இன்றைய புனிதர் - ஜனவரி 28 - புனிதர் தாமஸ் அக்குய்னஸ் ***


புனிதர் தாமஸ் அக்குய்னஸ்

(St. Thomas Aquinas)

துறவி/ குரு/ மறைவல்லுநர்:

(Friar/ Priest/ Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 1225

ரொக்காசெக்கா, சிசிலி அரசு

(Roccasecca, Kingdom of Sicily)

இறப்பு: மார்ச் 7, 1274

ஃபொஸ்ஸனோவா, திருத்தந்தையர் மாநிலம்

(Fossanova, Papal States)

ஏற்கும் சபை/ சமயம்: 

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)

புனிதர் பட்டம்: ஜூலை 18, 1323

திருத்தந்தை இருபத்தி இரண்டாம் ஜான்

(Pope John XXII)

முக்கிய திருத்தலங்கள்:

ஜாகொபின்ஸ் ஆலயம், டௌலூஸ், ஃபிரான்ஸ்

(Church of the Jacobins, Toulouse, France)

நினைவுத் திருவிழா: ஜனவரி 28

பாதுகாவல்: 

கத்தோலிக்க கல்வி நிலயங்கள் (Catholic Academies), புயலுக்கெதிராக (Against storms), மின்னலுக்கெதிராக (Against Lightning), வக்காலத்து வாங்குபவர்கள் (Apologists), இத்தாலி (Italy), புத்தக விற்பனையாளர்கள் (Book Sellers), பள்ளிகள் (Schools), பல்கலை கழகங்கள் (Universities), கற்பு (Chastity), அந்துப்பூச்சி (Falena), கற்றல் (Learning), பென்சில் உற்பத்தியாளர்கள் (Pencil Makers), தத்துவயியலார்கள் (Philosophers), அறிஞர்கள் (Scholars), மாணவர்கள் (Students), ஸ்டோ பல்கலைக்கழகம் (University of Sto), இறையியலாளர்கள் (Theologians)

புனிதர் தாமஸ் அக்குய்னஸ், இத்தாலி நாட்டின் டொமினிக்கன் சபையைச் சேர்ந்த ஒரு துறவியும், கத்தோலிக்க மதகுருவும், மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் தோமியச் சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார். பண்டித நுணுக்கத்தால் பாரம்பரிய நீதியாளர் ஆவார்.

குருத்துவ கல்வி பயிலுபவர்களுக்கான ஒரு முன்மாதிரியாக கத்தோலிக்கத் திருச்சபை இவரைப் போற்றியது. திருச்சபையால் மறைவல்லுனர் (Doctor of the Church) என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள் இவருடைய பெயரில் தொடங்கப்பட்டன.

வாழ்க்கை:

புனிதர் தாமஸ் அக்குய்னஸ், சிசிலி அரசின் "ரொக்காசெக்கா" (Roccasecca) என்னுமிடத்திலுள்ள (தற்போதைய இத்தாலியின் "லாஸியோ" (Lazio Region) பிராந்தியம்) தமது தந்தையின் கோட்டை அரண்மனையில் பிறந்தார். இவரது தந்தை பெயர், "லண்டல்ஃப் அக்குய்னோ" (Landulf of Aquino) ஆகும். இவரது தாயார் "தியோடோரா" (Theodora) ஆவார்.

தமது ஐந்து வயதில், "மாண்ட்டே கஸினோ" (Monte Cassino) நகரில் தொடங்கிய இவரது ஆரம்பக் கல்வி, பேரரசன் “இரண்டாம் ஃபிரெடெரிக்” (Emperor Frederick II) மற்றும் திருத்தந்தை “ஒன்பதாம் கிரகோரி” (Pope Gregory IX) ஆகியோரிடையே கி.பி. 1239ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்த போரின் காரணமாக அங்குள்ள துறவு மடத்தில் சிதறியது.

தாமஸின் பெற்றோர் இவரை "நேப்பிள்ஸ்" (Naples) நகரில், "ஃபிரெடெரிக்" (Frederick) புதிதாய் ஆரம்பித்திருந்த பல்கலையில் சேர்த்துவிட்டனர். அங்கே தாமஸுக்கு "அரிஸ்ட்டாடில்", (Aristotle) "அவெர்ரோஸ்" (Averroes) மற்றும் "மைமொனிடேஸ்" (Maimonides) ஆகிய அறிஞர்களின் அறிமுகம் கிட்டியது. அவர்களனைவரும் தாமஸின் இறையியல் தத்துவ (Theological Philosophy) அறிவினால் ஈர்க்கப்பட்டனர்.

தாமஸ் தமது பத்தொன்பது வயதில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த "டொமினிக்கன் சபையில்" (Dominican Order) இணைய முடிவெடுத்தார். தாமஸின் மனமாற்றம் இவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. தாமஸின் முடிவுகளை மாற்ற அவரது தாயார் தியோடோராவின் தலையீடுகளை தடுக்கும் விதமாக, டொமினிக்கன் துறவியர் தாமஸை ரோமுக்கும், பின்னர் அங்கிருந்து பாரிஸ் நகருக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். ஆயினும், தாமஸின் தாயார் தியோடோராவின் ஏற்பாடுகளின்படி, ரோம் நோக்கி பயணத்திலிருந்த தாமஸ், ஒரு நீர்ச்சுனையில் தண்ணீர் அருந்தும் வேளையில் அவரது சகோதரர்கள் அவரைப் பிடித்து தமது பெற்றோரின் “மான்டே சான் ஜியோவானி காம்பனோவின்” (Castle of Monte San Giovanni Campano) கோட்டை அரண்மனைக்கு கொண்டு சென்றனர். டொமினிக்கன் சபையில் சேரும் தாமஸின் புதிய விருப்பத்தைத் தவிர்க்கும் விதமாக இவர் ஏறத்தாழ ஒரு வருடம் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

தாமஸ் தமது இந்த வீட்டுக்காவல் காலத்தை தம் சகோதரியருக்கு கல்வி கற்பிப்பதிலும், டொமினிக்கன் சபைத் துறவியருடன் தொடர்பு கொள்வதிலும் கழித்தார். டொமினிக்கன் சபையில் சேரும் எண்ணத்தில் உறுதியாக இருந்த தாமசை மனமாற்றம் செய்வது இயலாததென அவரது குடும்பத்தினர் நம்பினார். ஒரு கட்டத்தில், அவரது சகோதரர்கள் இருவர் அவரை தவறான வழியில் செலுத்த ஒரு விபச்சாரியை பணியமர்த்தும் நடவடிக்கையையும் கையிலெடுத்தனர். தாமஸ் அந்த பெண்ணை பழுக்க காய்ச்சிய இரும்பைக் கொண்டு விரட்டினார். அன்று இரவு, தாமஸ் உறங்கும் வேளையில் காட்சியளித்த இரண்டு தேவ தூதர்கள், அவரது பிரம்மச்சரிய மன உறுதியை வலுவாக்கினர்.

கி.பி. 1244ம் ஆண்டு, தாமஸின் மனமாற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில் அவரது தாயார் தியோடோரா, தமது குடும்பத்தின் கௌரவம் மற்றும் கண்ணியத்தைக் காக்க வேண்டி, அன்றிரவு தாமஸ் ஜன்னல் வழியாக வீட்டுக் காவலிலிருந்து தப்பித்துப் போக வழிவிட்டார். எல்லோருமறிய துறவு சபையில் சென்று சேர்வதைவிட, இரகசியமாக செல்வது குடும்ப கௌரவத்திற்கு குறைந்தபட்ச சேதாரமேயாகும் என நினைத்தார். முதலில் நேப்பிள்ஸ் நகருக்கு பயணித்த தாமஸ், “டொமினிக்கன் சபைகளின் பெரும்தலைவரான” (Master General of the Dominican Order) "ஜோஹன்னேஸ்" (Johannes von Wildeshausen) அவர்களை சந்திப்பதற்காக அங்கிருந்து ரோம் சென்றார்.

கி.பி. 1273ல் ஒருநாள், காலை வழிபாடுகளின் பின்னர், தாமஸ் “தூய நிக்கலஸ் சிட்றாலயத்தில்” (Chapel of Saint Nicholas) உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் சிலுவையில் பாடுபட்ட இயேசுவின் சொரூபத்தின் முன்னே தியானிக்கையில், ஆண்டவரே அவருக்கு தோன்றி, "தாமஸ், என்னைப்பற்றின உன்னுடைய எழுத்துக்கள் அருமையாக உள்ளன; நீ என்ன பிரதிபலன் எதிர்பார்க்கிறாய்" என்று கேட்டார். தாமஸோ, "ஆண்டவரே, நீரல்லாது எனக்கு வேறொன்றும் வேண்டாம்" என்றார். இந்நிகழ்வின் பின்னர் ஆண்டவருக்கும் தமக்கும் இடையே நடந்த சம்பாஷனை பற்றி தாமஸ் யாரிடமும் எதுவும் சொல்லவுமில்லை; எழுதி வைக்கவுமில்லை.

கி.பி. 1273ம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஆறாம் தேதி, மற்றொரு விசித்திர அனுபவம் நேர்ந்தது. திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த தாமசுக்கு ஒரு நீண்ட மெய்மறந்த இன்ப உணர்வு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் தமது வழக்கமான பணிகளை கைவிட்டார். தமது உதவியாளருக்கு அடுத்து செய்யவேண்டிய பணிகள் பற்றின உத்தரவுகள் கொடுக்க மறுத்தார். நான் எழுதிய எழுத்துக்களே என்ன ஈர்க்கின்றன என்றார். இதன் விளைவாக, அவர் எழுதிக்கொண்டிருந்த (Summa Theologica) என்ற இறையியல் இலக்கியம் நிறைவடையாமலேயே போனது. இறைவனுடன் தாமஸுக்கு ஏற்பட்ட அனுபவமே இதற்கு காரணம் என்பது கத்தோலிக்க விசுவாசம்.

கி.பி. 1054ம் ஆண்டு, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய திருச்சபைகளிடையே ஏற்பட்ட பெரும் பிளவின் காரணமாக கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளிடையே ஒற்றுமை உண்டாக்கும் முயற்சியாக திருத்தந்தை பத்தாம் கிரகோரி (Pope Gregory X) இரண்டாம் லியோன் சங்கத்தை (Second Council of Lyon) கி.பி. 1274ம் ஆண்டு, மே மாதம், முதல் தேதி, கூட்ட ஏற்பாடு செய்தார். அவர் தாமசுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் தாமஸ், திருத்தந்தை நான்காம் அர்பனுக்காக (Pope Urban IV) பணியாற்றினார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தாமஸ் ஒரு கழுதையின் மேல் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, அவரது தலை விழுந்திருந்த ஒரு மரத்தின் கிளை மீது மோதியது. மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தாமஸ் சிறிது ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார். ஆனால் மீண்டும் நோயில் வீழ்ந்த தாமஸ் வழியில் ஒரு துறவு மடத்தில் தங்கினார். சில நாட்களின் பிறகு, கி.பி. 1274ம் ஆண்டும், மார்ச் மாதம், ஏழாம் தேதி, தாமஸ் மரணமடைந்தார்.