47 கிறிஸ்து அரசர் ஆலயம், கானாவூர்


கிறிஸ்து அரசர் ஆலயம்.

இடம் : கானாவூர்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.

நிலை : பங்கு தளம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

பங்குத்தந்தை (20018): அருட்பணி சைமன்.

திருவிழா : நவம்பர் மாதத்தில் பத்து நாட்கள்.

சிறு குறிப்பு :

1984 ம் ஆண்டு பங்கு தளமாக இவ்வாலயம் உயர்ந்தது.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் புனித அந்தோணியார் நவநாள் திருப்பலியும், வியாழக்கிழமை குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலியும், சனிக்கிழமை முதல் வாரத்தில் மட்டும் புனித மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலியும் மற்ற வாரங்களில் சகாய மாதா நவநாள் திருப்பலியும் நடைபெறும்.

வரலாறு :

கானாவூர் கிறிஸ்து அரசர் ஆலயமானது தொடக்கத்தில் மிடாலம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அருட்பணி. எப்ரேம் கோமஸ் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார். 

மக்களின் கல்வியறிவுக்காக ஒரு தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டு, இந்த பள்ளிக்கூடத்திலேயே ஆலய வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. 

19.04.1964 அன்று புதிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பின்னர் மங்கலகுன்று பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

14.11.1984 ல் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. 

14.11.1993 ல் ஆலய கட்டிடம் விரிவாக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. சூசை மிக்கேல் அவர்கள் பணியாற்றினார்.