மாதாகுளம் புனித ஆரோக்கிய மாதா ஆலயம்
இடம் : வேளாங்கண்ணி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
திருத்தல அதிபர் : பேரருட்பணி பிரபாகரன் அடிகளார்.
இணை அதிபர் பங்குத்தந்தை : அருட்பணி சூசை மாணிக்கம்.
திருப்பலி : எல்லா சனிக்கிழமைகளிலும் காலை 07.00 மணிக்கு.
வரலாறு :
பால் விற்ற இடையர் குல சிறுவன்:
மரியன்னை, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார்.
வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது.
அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார்.
அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான்.
பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது.
இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர்.
அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர்.
பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு மரியன்னையிடம் வேண்டிக்கொண்டனர்.
இவ்விடத்தில் அழகிய ஆலயமும் மாதாகுளமும் காணப்படுகின்றது.