புனித ஜெபமாலை அன்னை ஆலயம்
இடம் : கருமத்தாம்பட்டி
மாவட்டம் : கோயம்பத்தூர்
மறை மாவட்டம் : கோயம்பத்தூர்
ஆயர் : மேதகு தாமஸ் அக்குயினாஸ் லெப்போன்ஸ்
ரெக்டர் : அருட்பணி R. D ஜெரோம்
ஆன்மீககுரு : அருட்பணி ஜான் ஜோசப்
பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய ராஜ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி லாரன்ஸ்.
நிலை : திருத்தலம்
கிளைகள் : இல்லை
குடும்பங்கள் : 700
அன்பியங்கள் : 25
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணி மற்றும் மாலை 05.30 மணி.
திருவிழா : அக்டோபர் மாதத்தில்.
வரலாறு :
கோவை கருமத்தம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ' புனித ஜெபமாலை அன்னை ஆலயம் '.
இந்த ஆலயத்திற்கு அனைத்து மத பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் .
வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் இருந்து தான் 1640 ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷினரி தொடங்கியது என்பது குறிப்பிட தக்கது .
புனித ஜான் டி பிரிட்டோ 1671 ல் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
1680 ல் மைசூர் ராஜாவின் படையால் 1680 ல் இந்த ஆலயம் அழிக்கப்பட்டது.
தொடர் ஜெபமாலையால் மீண்டும் ஆலயம் கட்டப்பட்டது .
திப்பு சுல்தான் காலத்தில் மீண்டும் ஆலயம் அழிக்கப்பட்டது.1803 ஆம் ஆண்டு அருட்தந்தை டுபாய்ஸ் ஆங்கிலேயர்களின் உதவியுடன் ஆலயத்தை கட்டி எழுப்பினார் .
1840 ல் அருட்தந்தை பக்கரியூ ஆலய மணி கோபுரம் கட்டி எழுப்பினார்.
கோவை மறை மாவட்டத்தின் பிறப்பிடம் இந்த ஆலயம். பேரருட்திரு பிரேசிலியாக் ஆண்டகை 1857 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் தான் திருநிலை படுத்தப்பட்டார்.
தொடர்ந்து பள்ளிகள்,குரு மடங்கள் என்று வளர்ச்சி அடைந்தது.
அருட்தந்தை சின்னயன், பல முனேற்றங்களை செய்துள்ளார். தொடர் ஜெபமாலை துவக்கி வைத்தார் .
கடந்த ஆண்டு 29-10-2017 அன்று ஆலயம் புதுப்பிக்கப் பட்டு அர்ச்சிக்கப் பட்டது . கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸ், ஆயர் .லாரன்ஸ் பையஸ், ஆயர்.சிங்கராயன் மற்றும் ஆயர் .அமல்ராஜ் இணைந்து ஆலயத்தை மந்திரித்து திறந்து வைத்தார்கள்.
ஆலயத்தின் ரெக்டர் அருட்தந்தை ஜெரோம் அவர்கள் "வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயம் விரைவில் பேராலயமாக உயர்த்த படும் .வத்திக்கானில் இருந்து போப் பிரான்சிஸ் 119 கேள்விகள் கேட்டுள்ளார் அன்னையின் புதுமைகள் உட்பட. தமிழ் நாட்டில் 5 பேராலயங்கள் உள்ளன . இந்த ஆலயம் பேராலயமாக உயர்த்தப் பட்டால் 6 வது பசிலிக்காவாக ( பேராலயம் ) உயரும். விரைவில் ஜெபமாலை அன்னை அந்த அருள் மழையைப் பொழிவார்" என்று கூறினார்.
இந்த அற்புத ஆலயம் விரைவில் பேராலயமாக உயரும் என்கிற நம்பிக்கை உறுதியாக உள்ளது.