என்றும் கன்னி மரியா – கி.பி 553

முக்கால கன்னி அல்லது என்றும் கன்னி என்பது இயேசுவின் தாயான கன்னி மரியாவின் சிறப்பு பெயர்களுள் ஒன்றாகும். "தூய ஆவியின் வல்லமையால் இறை மகனை தம் வயிற்றில் சுமந்த மரியா, இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் கடவுளின் அருளால் கன்னிமை குன்றாமல் பாதுகாக்கப்பட்டார்" என்ற நம்பிக்கையை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.

விவிலியச் சான்று

இயேசுவின் பிறப்பு பற்றி எடுத்துரைக்கும் நற்செய்தியாளர் லூக்கா, இயேசு கிறித்துவை கருத்தாங்கும் முன் மரியா கன்னியாகவே இருந்தார் என்பதை குறிப்பிடுகிறார்: 'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா'

இதே கருத்தையே மத்தேயு நற்செய்தியும் உறுதி செய்கிறது: 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் மேலும், 'மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' என்று குறிப்பிடுவதன் மூலம் இயேசுவைக் கருத்தாங்கிய பொழுதும் மரியா கன்னியாகவே இருந்தார் என்பதை நற்செய்தியாளர் வலியுறுத்துகிறார்.

இதே கருத்தையே மத்தேயு நற்செய்தியும் உறுதி செய்கிறது: 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் மேலும், 'மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' என்று குறிப்பிடுவதன் மூலம் இயேசுவைக் கருத்தாங்கிய பொழுதும் மரியா கன்னியாகவே இருந்தார் என்பதை நற்செய்தியாளர் வலியுறுத்துகிறார்.

வரலாற்று சான்று

விவிலிய சான்றுகளின் அடிப்படையில், "இயேசு அற்புதமான விதத்தில், மரியாவின் கன்னிமை சிதைவுபடாமல் பிறந்தார்" என அலக்சாந்திரியா புனித கிளெமெந்து (150-215) குறிப்பிடுகிறார். இவரது வார்த்தைகள் மரியாவின் பழுதற்ற கன்னிமையைப் பறைசாற்றுகின்றன.

"இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் மரியாவின் கன்னிமையில் எந்த பழுதும் ஏற்படவில்லை" என திருச்சபைத் தந்தையர் பறைசாற்றினர்.

"மரியாவின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை" என கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரான ஓரிஜன் கூறுகிறார். இந்தக் கூற்று, கன்னி மரியா முப்பொழுதும் கன்னியாகத் திகழ்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

விசுவாசக் கோட்பாடு

இவற்றின் அடிப்படையில் கி.பி.553 நடைபெற்ற இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கத்தில், "மரியா இறைவனின் தாய், எப்பொழுதும் கன்னி" என்று விசுவாச அறிக்கையிடப்பட்டது. 649ஆம் ஆண்டு கூடிய லாத்தரன் சங்கமும், "கன்னியான மரியா முக்காலத்து பெண்மணி" என்று பறைசாற்றியது. இவ்வாறு மரியா முக்காலத்திலும் கன்னியாக இருக்கிறார் என்ற நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது.

"தூய கன்னி 'இறைவனின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார். அன்னையும் கன்னியும் என்று சரியாக அழைக்கப் பெறுகின்ற திருச்சபையின் மறைபொருளிலே தூய கன்னி மரியா கன்னிமைக்கும் தாய்மைக்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக முன் நின்றார். ஏனெனில், கணவரையே அறியாத அவர் தூய ஆவி நிழலிடத் தன் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்" என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அறிக்கையிடுகிறது.

விழாக்கள்

மரியாவின் கன்னித் தாய்மையை சிறப்பிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையில் கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழா புத்தாண்டு முதல் நாளில் சிறப்பிக்கப்படுகிறது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் அக்டோபர் 1ந்தேதி கொண்டாடப்படும் எப்பொழுதும் கன்னியான இறையன்னையின் பாதுகாவல் விழாவும் இதே கருத்தை நினைவூட்டுகிறது.

ஆதாரங்கள்

↑ லூக்கா 1:26,27

↑ மத்தேயு 1:18

↑ மத்தேயு 1:25

↑ மத்தேயு 1:23

இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.

↑ மத்தேயு 1:22

↑ லூக்கா 1:43

↑ திருச்சபை எண். 53

வானவர் தூது சொன்னதும் கன்னிமரியா தன் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்றார்; வாழ்வை உலகிற்கு அளித்தார். எனவே, அவர் உண்மையாகவே கடவுளும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப் பெற்றுப் போற்றப் பெறுகிறார். இந்த மேன்மையான அருள்கொடையினால் வானகத்திலும் வையத்திலுமுள்ள மற்ற எல்லாப் படைப்புகளையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார்

↑ திருச்சபை எண். 63