கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 25 /25 ***


 “  உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாவதாக ! உலகிலே அவர் தயவுபெற்றவர்க்கு அமைதி ஆகுக ! “

               லூக்காஸ் 2 : 14

அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துபிறப்பு நல்வாழ்த்துக்கள் மற்றும் பாலன் இயேசுவின் ஆசீர்வாதங்கள்...

ஒரு புனிதர் இயேசுவை சந்தித்து வாழ்த்து கூறுகிறார். இருவரும் கொஞ்சம் உறையாடுகிறார்கள்

புனிதர் : இயேசு தெய்வமே  “ Happy birth day to You “

இயேசு : Thank you

புனிதர் : இன்னைக்கு என்ன உங்க Birth day ஸ்பெசல்

இயேசு : அதுவா ! நேற்று இரவு முதல் இன்று அதிகாலை எல்லா ஆலயத்திலும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். கேக் கட் பன்னினார்கள். மக்கள் விழித்திருந்து ஆலயவழிபாட்டில் பங்கேற்றார்கள்.

புனிதர் : அப்புறம்?

இயேசு : என் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தினார்கள். என் பிறந்த நாள் அன்று அனைத்து மக்களும் புத்தாடை உடுத்தினார்கள்.

புனிதர் : அப்புறம்?

இயேசு : நிறைய வீடுகளில் குடில் அமைத்திருந்தார்கள். சில பொது இடங்களில் அதிக பொருட்செலவில் பெரிய பெரிய குடில் அமைத்திருந்தார்கள்

புனிதர் : அப்புறம்?

இயேசு : என் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் ஸ்வீட் செய்வார்கள். உறவினர்கள், நண்பர்களை இல்லங்களுக்கு அனைத்து அவர்களோடு மகிழ்வார்கள்.

புனிதர் : அப்புறம்?

இயேசு : ஆலய முற்றங்களில் போட்டிகள் நடத்தி மகிழ்வார்கள். இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்

புனிதர் : அப்புறம்?

இயேசு : பேஸ் புக்கில கிறிஸ்மஸ் இமேஜ் சேர் செய்வார்கள். இன்னும் நிறைய கொண்டாட்டங்கள் என் பிறந்த நாளை முன்னிட்டு...

புனிதர் : அப்புறம் ஏன் வாட்டமாக இருக்கிறீர்கள் ?

இயேசு : என் பிறந்த நாளுக்கு எவ்வளவோ செலவு பன்றாங்க.. அப்படியே ஏழை எளியவர்களுக்கும் செலவு செய்யலாம். புத்தாடை வாங்க கூட பணம் இல்லாத குடும்பத்துக்கு புது துணி வாங்கி கொடுக்கலாம், இனிப்பு கொடுக்க்லாம். இந்த நாளில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி செய்யலாம்..

புனிதர் : இன்னும் நிறைய நல்ல விசயங்கள் செய்யலாம்

இயேசு : நோயாளிகள், முதியோர், கைவிடப்பட்டவர்கள், அனாதைகள் இவர்களோடு என் பிறப்பு விழாவைக் கொண்டாடலாம் அவர்களுக்கு உதவிகள் செய்யலாம். அதுவும் தவிர “ இந்த சின்னச்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் “ என்பதை என் பிறந்தாளில் கூட நினைப்பதில்லை

புனிதர் : ஆமால்ல ,,

இயேசு : இன்றைய கிறிஸ்தவர்களின் கொண்டாட்டங்கள் அவர்களுக்குத்தான் மகிழ்ச்சி தருகிறதே தவிர எனக்கு மகிழ்ச்சி தரவில்லை.. 

புனிதர் : உண்மைதான்..கொண்டாட்டமே வேண்டாம் என்று சொல்ல வர்றீங்களா?

இயேசு : கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அர்த்தமற்ற ஆடம்பரகொண்டாட்டங்கள் வேண்டாம் என்கிறேன். 

புனிதர் : ஏதோ சொல்லவர்றீங்க..

இயேசு நான் எதற்காக் வந்தேன் என்பதும். உன்னிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதும் உனக்கு நன்றாக தெறிந்தும் நான் விரும்புவதை ஏன் செய்ய மறுக்கிறாய் ? உண்மையின் இருப்பிடம், உண்மையின் உறைவிடம் நான் உன்னிடம் நான் கேட்பதெல்லாம். உன்னில் நான் என்னைக்காண வேண்டும் செய்வாயா?

இருந்தாலும் மக்களில் சிலர் என் பிறந்த நாளை அர்த்த்முள்ளதாகத்தான் கொண்டாடுகிறார்கள்..

என்ன இருந்தான் என் அன்பு மக்களுக்கு என் பிறந்த நாளில் நிறைய மகிழ்ச்சியையும் ஆசீர்வாததைதையும் அனைவருக்கும் தருகிறேன்..பெற்றுக்கொள்லுங்கள்..

ஜெபம் : பாலான உன்னைக்கொண்டாடும் வேளையில் எங்கள் உள்ளங்களையும் பாலர்கள் போல் மாற்றுகிறோம். பகை, பொறாமை, கோபம், வெறுப்பு, தீய எண்ணம், தீய செயல் இவைகளை விட்டுவிட்டு சமாதானம், பொறுமை, சாந்தம், இனிய சொல், புண்ணகை, விட்டுக்கொடுத்தல், அனைவரையும் நேசித்தல், நல்ல எண்ணம், நற்செயல் செய்து எம்மில் உன்னைக்காண வரம் தாரும். திவ்ய பாலன் இயேசுவே உன்னை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். உமக்கு நன்றி ..ஆமென்