய்திருந்தாலும் அவரை நிம்மதியாக இருக்கவிட்டார்களா?
தலைமைக்குருக்கள், பரிசேயர், மறை நூல் வல்லுனர்கள்.. எல்லாவற்றிலும் குற்றம், குறை கண்டுபிடிப்பது.. தேவையற்ற வீன் வாதம்.. விதண்டா வாதம்..திட்டுதல்.. தள்ளிவிடுதல்.. கொலைமுயற்சி.. எரிய கற்களைப் பொறுக்குதல்.. அவருடைய ஒரு நல்லதைக் கூட பாராட்டாத கூட்டம்..
எப்போதும் அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் மன நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்..
காரணம் ஒன்றே ஒன்றுதான் ஒன்று பொறாமை உண்மையை ஏற்றுக்கொள்ள துணிச்சல் இல்லை.. முக்கியமானது அவர்கள் சுகபோக வாழ்வு பறி போய்விடுமோ என்ற பயம்..
ஆனாலும் நம் தெய்வம் அவரை நம்பியவர்களை கைவிடவில்லை நல்லது செய்வதை நிறுத்தவில்லை.. வந்த வேலையை செய்யாமலில்லை.. அதை 100 சதவீதம் செய்து முடிக்காமலில்லை..
ஆக .. பிறப்பிலிருந்து இறப்பு வரை.. அவர் நிம்மதியாக இருந்தார்.. சுகமாக வாழ்ந்தார். ஓய்வு எடுத்தார் என்று எதிலும் இல்லை. என்று எங்கேயும் இல்லை.. ஆனால் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை..
ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார் என்று இருக்கிறது.. இரவெல்லாம் விழித்தால் பகலில் உறக்கம் வரத்தானே செய்யும்..( மாற்கு 4: 38).. அங்கே அவர் புதுமையை மட்டும் செய்யவில்லை.. நம் விசுவாசம் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.. அவர் பிதாவின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் காட்டுகிறார்..( புயலை அடக்குதல் நிகழ்ச்சி)
மொத்தத்தில் நம் ஆண்டவரின் மொத்த வாழ்க்கையையும் எடுத்தால்..
குளிர், வெயில், பசி, பட்டினி, அயராத உழைப்பு, உபவாசம், எப்போதும் ஜெபம், தியானம், துன்பம், நெருக்கடி, வலி, வேதனை, தாகம் கடைசியில் சொல்லொன்னா பாடுகள்..
இப்போது அவர் திருத்தேகம் சற்று ஓய்வு பெருவது.. நியாயம்தானே.. தேவைதானே..
அதே சமையம் நம் வாழ்வை எடுத்துக்கொண்டால்.. அவர் அனுபவித்தவற்றுள் ஒரு சிறிய பிரச்சனை, துன்பம், நோக்காடு, அவஸ்தை.. வந்துவிட்டால்.. ஒரே.. முனுமுனுப்பு.. புலம்பல்..
“ எனக்கு மட்டும் ஏன் பிரச்சனை வருகிறது.. இந்த கடவுளுக்கு கண் இல்லையா? காது கேட்காதா?..
ஆண்டவர் பிறப்பு முதல் இறப்பு வரை தான் செய்ததைத்தான் சொன்னார்.. தான் சொல்லியதைத்தான் செய்தார்.. அவர் செய்யாத எதையும் நம்மை செய்யச் சொல்லவில்லை.. அவர் நமக்காக சிலுவை சுமந்தார்.. நம்மை நமக்காகவது சிலுவை சுமக்கச் சொல்லுகிறார்.. அதில் என்ன கஷ்ட்டம்..
அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும். லூக் 9 :23
நம்மை அவர் சிலுவையைத் தூக்க அவர் கேட்கவில்லை…அது நம்மால் முடியாத காரியம் என்பது அவருக்குத்தெறியும் நம்மை நம்முடைய சிலுவைகளைத்தான் சுமக்க சொல்கிறார்..
அதில் என்ன கஷ்ட்டம்..?
நாம் கொஞ்சம் சுமந்தால் மீதியை அவர் தோலில் அவர் வாங்கிக்கொள்வார்.. ஆனால் அதற்கே நமக்கு மனசு வர மறுக்கிறதே..
இதோ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவர் திருச்சரீரம்.. நம்மை உலுக்குகிறது.. நம்மைப் பார்த்து கேட்கிறது..
“ என்னோடு உங்கள் சிலுவைகளை சுமக்க நீங்கள் தயாரா? “
நம் பதில் என்ன?.. நம்முடைய சிலுவையை தூக்க நாம் தயாரா? அட்லீஸ்ட் நம்முடைய பாவங்களையாவது ஆண்டவர் கல்லறையில் வைத்து அடக்கம் செய்வோமா?
எங்கள் பெயரில் தயவாயிரும்.. சுவாமி… தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
தவக்காலச்சிந்தனைகள் 25: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 14-ம் ஸ்தலம்.. ***
Posted by
Christopher