செசாரியா நகர புனிதர் பாசில்
(St. Basil of Caesarea)
ஆயர், ஒப்புரவாளர் மற்றும் மறைவல்லுநர்:
(Bishop, Confessor and Doctor of the Church)
பிறப்பு: கி.பி. 329 அல்லது 330
செசாரியா, கப்படோசீயா
(Caesarea, Cappadocia)
இறப்பு: ஜனவரி 2, 379
செசாரியா, கப்படோசீயா
(Caesarea, Cappadocia)
ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கீழை வைதீக திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
நினைவுத் திருவிழா: ஜனவரி 2
பாதுகாவல்:
ரஷியா, கப்படோசீயா, துருக்கி, துறவிகள், மருத்துவமனை நிர்வாகிகள், கல்வி, பேயோட்டுதல், திருவழிபாட்டாளர்கள்
“செசாரியா நகர பாசில்” (Basil of Caesarea) அல்லது “புனித பெரிய பாசில்” (Saint Basil the Great), தற்கால துருக்கியில் (modern-day Turkey) “ஆசியா மைனரிலுள்ள” (Asia Minor) “கப்படோசீயா” (Cappadocia) “செசாரியா” (Caesarea) நகரின் கிரேக்க கிறிஸ்தவ ஆயராவார். இவர் தம் சமகால கிறிஸ்தவ இறையிலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். “நைசின்” (Nicene Creed) விசுவாச அறிக்கையினை ஆதரித்து “ஆரியன்” (Arianism) இன கொள்கைகளை எதிர்த்தார். “அப்பொலொனாரிசு” (Apollinaris of Laodicea) திரிபுக்கொள்கையினை இவர் பின்பற்றினார். இவர் தனது அரசியல் மற்றும் இறையியல் நம்பிக்கைகளை சமநிலையில் வைக்கும் திறன்மிக்கவராய் இருந்ததால் இவர் நைசின் விசுவாச அறிக்கையின் குறிக்கத்தக்க ஆதரவாளரானார்.
இறையியல் மட்டும் அல்லாது, ஏழை எளியோருக்கு உதவுவதிலும் இவர் புகழ்பெற்றார். இவர் துறவு மடங்களுக்கு அளித்த வழிகாட்டுதல்கள் துறவியரின் கூட்டு வாழ்க்கை, வழிபாட்டு, மன்றாட்டு மற்றும் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆதலால் இவர் கிழக்கத்திய கிறிஸ்தவ துறவறத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவரைப் புனிதர் என ஏற்கின்றன. பாசில், “நசியான்சஸ் கிரகோரி” (Gregory of Nazianzus) மற்றும் “நிஸ்ஸா கிரகோரி” (Gregory of Nyssa) ஆகியோர் கூட்டாக “கப்போடோசிய தந்தையர்கள்” (Cappadocian Fathers) என அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் நசியான்சஸ் கிரகோரி, “ஜான் கிறிசோஸ்தோம்” (John Chrysostom) ஆகியோருடன் சேர்த்து இவரையும் “மூன்று புனித தலைவர்கள்” (Great Hierarch) என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றது.
சில வேளைகளில், “பரலோக இரகசியங்களை வெளிப்படுத்துபவர்” (Revealer of Heavenly Mysteries) எனப் பொருள்படும் அடைமொழியிட்டு இவரை அழைக்கப்படுகின்றார்.
கி.பி. சுமார் 330ம் ஆண்டு, துருக்கியின் (Turkey) பிராந்தியமான “கப்படோசியா” (Cappadocia) நகரில் செல்வந்தர்களின் குடும்பமொன்றில் பிறந்த பாசிலின் தந்தை, “மூத்த பாசில்” (Basil the Elder) என்று அறியப்படுகிறார். “எம்மெலியா” (Emmelia of Caesarea) இவரது தாயார் ஆவார். இவரது பெற்றோர் மிகவும் பக்தியானவர்கள் ஆவர். இவரது தாய்வழி தாத்தா, ரோமப்பேரரசர் முதலாம் “கான்ஸ்டன்டைன்” (Constantine I) காலத்துக்கு முன்னே கிறிஸ்தவ மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். பாசில் மற்றும் அவரது சகோதர சகோதரியர் நால்வரையும் இவர்களது தாய்வழி பாட்டி “மேக்ரினா” (Macrina) வளர்த்தார்.
பாசில் கப்படோசியாவின் “செசேரா மஸாகா” (Caesarea Mazaca) நகரில் கல்வி கற்றார். இவர் கல்வி கற்கும் காலத்திலேயே, “நசியான்சாஸ் நகர புனிதர் கிரகொரியை” (Gregory of Nazianzus) சந்தித்தார். இவர்களிருவரும் வாழ்நாள் நண்பர்களாயினர். மேல்படிப்புக்காக “கான்ஸ்டண்டினோபில்” (Constantinople) சென்ற நண்பர்களிருவரும், “ஏதேன்ஸ்” (Athens) நகரில் ஆறு வருடங்கள் தங்கியிருந்து கல்வி கற்றனர்.
கி.பி. 356ம் ஆண்டு ஏதேன்ஸ் நகரை விட்டு கிளம்பிய பாசில், சிரியா (Syria) மற்றும் எகிப்து (Egypt) நாடுகளில் பயணித்தார். பின்னர் செசேரா திரும்பிய இவர், வழக்குரைஞராக பணியாற்றியபடி சொல்லாட்சி மற்றும் அணியிலக்கணம் கற்பித்தார். ஆயரும் துறவியுமான “யூஸ்டாதியஸ் செபாஸ்ட்” (Eustathius of Sebaste) என்பவரை சந்தித்தபின் பாசில் வாழ்க்கை தீவிரமாக மாறியது. சட்டம் மற்றும் கற்பிக்கும் பணியை விட்ட பாசில், ஆன்மீக வாழ்க்கையில் நுழைந்தார். பாலஸ்தீனம் (Palestine), எகிப்து (Egypt), சிரியா (Syria) மற்றும் “மெசபடோமியா” (Mesopotamia) ஆகிய நாடுகளில் பயணித்து துறவறம் கற்றார்.
கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் எனக் கருதப்படும் இவர், தமது இறுதி காலத்தில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கி.பி. 379ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அல்லது இரண்டாம் நாள் இவர் மரித்தார்.