தூய தேவமாதா ஆலயம்
இடம் : கிள்ளியூர்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : தக்கலை (சீரோ மலபார்)
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 110
அன்பியங்கள்(உறவியம்) : 6
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்தந்தை ஜோசப் சந்தோஷ்.
திருவிழா : செப்டம்பர் 8ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
சிறு குறிப்பு :
19-05-1979 அன்று அருட்தந்தையர்கள் ஐசக் கொல்லப்பள்ளி மற்றும் மாத்யூ வாக்கேல் ஆகியோரால் ஓலைக்குடில் அமைத்து திருப்பலி நிறைவேற்றப் பட்டு வந்தது. பின்னர் 18-12-1997 ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு 28-04-2001 ல் தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் முன்னிலையில், சங்ஙனாசேரி உயர் மறை மாவட்ட பேராயர் மார் ஜோசப் பௌவத்தில் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலயப் பணிகளை அருட்தந்தை பிலிப் தையில் அவர்கள் பங்கு மக்களின் ஒத்துழைப்போடு நிறைவு செய்தார்.
தற்போது, அருட்தந்தை சிரியக் மாளியேக்கல் அவர்கள் அதிதூயகம் (பலிபீடம்) அமைக்க பொருளுதவி செய்ததுடன் பங்கு மக்களின் நன்கொடைகளாலும் ஆலய உட்புறமும் புதுப்பிக்கப் பட்டு தக்கலை மறை ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் SDB அவர்களால் தேவமாதாவின் விண்ணேற்பு தினமாகிய 15-08-2018 அன்று அர்ச்சிக்கப் பட்டது. இப் பணிகளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்கள் பங்கு மக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செய்து முடித்தார்.
ஆலயத்தின் முன்புறம் உள்ள குருசடியில் தினமும் மாலை வேளையில் ஜெபமாலை நடைபெறுகின்றது. இதில் பல்வேறு மக்களும் கலந்து கொண்டு ஜெபமாலை சொல்லி ஜெபித்து இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
இவ் ஆலயமானது புதுக்கடை - கருங்கல் பிரதான சாலையில் கிள்ளியூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே இருக்கின்றது. (பி.கு : கிள்ளியூர் தமிழகத்தின் 234 வதும், கடைசி சட்டமன்றத் தொகுதியும் ஆகும்)