கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 9 /25 ***


“ இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் “

               லூக்காஸ் 1: 38

இந்த வார்த்தையை மீண்டும், மீண்டும் வாசிக்கும்போது அன்னையின் மான்பு விளங்கும். இந்த வார்த்தைகளால் இறைவனையே கட்டிபோட்டுவிட்டாள். நான் ஆண்டருடைய பிள்ளை என்று கூட சொல்லவில்லை. நான் ஆண்டவருடைய அடிமை என்கிறாள். சற்று முன் தான் வானதூதர்  “ அருள் நிறைந்த மரியே என்றும் ஆண்டவருக்கே தாயாக போகிறீர் என்று கேட்டும் கூட “ இதோ ஆண்டவருடைய அடிமை “ என்று தன்னையே தாழ்த்துவதுமட்டுல்ல.. ஆண்டவருடைய திட்டத்துக்குக்காக என்னை அடிமை போல் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் என்னையே கடவுளின் திட்டத்துக்காக அர்ப்பணித்துவிட்டேன். என்னை ஒரு கருவி போல கடவுள் பயன்படுத்திக்கொள்ளலாம்..

“ என்னை உமது கருவியாய் மாற்றிடு தேவா. உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா “ என்ற பாடல் போல்..

இப்போது ஆண்டவர் இயேசுவும் தன்னையே அர்ப்பனித்தது நினைவுக்கு வருகிறது.

“ தந்தையே ! உமக்கு விருப்பமானால் இத் துன்பக்கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும் ஆயினும் என் விருப்பம் அன்று உம் விருப்பமே  நிறைவேறட்டும் “

           லூக்காஸ் 22: 44 

என் பிள்ளைகளுக்காக, என் மக்களுக்காக அவர்கள் பாவங்களுக்காக என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதைத்து, என்னை உடைத்து அவர்களிக்காக பலியாகிறேன். என் ரத்தத்தை சிந்துகிறேன் உயிரையும் தருகிறேன். ஆனால் எனது ஜனம் பாவத்திலிருந்து மீட்பு பெறவேண்டும். மீண்டும் பாவத்தில் விழக்கூடாது.

கடவுளின் திட்டத்திற்காக தன்னையே அடிமையாகத்தரும் அன்னையும், கடவுளின் திட்டத்திற்காக தன்னை வதைப்போரிடம் கையளிக்கும் அவள் மகன் ஆண்டவராகிய இயேசுவும் நமக்கு எவ்வளவு பெறிய உதாரணங்கள்.

“ அடப்போங்கய்யா.. என்னைப் பற்றி சிந்திக்கவே எனக்கு நேரமில்லை. இதில் கடவுளைப் பற்றி சிந்திக்க வேண்டும் அதிலும் கடவுளின் திட்டத்தை பற்றி சிந்திக்க வேண்டும். நான் என்ன புனிதனா ?

இல்லை. நீங்கள் மனிதன். புனிதராகும் தூரம் கூட தொலைவில் இல்லை. அது இருக்கட்டும். கடவுளின் திட்டத்தை எப்படி அறிந்து கொள்வது ரொம்ம சுலபம்.

மனது கடினமாக இருக்க கூடாது. எளிதாக இருக்ககூடாது. மனது வெயிட்டா  இருக்க கூடாது லைட்டா இருக்கனும்.

மனசு லேசா இருக்க மனதில் உள்ள பாவங்கள் அகல வேண்டும். சொந்த விருப்பங்கள் குறைந்து கடவுளின் விருப்பங்கள் என்ன என்ற ஆர்வம் வரவேண்டும்.

 மெல்ல ஆண்டவரிடம் பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நம்மை ஆண்டவர் முன் தாழ்த்த வேண்டும். மீண்டும் மீண்டும் அவரிடம் தொடந்து பேசி " எங்கிட்ட உங்களுக்கு எது பிடிக்கவில்லை. எது புடிச்சிருக்கு. உங்களுக்கு புடிச்ச விசயங்களை நான் செய்ய எது எனக்கு தடையாய் இருக்கிறது?

ஜெபம் : அன்பான இயேசுவே ! கடவுளின் திட்டத்திற்காக தன்னையே அடிமையாக கையளித்த உம் தாயின் முன் மாதிரியையும், கடவுளின் திட்டத்திற்காக தன் இன்னுடலை கையளித்த உம்முடைய முன்மாதிரியையும் பின் பற்றி எங்களை நாங்கள் தூய்மைபடுத்தி “ என்னில் உம்முடைய திட்டம் என்ன “ என்ற ரகசியத்தை அறிந்து கொள்ளவும், குறைந்த பட்சம் பாவமில்லாமல் வாழவும், எனக்காகவும், பிறருக்காகவும் ஜெபிக்கவும், உம் பிறப்பு விழாவிற்கு என்னையே தயாரிக்கவும் வரம் தாரும்